இந்திய தொடரில் களமிறங்கும் மெக்ஸ்வெல், மார்ஷ்!

Australia tour of India 2023

120

இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான 16 பேர்கொண்ட அவுஸ்திரேலிய குழாத்தில் கிளேன் மெக்ஸ்வெல் மற்றும் மிச்சல் மார்ஷ் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

கிளேன் மெக்ஸ்வெல் மற்றும் மிச்சல் மார்ஷ் ஆகியோர் கணுக்கால் உபாதை காரணமாக அணியிலிருந்து வெளியேறியிருந்ததுடன், பிக் பேஷ் தொடரிலும் விளையாடியிருக்கவில்லை.

இந்தியாவிலிருந்து வெளியேறும் டேவிட் வோர்னர்!

கிளேன் மெக்ஸ்வெல் மற்றும் மிச்சல் மார்ஷ் அணிக்கு திரும்பியுள்ளதுடன், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உபாதைக்கு முகங்கொடுத்திருந்த டேவிட் வோர்னர் ஒருநாள் தொடருக்கான குழாத்துக்கு திரும்பியுள்ளார். டேவிட் வோர்னருடன் சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரர் அஷ்டன் ஆகரும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

உலகக்கிண்ணத்தொடர் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், குறித்த தொடருக்கான முக்கிய தயார்படுத்தலாக இந்திய அணிக்கு எதிரான தொடர் அமையவுள்ளதால் முழு பலத்துடனான அணியுடன் அவுஸ்திரேலிய அணி களமிறங்கவுள்ளது.

ரதெல்ல மைதானத்தில் பயிற்சிகளை ஆரம்பிக்கும் இலங்கை கிரிக்கெட் அணி!

பெட் கம்மின்ஸ் தலைமையில் களமிறங்கும் அவுஸ்திரேலிய குழாத்தில், ஸ்டீவ் ஸ்மித்,  மார்கஸ் ஸ்டொய்னிஸ், மிச்சல் ஸ்டார்க், அடம் ஷாம்பா மற்றும் கெமரூன் கிரீன் ஆகிய முன்னணி வீரர்களும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான தொடர் மார்ச் 17ம் திகதி ஆரம்பிக்கவுள்ளதுடன், மார்ச் 19 மற்றும் மார்ச் 22ம் திகதிகளில் அடுத்த இரண்டு போட்டிகளும் நடைபெறவுள்ளன.

அவுஸ்திரேலியா குழாம்

பெட் கம்மின்ஸ் (தலைவர்), டேவிட் வோர்னர், டிராவிஷ் ஹெட், மார்னஸ் லபுசெங்,  ஸ்டீவ் ஸ்மித், கிளென் மெக்ஸ்வெல், மிச்சல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, ஜொஷ் இங்லிஷ், மார்கஸ் ஸ்டொய்னிஸ், மிச்சல் ஸ்டார்க், ஜெய் ரிச்சட்சன், அடம் ஷாம்பா, கெமரூன் கிரீன், அஷ்டன் ஆகர், சீன் எபோட்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<