இலங்கையை இலகுவாக வென்ற இந்தியா

Under 20 SAFF Championship

218
SAFF

20 வயதின் கீழ் தெற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஒரு போட்டியில் இந்திய இளையோர் இலங்கை இளையோர் அணியை 4-0 என்ற கோல்கள் கணக்கில் இலகுவாக வெற்றி கொண்டனர்.

ஏற்கனவே இடம்பெற்ற தமது முதல் போட்டியில் பங்களாதேஷிடம் 1-0 எனவும், பின்னர் நேபாளத்திடம் 3-0 எனவும் இலங்கை தோல்வி கண்டிருந்தது. அதேபோன்று, இந்தியா தமது முதல் போட்டியில் 2-1 என பங்களாதேஷிடம் தோல்வி கண்டிருந்தது.

இந்நிலையில் இரு அணிகளும் தொடரில் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்வதற்காக வெள்ளிக்கிழமை (29) புவனேஷ்வரின் காலிங்க அரங்கில் களம் கண்டிருந்தன.

இலங்கை வீரர்கள் முன்னைய போட்டிகளை போன்றே இந்த போட்டியின் முதல் பாதியிலும் கோலுக்கான வாய்ப்புகளை எதிரணிக்கு கொடுக்கவில்லை.

இந்நிலையில் கோல்கள் இன்றி ஆரம்பமான இரண்டாம் பாதியில் இந்திய வீரர்கள் ஒரு பெனால்டி கோல் உட்பட நான்கு கோல்களை பெற்றனர்.

எனவே போட்டி நிறைவில் இலங்கை அணியில் எந்தவொரு கோலும் பெற முடியாமல் போக, 4-0 என இந்தியா இலகுவாக வெற்றிபெற்று தொடரில் தமது முதல் வெற்றியை பதிவு செய்தது.

முழு நேரம்: இந்தியா 4 – 0 இலங்கை  

இதுவரை இடம்பெற்ற மூன்று போட்டிகளிலும் தோல்விகண்டுள்ள இலங்கை வீரர்கள், தமது இறுதி லீக் போட்டியில் எதிர்வரும் 31ஆம் திகதி மாலைதீவுகள் அணியை எதிர்கொள்ளவுள்ளனர்.

இந்தியா தமது அடுத்த போட்டியில் எதிர்வரும் 31ஆம் திகதி நேபாளம் அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<