தென்னாபிரிக்க கிரிக்கெட்டின் புதிய பணிப்பாளராக கிரேம் ஸ்மித்

81

தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரரான 39 வயதான கிரேம் ஸ்மித் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் புதிய கிரிக்கெட் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் பணிப்பாளராக எதிர்வரும் 2022ம் ஆண்டுவரை இரண்டு வருட ஒப்பந்தத்தில் இவர் இணைக்கப்பட்டுள்ளதாக தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் பயிற்சிகளுக்கான ‘Coach Education App’

கொரோனா வைரஸ் காரணமாக வீடுகளுக்குள் முடங்கிப்போயுள்ள ………

இவரின் ஒப்பந்தம் குறித்து தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெக்கஸ் போல் குறிப்பிடுகையில், “தென்னாபிரிக்க அணியின் இடைக்கால தலைவராக ஆறு மாதங்களுக்கு செயற்பட்ட கிரேம் ஸ்மித்திடம் ஆற்றல், நிபுணத்துவம், கடின உழைப்பு நெறிமுறை மற்றும் சிறப்பியல்புகள் என அனைத்தும் காணப்பபட்டது.

அதேநேரம், அணியில் மிகப்பெரிதாக பிரதிபலிக்க வேண்டிய விடயங்கள் செய்ய வேண்டியுள்ளது. நிச்சயமாக கிரேம் ஸ்மித் தன்னுடைய ஆற்றலைக்கொண்டு அணியை எழுச்சி பெருவதற்கான தொழிற்பாடுகளை மேற்கொள்வார்” என்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “கிரேம் ஸ்மித் சில மூலோபாய திட்டங்களை வகுத்துள்ளார். அதில், தென்னாபிரிக்க அணியின் தலைமை தேர்வாளராக லிண்டா ஷொண்டி நியமிக்கப்பட்டமை, தென்னாபிரிக்க ஏ அணியை அஷ்வெல் ப்ரின்ஸிடம் ஒப்படைத்தமை மற்றும் மலிபொங்வெ மகேடா தென்னாபிரிக்கா U19 அணியின் ஆலோசகராக இணைக்கப்பட்டுள்ளமைக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன” என சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில், கிரேம் ஸ்மித் தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

“இந்த பதவியானது எதிர்காலம் தொடர்பில் சரியான திட்டங்களை அமைப்பதற்கான பாதையை இலகுவாக்கியுள்ளது. ஜெக்கஸ் போல் குறிப்பிட்டது போன்று கிரிக்கெட் சபையில் பல வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளவுள்ளன.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியை பொருத்தவரை, தேசிய ரீதியில் மாத்திரமின்றி, உள்ளூர் மட்டங்களையும் சரிசெய்ய வேண்டும். அபிவிருத்திக்கான திட்டங்களை வகுக்க வேண்டும். அதேநேரம், தென்னாபிரிக்க கிரிக்கெட்டை மீண்டும் அதே நிலைக்கு கொண்டுவருவதற்காக கடினமாக உழைப்பேன்” என்றார்.

கிரேம் ஸ்மித் தென்னாபிரிக்க அணிக்காக 117 டெஸ்ட் போட்டிகள், 197 ஒருநாள் போட்டிகள் மற்றும் 33 T20I போட்டிகளில் விளையாடி 17 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 >> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<