குண்டுப்பொதி பிரச்சினை காணரமாக தாமதமாகிய கிரிக்கெட் போட்டி

6613
© GETTY IMAGES

குண்டுப்பொதி ஒன்று இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டதனை அடுத்து, கனடாவில் இடம்பெற்றுவரும் இந்த பருவகாலத்திற்கான குளோபல் டி-20 லீக்கின் வின்னிபேக் ஹவ்க்ஸ் மற்றும் மொன்ட்ரியல் டைகர்ஸ் அணிகள் இடையிலான போட்டி கடந்த வெள்ளிக்கிழமை (26) தாமதமாக நடைபெற்றுள்ளது.  

சாதனைகளின் சொந்தக்காரர் லசித் மாலிங்க

இலங்கை கிரிக்கெட் இரசிகர்கள் மட்டுமல்லாது……….

இதனால் குறித்த போட்டி 90 நிமிடங்கள் வரையில் தாமதித்திருந்ததோடு, அணிக்கு 12 ஓவர்களை மட்டுமே வீச முடியுமாகவும் இருந்தது. 

குளோபல் T20 லீக்கின் ஏற்பாட்டளர்கள் இப்போட்டி தாமதத்திற்கு சில தொழில்நுட்ப கோளாறுகளே காரணம் என தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கின் மூலம் கூறியிருந்தனர். எனினும், குளோபல் T20 லீக் கிரிக்கெட் தொடரை நேரடி ஒளிபரப்பு செய்யும் நிறுவனம், தமது ஒளிபரப்பில் போட்டியின் தாமதத்திற்கு பாதுகாப்பு விடயங்களே காரணம் எனத் தெரிவித்திருந்தது. இதேநேரம், குறித்த போட்டியினை பார்வையிட வந்த இரசிகர்களும் பொலிஸ் உத்தியோகத்தர்களினால் மைதானத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட பின்னர் பார்வையாளர்கள், வரிசைகளில் நிற்கும் புகைப்படங்களினை தங்களது டுவிட்டர் கணக்குகளில் பதிவிட்டிருந்தனர். 

அதேவேளை, வெளிநாட்டு கிரிக்கெட் செய்தி இணையதளமான ESPNCricinfo குறித்த போட்டியில் விளையாடும் வீரர்களை தொடர்பு கொண்ட வேளையில், சந்தேகத்திற்கு இடமான பொதியொன்று இருப்பதன் காரணமாக தங்களை குறித்த போட்டி இடம்பெற்ற மைதானத்திற்குள் அனுமதிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தனர். பின்னர், மைதானம் மூடப்பட்டு மோப்ப நாய்களின் உதவியோடு மைதானத்தில் பிரச்சினைகள் ஏதும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. 

அவிஷ்க பெர்னாந்துவின் அதிரடியுடன் ஒருநாள் தொடர் இலங்கை வசம்

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் …….

இறுதியில் நிலைமைகள் அனைத்தும் சரியான பின்னர் வீரர்கள் அனைவரும் மைதானத்தில் விளையாட அனுமதிக்கப்பட்டதோடு, போட்டியும் ஓவர்கள் குறைக்கப்பட்ட நிலையில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

இப்போட்டியின் போது தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக மாத்திரமே போட்டி தாமதமாகியது எனக்கூறிப்பிட்ட போதிலும், மேலதிக விபரங்கள் எதனையும் வெளிப்படுத்தியிருக்கவில்லை.

கடைசியில் இந்தப் போட்டியில் மொன்ட்ரீயல் டைகர்ஸ் அணி, 24 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தது. இந்த வெற்றிக்கு, சுனீல் நரைன் 30 பந்துகளில் 59 ஓட்டங்களை பெற்று உதவியிருந்தார். 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<