2019 ஆசிய கிண்ணத் தொடரில் அணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

542
AFC web

புதிய கிண்ணம் மற்றும் அதிக அணிகளுடன் 2019 ஆசிய கிண்ண கால்பந்து தொடரில் பங்கேற்கும் அணிகளை குழு நிலைப்படுத்தும் குலுக்கல் நிகழ்வு ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்றது. இதில் பலம் மிக்க ஜோர்தான் அணி இடம்பெற்றிருக்கும் B குழுவில் நடப்புச் சம்பியன் அவுஸ்திரேலியா இணைந்துள்ளது.

ஆசிய கால்பந்து சம்மேளனத்தினால் நடத்தப்படும் 17ஆவது ஆசிய கிண்ண கால்பந்து போட்டித் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 5ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில் முக்கிய அம்சமாக, போட்டியிடும் அணிகளின் எண்ணிக்கை 16இல் இருந்து முதல் முறையாக 24ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சாப் கிண்ணத் தொடரில் இந்தியா மற்றும் மாலைதீவுகளுடன் மோதவுள்ள இலங்கை

இலங்கை கால்பந்து அணியும் பங்கேற்ற கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற தகுதிகாண் சுற்றுக்கு பின்னர், ஆசிய கிண்ணத்தில் விளையாடவிருக்கும் 24 அணிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து இந்த அணிகளை குழுநிலைப்படுத்தும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை இரவு டுபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான பேர்ஜ் கலிபாவில் இடம்பெற்றது.  

இதில், தொடரில் பங்கேற்கும் 24 அணிகளும் தலா 4 அணிகள் கொண்ட ஆறு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. குழுநிலை போட்டிகள் முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதலிரு இடங்களை பெறும் அணிகள் மற்றும் சிறந்த நான்கு அணிகள், ’16 அணிகள்சுற்றுக்கு தகுதி பெறும். இதில் வெற்றிபெறும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறவுள்ளன.

2015 ஆசிய கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் தென் கொரியாவை வீழ்த்தி கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய அணி B குழுவில் இடம்பெற்றுள்ளதோடு இந்த குழுவில் சிரியா, ஜோர்தான் மற்றும் பலஸ்தீன் அணிகள் இடம்பெற்றுள்ளன.

அவுஸ்திரேலியா மற்றும் ஜோர்தான் அணிகள் இதற்கு முன்னர் நான்கு முறை சந்தித்துள்ளன. உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளாக இடம்பெற்ற இந்த ஆட்டங்களில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வென்றுள்ளன. யுத்தத்தால் சீரழிந்த சிரியா, ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கிண்ண போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்ட நிலையில் ஆசிய கிண்ணத்தில் தனது திறமையை வெளிக்காட்ட எதிர்பார்த்துள்ளது.

ரியெல் மெட்ரிட்டுடனான இறுதிப் போட்டிக்கு லிவர்பூல் தகுதி

இத்தாலியின் ரோமா…

இந்த தொடரை அதிகபட்சமாக நான்கு முறை வென்றிருக்கும் ஜப்பான் குழுநிலை போட்டியில் உஸ்பகிஸ்தான், ஓமான் மற்றும் துருக்மேனிஸ்தான் அணிகள் உள்ள F குழுவில் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் சம்பியன்களான ஈரான் மற்றும் ஈராக் D குழுவில் இடம்பெற்றுள்ளன. இந்த குழுவில் ஏனைய அணிகளாக வியட்னாம் மற்றும் யெமன் அணிகள் உள்ளன. மறுபுறம் அரசியல் மோதலில் சிக்கியுள்ள அண்டை நாடுகளான சவூதி அரேபியா மற்றும் கட்டார் E குழுவில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த குழுவில் வட கொரியா மற்றும் லெபனான் அணிகளும் உள்ளன.  

சவூதி அரேபியா ஆசிய கிண்ணத்தை மூன்று தடவைகள் கைப்பற்றியபோதும் அந்த அணி கடைசியாக கிண்ணத்தை வென்றது 1996 ஆம் ஆண்டிலாகும். அந்த தொடரும் ஐக்கிய அரபு இராச்சியத்திலேயே நடத்தப்பட்டமை குறிப்பிடத்தப்பது.

இந்த தொடர் விரிவாக்கப்பட்டிருக்கும் நிலையில் ஐந்து மில்லியன் டொலர் முதன்மை பரிசை வெல்ல 24 அணிகள் பலப்பரீட்சை நடத்தும். அத்துடன் புத்தம்புது கிண்ணத்தையும் வெல்ல இந்த அணிகள் போராடவுள்ளன. இந்த புதிய கிண்ணமும் வெள்ளிக்கிழமை நிகழ்வின்போதும் அறிமுகப்படுத்தப்பட்டது.   

இந்த புதிய கிண்ணம் 1956இல் முதல் ஆசிய கிண்ணத்தில் பயன்படுத்தப்பட்ட கிண்ணத்திற்கு பதிலாகவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

தொடரில் இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணி இதுவரை இல்லாத அதிக பணப்பரிசாக மூன்று மில்லியன் டொலர்களை வெல்லும். மறுபுறம் தொடரில் பங்கேற்கும் 24 அணிகளுக்கும் தலா 200,000 டொலர்கள் ஆசிய கால்பந்து சம்மேளனத்தால் வழங்கப்படும்.

2019 ஜனவரி 5ஆம் திகதி செயித் விளையாட்டு அரங்கில், போட்டியை நடத்தும் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பஹ்ரைன் அணிகளுக்கு இடையிலான A குழு போட்டியுடனேயே அடுத்த ஆசிய கிண்ண தொடர் ஆரம்பமாகவுள்ளது. A குழுவில் இடம்பெற்றிருக்கும் அடுத்த இரண்டு அணிகளும் இந்திய மற்றும் தாய்லாந்து ஆகும்.

ஆசிய கிண்ணத்திற்கு தகுதி பெறுவதற்கு 2015ஆம் ஆண்டு இறுதியில் நடந்த தகுதிகாண் போட்டியில் இலங்கை கால்பந்து அணியும் பங்கேற்றிருந்தது. பூட்டானுக்கு எதிராக நடைபெற்ற இரண்டு கட்ட தகுதிகாண் போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியை சந்தித்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

தோல்வியுறாத அணியாக லா லிகா பட்டத்தை வென்றது பார்சிலோனா

லியோனல் மெஸ்ஸியின்…


மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க