உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரருக்கு கொரோனா தொற்று

161

உலக டென்னிஸ் வீரர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நொவாக் ஜோகேவிச்சிற்கு கொவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

2021இல் எளிமையான ஒலிம்பிக் விளையாட்டு விழா

சேர்பிய நாட்டைச் சேர்ந்த 33 வயது நிரம்பிய ஜோகோவிச், கடந்த வாரம் குரோசியா நாட்டில் இடம்பெற்ற கண்காட்சி டென்னிஸ் தொடர் ஒன்றில் பங்கேற்றிருந்தார். இந்த தொடரில் பங்கேற்று நாடு திரும்பிய அவர் மருத்துவ பரிசோதனைகளுக்கு முகம்கொடுத்த நிலையிலையே வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

இதேவேளை, மருத்துவ பரிசோதனைகளுக்கு முகம்கொடுத்த ஜோகோவிச்சின் மனைவியான ஜெலேனாவும் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கின்றது கண்டறியப்பட்டுள்ளது. எனினும், ஜோகோவிச்சின் குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படவில்லை.  

ஜோகோவிச்சிற்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால் அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட காரணமாக இருந்ததாக கருதப்படும் டென்னிஸ் தொடரை ஏற்பாடு செய்தமைக்கு விமர்சனங்கள் எழுப்பபட்டு வருகின்றன. எனினும், ஜோகோவிச் இந்த தொடருக்கு ஆதரவு தரும் வகையில் கருத்து வெளியிட்டிருக்கின்றார். 

”இது (குறித்த டென்னிஸ் தொடர்) நன்கொடைத் திட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சேகரிக்கப்படும் பணம் அனைத்தும் தேவையுடையவர்களுக்கு போய்ச் சேருவதற்காகவே. இந்த விடயத்திற்காக அனைவரும் கடுமையான பிரதிபலிப்பு ஒன்றினை காட்டியிருப்பது எனக்கு நெகிழ்ச்சியான உணர்வைத் தோற்றுவிக்கின்றது.” எனக் குறிப்பிட்ட ஜோகோவிச் இந்த டென்னிஸ் தொடர் மூலம் வைரஸ் தொற்று ஏற்பட்ட ஏனையோர் தொடர்பில் கவலை கொள்வதாகத் தெரிவித்திருந்தார். 

உலகின் பணக்கார வீராங்கனையாக ஜப்பானின் நயோமி ஒசாகா சாதனை

ஜோகோவிச் தவிர குறித்த டென்னிஸ் தொடரில் பங்கேற்ற கிரிகோர் ட்மிட்ரி, போர்னா கோரிக் மற்றும் விக்டர் ட்ரொய்கி ஆகிய டென்னிஸ் வீரர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

இதுவரை மொத்தமாக 17 தடவைகள் கிரான்ட்ஸ்லாம் பட்டத்தினை வென்றிருக்கும் ஜோகோவிச், வைரஸ் தொற்றினை அடுத்து 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டிருப்பதோடு, இன்னும் 5 நாட்களில் அடுத்த பரிசோதனைக்கு முகம்கொடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

>>மேலும் விளையாட்டுச் செய்திகளை படிக்க<<