Home Tamil வனிந்துவின் போராட்டம் வீண் – முதல் போட்டி பங்களாதேஷ் வசம்

வனிந்துவின் போராட்டம் வீண் – முதல் போட்டி பங்களாதேஷ் வசம்

163
AFP

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி 33 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருப்பதுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் 1-0 என முன்னிலை பெற்றிருக்கின்றது.

திட்டமிட்டபடி இலங்கை – பங்களாதேஷ் தொடர் நடைபெறும்

ICC இன் ஒருநாள் சுபர் லீக்கினுள் உள்ளடங்குகின்ற இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று (23) டாக்காவின் மிர்பூரில் ஆரம்பமானது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணியின் தலைவர் தமிம் இக்பால் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தெரிவு செய்தார். இப்போட்டி மூலம் இலங்கை ஒருநாள் அணியின் 24ஆவது தலைவராக மாறும் வாய்ப்பினை குசல் ஜனித் பெரேரா பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை அணி – குசல் பெரேரா (தலைவர்), தனுஷ்க குணத்திலக்க, பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, தசுன் ஷானக்க, அஷேனட பண்டார, வனிந்து ஹஸரங்க, இசுரு உதான, லக்ஷான் சந்தகன், துஷ்மன்த சமீர 

பங்களாதேஷ் அணி – தமிம் இக்பால் (தலைவர்), லிடன் தாஸ், சகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மொஹமட் மிதுன், மஹமதுல்லா, அபிப் ஹொசைன், மெஹிதி ஹஸன், மொஹமட் சயிபுத்தீன், தஸ்கின் அஹமட், முஸ்தபிசுர் ரஹ்மான்

பின்னர் நாணய சுழற்சிற்கு அமைவாக போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி தொடக்கத்தில் சிறிய தடுமாற்றத்தினைக் காட்டிய போதும் அணித்தலைவர் தமிம் இக்பால், முஷ்பிகுர் ரஹீம் மற்றும் மஹமதுல்லா ஆகியோர் அரைச்சதங்களை பெற்றுக்கொடுத்தனர். 

இந்த வீரர்களின் அரைச்சத உதவிகளோடு பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 257 ஓட்டங்களைக் குவித்துக் கொண்டது. 

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பிரதானி காலீத் மஹ்மூத்திற்கு கொரோனா

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் தனது 40ஆவது அரைச்சதத்தினப் பூர்த்தி செய்த முஷ்பிகுர் ரஹீம், 87 பந்துகளில் 4 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 84 ஓட்டங்களை எடுக்க, தமிம் இக்பால் 54 ஓட்டங்களையும், மஹமதுல்லா 52 ஓட்டங்களையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதேநேரம், இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் தனன்ஞய டி சில்வா 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்க, தனுஷ்க குணத்திலக்க, லக்ஷான் சந்தகன் மற்றும் துஷ்மன்த சமீர ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர். 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 258 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய இலங்கை கிரிக்கெட் அணி தமது பதில் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்தது. 

Video – பயிற்சிப்போட்டியில் அசத்திய மெண்டிஸ், டிக்வெல்ல!

வெற்றி இலக்கிற்கான போராட்டத்தில் பங்களாதேஷ் அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் நெருக்கடியினை உருவாக்க, இலங்கை அணிக்கு  அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்து 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 224 ஓட்டங்களுடன் போட்டியில் தோல்வியினை தழுவ நேரிட்டது. 

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் முன்வரிசை வீரர்கள் அனைவரும் ஏமாற்றம் காட்டிய போதும், தனியொருவராக போராட்டம் காண்பித்த வனிந்து ஹஸரங்க 60 பந்துகளில் தன்னுடைய இரண்டாவது ஒருநாள் அரைச்சதத்துடன் 5 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 74 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். 

கொவிட்-19 காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஆசிய கிண்ணம்

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சு சார்பில், மெஹிதி ஹஸன் ஒருநாள் போட்டிகளில் அவர் பெற்றுக்கொண்ட 50ஆவது விக்கெட்டுடன் 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி அணியினது வெற்றியினை உறுதி செய்ய, முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுக்களுடனும், மொஹமட் சயிபுத்தீன் 2 விக்கெட்டுக்களுடனும் தமது தரப்பு வெற்றிக்கு கைகொடுத்திருந்தனர்.   

இலங்கை அணிக்கு இப்போட்டியின் தோல்வி மூலம் பங்களாதேஷ் மண்ணில் மோசமான ஆரம்பம் கிடைத்திருக்கும் நிலையில் இரு அணிகளும் மோதும் அடுத்த ஒருநாள் போட்டி செவ்வாய்க்கிழமை (23) நடைபெறவிருக்கின்றது.

போட்டியின் சுருக்கம்

A PHP Error was encountered

Severity: Warning

Message: Invalid argument supplied for foreach()

Filename: controllers/Embed.php

Line Number: 86

Backtrace:

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/controllers/Embed.php
Line: 86
Function: _error_handler

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/index.php
Line: 315
Function: require_once


A PHP Error was encountered

Severity: Warning

Message: Invalid argument supplied for foreach()

Filename: embed/match_result.php

Line Number: 115

Backtrace:

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/views/embed/match_result.php
Line: 115
Function: _error_handler

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/controllers/Embed.php
Line: 92
Function: view

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/index.php
Line: 315
Function: require_once



முடிவு – பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 34 ஓட்டங்களால் வெற்றி 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<