பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பிரதானி காலீத் மஹ்மூத்திற்கு கொரோனா

Sri Lanka Tour of Bangladesh - 2021

108
BCB Twitter

பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும், தற்போதைய தேசிய அணியின் பிரதானியுமான காலீத் மஹ்முத்திற்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

இதன்காரணமாக நாளை ஆரம்பமாகவுள்ள இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரில் பங்களாதேஷ் அணியுடன் அவர் இணைந்துகொள்ள மாட்டார் என அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது

அத்துடன், காலீத் மஹ்முத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது இலங்கைபங்களாதேஷ் ஒருநாள் தொடருக்கு பாதிப்பினை ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்ப்ட்டுள்ளது

பயிற்சிப் போட்டியில் திறமையை நிரூபித்த இலங்கை வீரர்கள்

49 வயதான காலீத் மஹ்முத், அண்மையில் நிறைவுக்கு வந்த இலங்கைக்கான டெஸ்ட் கிரிக்கெட் சுற்றுப்பயணத்தினை மேற்கொண்ட பங்களாதேஷ் அணியின் பிரதானியாகச் செயற்பட்டிருந்தார்;.

இந்த நிலையில், இலங்கையுடனான ஒருநாள் தொடரினை முன்னிட்டு பங்களாதேஷ் அணி வீரர்கள் கடந்த 18ஆம் திகதி முதல் பயோபபுள் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்துவிட்டனர்.

எனினும். காலீத் மஹ்முத் மாத்திரம் உடல்நலம் குறைவு காரணமாக பாதுகாப்பு வளையத்துக்குள் இடம்பெறாமல் வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்

Video – பங்களாதேஷுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி தொடர்பில் கூறும் குசல் பெரேரா!

இந்தநிலையில், முன்னதாக அவருக்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டு PCR பரிசோதனைகளிலும் கொரோனா தொற்றுறதியாகியிருக்கவில்லை.

பின்னர் அவருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது PCR பரிசோதனையில் இவ்வாறு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அவர் வீட்டில் சுயதனிமையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…