டிவிஷன் – III கிரிக்கெட்டில் காலிறுதி வாய்ப்பை இழந்த யாழ். இந்துக் கல்லூரி

96

ஹிரூஷ பியுமாலின் அபார துடுப்பாட்டம் மற்றும் ரெனுக் ஹெட்டியாரச்சியின் சகலதுறை ஆட்டம் என்பவற்றின் உதவியால் யாழ். இந்துக் கல்லூரிக்கு எதிராக நேற்று நிறைவுக்கு வந்த 19 வயதின் கீழ்ப்பட்ட டிவிஷன் – III பாடசாலைகள் இடையே நடைபெறும் இரண்டு நாட்கள் கிரிக்கெட் தொடரில், காலிறுதிக்கு முன்னைய சுற்றுக்காக நடைபெற்ற போட்டியொன்றில் ஆனந்த சாஸ்த்ராலய கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவுசெய்து காலிறுதிக்குத் தெரிவாகியது.

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்றுவரும் 2018/2019 பருவகாலத்திற்கான 19 வயதின் கீழ் பிரிவு மூன்றுக்கான (டிவிஷன் – III) பாடசாலைகளுக்கு இடையிலான 2 நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் மற்றுமொரு காலிறுதிக்கு முன்னைய சுற்றுப் போட்டி யாழ். இந்துக் கல்லூரி மற்றும் கோட்டே ஆனந்த சாஸ்த்ராலய கல்லூரிகளுக்கிடையில் நேற்று முன்தினம் (11) ஆரம்பமாகியது.

இந்து மைந்தர்களின் சமரில் கொழும்பு இந்துக் கல்லூரி வெற்றி

இந்து மைந்தர்களின் சமர் என அழைக்கப்படும், கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும்…

கொழும்பு றோயல் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய ஆனந்த சாஸ்த்ராலய கல்லூரி அணி, 9 விக்கெட்டுக்களுக்கு 328 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

அந்த அணி சார்பாக ஹிரூஷ பியுமால் 82 ஓட்டங்களையும், இசுரு அவிந்த 61 ஓட்டங்களையும் பெற்று வலுச்சேர்த்திருந்தனர்.

பந்துவீச்சில் கொழும்பு இந்துக் கல்லூரியின் எம் கோபிராம் 4 விக்கெட்டுக்களையும், பிருந்தாபன் மற்றும் கே. கோமைந்தன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த யாழ். இந்துக் கல்லூரி அணியினர், எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அவ்வணி சார்பாக எஸ். தனூஷன் 27 ஓட்டங்களையும், என். ஐங்கரன் 26 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் ஆனந்த சாஸ்த்ராலய கல்லூரியின் ரெனுக் ஹெட்டியாரச்சி 37 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து 162 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த ஆனந்த சாஸ்த்ராலய கல்லூரி அணி, ஹிரூஷ பியுமாலின் அரைச்சதத்தின் உதவியுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 239 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் டி. கஜானத் 55 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், கே. கோபிராம் 93 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதன்படி, 401 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த யாழ். இந்துக் கல்லூரி அணி, 4 விக்கெட்டுக்களை இழந்து 64 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், போட்டி சமநிலை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

ஆனந்த சாஸ்த்ராலய கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 328/9d (75.2) – ஹிரூஷ பியுமால் 82, இசுரு அவிந்த 61, அவிஷ்க டில்ஷான் 34, எஸ்.ஏ ஹஸீம் 33, ஹசித் ஹசிந்து 30, அபிலாஷ் தினகர 25, ரெனுக் ஹெட்டியாரச்சி 21, எம். கோபிராம் 4/112, பிருந்தாபன் 2/21, கே. கோமைந்தன் 2/42

யாழ். இந்துக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 166 (54.4) – எஸ். தனூஷன் 27, என். ஐங்கரன் 26*, கே. கோமைந்தன 25, எம். கோபிராம் 22, ரெனுக் ஹெட்டியாரச்சி 4/37, கவிந்து மிஹிரங்க 2/23, அவிஷ்க டில்ஷான் 2/28

ஆனந்த சாஸ்த்ராலய கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்)  – 239 (56) – துலன்ஞன பெரேரா 43, ஹிருஷ பியுமால் 52, தனஞ எதிரிசிங்க 25, ரெனுக் ஹெட்டியாரச்சி 22, இசுரு அவிந்த 22, டி. கஜானத் 4/55, எம். கோபிராம் 3/93

யாழ். இந்துக் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 63/4 (10) – கே. கோமைந்தன் 22, ரெனுக் ஹெட்டியாரச்சி 2/34, கவிந்து மிஹிரான் 2/29

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.

>>Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 68<<

கன்னங்கர மத்திய கல்லூரி, மத்துகம எதிர் புனித தோமியர் கல்லூரி, கோட்டே

மத்துகம பொது மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கன்னங்கர மத்திய கல்லூரி வீரர்கள் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

இதனையடுத்து தம்முடைய முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய புனித தோமியர் கல்லூரி வீரர்களுக்கு 164 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

20 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த கன்னங்கர கல்லூரி 216 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்த போது போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

கன்னங்கர மத்திய கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 184 (56.3) – லசிந்து ஷெஹான் 26, கவிந்து தெவ்மின 46, நிஷான் சமுதித்த 31, மலிந்து பெரேரா 4/22, மஞ்சுல மொரவக 2/21

புனித தோமியர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 164 (64.4) – ஆதித்ய சூரியபண்டார 54, மலிந்து பெரேரா 38, லசிந்து ஷெஹான் 5/58, நிஷான் சமுதித்த 3/59

கன்னங்கர மத்திய கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 216/8 (76) – லசிந்து ஷெஹான் 67*, நிஷாhன் சமுதித்த 48*, உஷான் மஹீபால 29, சச்சின்த வில்லியம்ஸ் 4/61

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.

சென். ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் எதிர் றோயல் கல்லூரி, கொழும்பு  

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையுடன் 19 வயதின் கீழ்ப்பட்ட டிவிஷன் – II பாடசாலைகள் இடையே நடைபெறும் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டிகள் நேற்று (12) நடைபெற்றன.

இதில் யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் 9 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்ற றோயல் கல்லூரி அணி அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.

றோயல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி அணி, 29.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 90 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அந்த அணி சார்பாக எந்தவொரு வீரரும் 20 ஓட்டங்களைத் தாண்டவில்லை.

சமனிலையுடன் முடிவுக்கு வந்த 113வது வடக்கின் பெரும் சமர்

யாழ்ப்பாணத்தின் முன்னணி பாடசாலைகளான யாழ். மத்திய கல்லூரி மற்றும் யாழ். சென்…

பந்துவீச்சில் றோயல் கல்லூரியின் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் மனுல பெரேரா 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பாடிய றோயல் கல்லூரி அணி, 13.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கினை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

சென். ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் – 90/10 (29.3) – மனுல பெரேரா 4/21, சதீஷ ராஜபக்ஷ 2/09

றோயல் கல்லூரி, கொழும்பு – 92/1 (13.4) – திதிர வீரசிங்க 29*, தெவிந்து சேனாரத்ன 27*

முடிவு – றோயல் கல்லூரி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு எதிர் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொறட்டுவை

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

இதன்படி, களமிறங்கிய மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணியினர் எதிரணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 129 ஓட்டங்களுக்கு சுருண்டது.

பதிலுக்கு துடுப்பாடிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி, 45.5 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களுக்கு 132 ஓட்டங்களைப் பெற்று 2 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

இதன்படி, தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டித் தொடரின் அரையிறுதிக்குத் தகுதிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி – 129 (40.1) – ரவிந்து பெரனாண்டோ 23, பசிந்து உஷெட்டி 21, சத்துர அநுராத 20, அஷான் பெர்னாண்டோ 20, சுவத் மெண்டிஸ் 4/10, நதுக்க பெர்னாண்டோ 2/29, வினூஜ ரன்புல் 2/33

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி – 132/8 (45.5) – கவிந்து டி மெல் 32*, தவிந்து அமரசிங்க 25, ரவிந்து பெர்னாண்டோ 2/17, பசிந்து உஷெட்டி 3/32

முடிவு – பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி 2 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்று அரையிறுதிக்குத் தகுதி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<