இலங்கை – இலங்கை லெஜண்ட்ஸ் இடையிலாக போட்டி வேண்டாம் – டில்ஷான்

483
Road Saftey T20 world series Twitter

இலங்கை தேசிய அணி மற்றும் இலங்கை லெஜண்ட்ஸ் அணிக்கும் இடையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள கண்காட்சி T20 கிரிக்கெட் போட்டியை தற்போது நடத்துவது பொருத்தமானதல்ல என இலங்கை லெஜண்ட்ஸ் அணியின் தலைவர் திலகரட்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.  

இலங்கை தேசிய அணி மற்றும் இலங்கை லெஜண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான கண்காட்சிப் போட்டியொன்று அடுத்த மாதம் 5ஆம் திகதி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் சபை கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தது.

இலங்கை தேசிய அணியுடன் மோதும் லெஜண்ட்ஸ் அணி ;  திகதி அறிவிப்பு

இந்த நிலையில், இலங்கை தேசிய அணி மற்றும் இலங்கை லெஜண்ட்ஸ் அணிக்கும் இடையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள கண்காட்சி T20 போட்டி தொடர்பில் ஹிரு தொலைக்காட்சிக்கு திலகரட்ன டில்ஷான் வழங்கிய செவ்வியில்

”எனது தலைமையிலான இலங்கை லெஜண்ட்ஸ் அணி மிகவும் நல்ல நிலையில் உள்ளது. எனவே, இலங்கை தேசிய அணி மற்றும் இலங்கை லெஜண்ட்ஸ் அணிக்கும் இடையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள கண்காட்சி T20 போட்டியில் ஒருவேளை நாங்கள் வெற்றியீட்டினால் அது இலங்கை தேசிய அணியில் விளையாடிய வீரர்களுக்கு மனதளவில் பாதிப்பினை கொடுக்கும்.  

எனவே, முன்னாள் வீரர்களாகிய நாங்கள் எதிர்வரும்க்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தயாராவகும் வகையில் இலங்கை தேசிய அணி வீரர்களுக்கு உதவி செய்வது தான் தற்போது எமது பிரதான பொறுப்பாக உள்ளது.

இலங்கைக்கு எதிரான முதற்கட்ட குழாத்தை அறிவித்த பங்களாதேஷ்

எனவே, தற்போதைய நிலையில், குறித்த போட்டியை நடத்துவது பொருத்தமானதல்ல என்றும், T20 உலகக் கிண்ணத்தின் பின்னர் அதனை நடத்துவது சிறந்தது என்பதே தமது எதிர்பார்ப்பாகும்” என்றும் திலகரட்ன டில்ஷான் குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே, லெஜண்ட்ஸ் தொடரின் போது உபாதைக்குள்ளாகிய திலகரட்ன டில்ஷான் தற்போது ஓய்வெடுத்து வரும் நிலையில், சுய தனிமைப்படுத்தலை முடித்துக்கொண்டு மீண்டும் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளார்.  

இதுஇவ்வாறிருக்க, இலங்கை தேசிய அணி வீரர்களுடன் நடைபெறவுள்ள கண்காட்சி T20 போட்டி குறித்து தமக்கு இதுவரையில் எவரும் அறியப்படுத்தவில்லை என இலங்கை லெஜண்ட்ஸ் அணித் தலைவர் திலகரட்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.

அவ்வாறானதொரு போட்டி நடைபெற உள்ளதாக ஊடகங்கள் வாயிலாக தாம் அறிந்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<