அடுத்த மாதம் ஓமானில் இடம்பெறவிருக்கும் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கான ஆடவர் ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பங்கெடுக்கும் இலங்கை குழாம் வெளியிடப்பட்டிருக்கின்றது.
>>பவான் ரத்நாயக்கவின் சதம் வீண்; இங்கிலாந்துக்கு முத்தரப்பு தொடரில் ஆறுதல் வெற்றி
அணிக்கு 50 ஓவர்களாக இடம்பெறும் இந்த இளையோர் ஆசியக் கிண்ணத் தொடர் நவம்பர் மாதம் 05ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரை ஓமானின் மஸ்கட் நகரில் இடம்பெறவிருக்கின்றது.
இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கெடுக்கவிருப்பதோடு இலங்கை குழு B இல் பங்களாதேஷ், மலேசியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.
இந்த தொடருக்கான இலங்கை குழாம் விரான் சாமுதித மூலம் வழிநடாத்தப்பட, தீவாளவியரீதியில் திறமையை வெளிப்படுத்திய முன்னணி இளம் கிரிக்கெட் வீர்ரகள் இணைக்கப்பட்டிருக்கின்றனர்.
இலங்கை குழாம்
விரான் சாமுதித்த (தலைவர்), செனுஜ வெக்குனகொட (பிரதி தலைவர்), ரெஹான் பீரிஸ், கித்ம விதானபத்திரன, கிம்ஹான் ரசஞ்சன, சனுல் வீரரட்ன, சனிரு சேனாரட்ன, லித்ம பெரேரா, விக்னேஸ்வரன் ஆகாஷ், செத்மிக செனவிரட்ன, கிம்ஹான் மெண்டிஸ், லதேந்திரா ஆகாஷ், ஹிமாரு தேஷான், ஸ்டெவோன் பீரிஸ், கௌஷிக குமாரசிங்க






















