ஷேன் வோர்னின் மதுபான ஆலையில் சானிட்டைசர் தயாரிப்பு

63
Shane Warne

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் ஷேன் வோர்னுக்கு சொந்தமான மதுபான ஆலையில் ‘708 ஜின்’ (SevenZeroEight gin) உற்பத்தியை அடியோடு நிறுத்திவிட்டு, மக்களுக்குப் பயன்தரும் வகையில் கை கழுவும் ‘சானிட்டைசர்’ (hand-sanitizer) தயாரிக்க உத்தரவிட்டுள்ளார்.  

கிரிக்கெட் மைதானத்தில் வித்தியாசமான அனுகுமுறைகளைக் கொண்ட வீரர்களில் ஒருவராக விளங்கிய ஷேன் வோர்னின் இந்த முன்மாதிரியான செயற்பாட்டுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த உயிர்க்கொல்லி வைரஸுக்கு பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸால் விளையாட்டுத் துறையும் பெரிய அளவில் பாதித்துள்ளது.

கொரோனா வைரஸ் எதிரொலி: டி20 உலகக் கிண்ணம் நடைபெறுமா?

கொரோனா வைரஸ் பாதிப்பினால் அவுஸ்திரேலியாவில்

இதுஇவ்வாறிருக்க, கொரோனா வைரஸ் அச்சுறுத்தலானது அவுஸ்திரேலியாவையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை 1286 பேர் இந்தத் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அவுஸ்திரேலியாவின் மிகப் பெரிய நகரங்களான சிட்னி மற்றும் மெல்பேர்ன் நகரங்களை முழுமையாக மூடிவிடுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது

இதேநேரம், அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஸன் கடந்த 19ஆம் திகதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கொரோனா வைரஸின் தற்போதைய நிலைமை குறித்து தெளிவுபடுத்தியதுடன், பல்வேறு திட்டங்களை மக்களுக்காக அறிவித்தார்.

இலங்கையர்களுக்கு, இலங்கை கிரிக்கெட் வீரர்களின் அறிவுரை

முழு இலங்கையினையும் கொரோனா வைரஸ் பீதி ஆட்கொண்டிருக்கும் நிலையில், இலங்கை அரசாங்கமும், இலங்கையின் சுகாதாரத்துறையும் இந்த வைரஸ் பரவுவதனை தடுக்க

இந்தப் பின்னணியில் அவுஸ்திரேலியாவின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ஷேன் வோர்ன், தனக்கு சொந்தமான மதுபான ஆலையில் ‘708 ஜின்உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, அந்நாட்டு மக்களுக்குப் பயன்தரும் வகையில் கை கழுவும்சானிட்டைசர்தயாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

இதன்மூலம், மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள 70 சதவீதமான வைத்தியசாலைகளுக்கு கை கழுவும் சானிட்டைசர்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதுதொடர்பில் தனது இன்ஸ்டகிராம் தளத்தில் ஷேன் வோர்ன் வெளியிட்ட பதிவில், தற்போதைய நிலை மிகவும் சவாலானது. இந்த தருணத்தில் தான் நாங்கள் எமது சுகாதாரப் பிரிவினருக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

ஏனெனில் அவர்களது கைகளில் தான் எமது உயிர்கள் உள்ளன. எனவே, எனது செவன்சீரோஎய்ட் நிறுவனமாகிய எம்மாலும் இந்த தொற்றுக்கு எதிராக சமூக வேலைதிட்டமொன்றை முன்னெடுக்க முடிந்தமையிட்டு மகிழ்ச்சிய அடைகிறோம்

கொரோனா வைரஸ் தொற்றலிருந்து தப்பிய பாகிஸ்தான் வீரர்கள்

பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் (PSL) பங்கேற்ற வீரர்கள்

அத்துடன், எம்மைப் போன்று மற்றைய நிறுவனங்களும் இவ்வாறான சமூக செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் என தான் எதிபார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

அவுஸ்திரேலியா அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை (708) வீழ்த்திய வீரராக வலம்வந்து கொண்டிருக்கின்ற ஷேன் வோர்ன் 2007ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்றார்.

அதன்பிறகு அவுஸ்திரேலியாவின் விருது வென்ற நிறுவனங்களில் ஒன்றான 708 நிறுவனத்தின் இணைப் பங்காளர்களில்் ஒருவராக செயற்பட்டு வருகின்ற அவர், பல்வேறு சமூகநல வேலைத்திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்

இறுதியாக, கடந்த ஜனவரி மாதம் அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி சேகரிக்கும் நோக்கில் தனது டெஸ்ட் தொப்பியை 584,0000 டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க