D.S. சேனநாயக கல்லூரிக்கு வலுச்சேர்த்த முதித்த லக்‌ஷான்

162

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட டிவிஷன் 1 பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் 6 போட்டிகள் இன்று நடைபெற்றன.

திரித்துவக் கல்லூரி, கண்டி எதிர் தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு

தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் இன்று காலை ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற திரிதுவக் கல்லூரி அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்து தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 187    ஓட்டங்களைப் பெற்றது.

புபுது பண்டார 38 ஓட்டங்களையும் அபிஷேக் ஆனந்த குமார 31 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் தர்ஸ்டன் கல்லூரியின் அயேஷ் ஹர்ஷன 4 விக்கெட்டுக்களையும் சந்தரு டயஸ் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

முக்கோண ஒரு நாள் தொடரிலிருந்து வெளியேறும் குசல் பெரேரா

பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் தர்ஸ்டன் கல்லூரி அணி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ஓட்டங்களை பெற்றுள்ளது. நிமேஷ் பெரேரா 39 ஓட்டங்களைப் பெற்றதுடன் பன்சிலு தேஷான் 31 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காது களத்தில் உள்ளார்.

போட்டியின் சுருக்கம்

திரித்துவக் கல்லூரி, கண்டி (முதலாவது இன்னிங்ஸ்) – 187 (51.5) – புபுது பண்டார 38, அபிஷேக் ஆனந்தகுமார 31, ஹசிந்த ஜயசூரிய 31, விமுக்தி நெதுமல் 27, அயேஷ் ஹர்ஷன 4/37, சந்தரு டயஸ் 3/55, ஜனுஷ்க பெர்னாண்டோ 2/22

தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 140/3 (45) – நிமேஷ் பெரேரா 39, இமேஷ் விரங்க 30, பன்சிலு தேஷான் 31*, கவிஷ்க சேனாதீர 2/37


புனித பெனடிக்ட்ஸ் கல்லூரி, கொழும்பு எதிர் D.S. சேனநாயக கல்லூரி, கொழும்பு

மத்தேகொட இராணுவப்படை மைதானத்தில் இன்று காலை ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற D.S. சேனநாயக கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை பெனடிக்ட்ஸ் கல்லூரி அணிக்கு வழங்கியது. இதன்படி களமிறங்கிய பெனடிக்ட்ஸ் கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 67 ஓட்டங்களைப் பெற்றது. இதில் கவீஷ ஜயதிலக 26 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்து வீச்சில் D.S. சேனநாயக்க கல்லூரியின் சச்சிந்த ஹெட்டிகே, முதித்த லக்ஷான் மற்றும் பசிந்து ஆதித்ய ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் D.S. சேனநாயக கல்லூரி அணி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 293 ஓட்டங்களைப் பெற்றது. இதில் முதித்த லக்ஷான் 127 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் பெனடிக்ட்ஸ் கல்லூரியின் மஹீஷ் தீக்ஷன 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

புனித பெனடிக்ட்ஸ் கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 67 (22) – கவீஷ ஜயதிலக 26, சச்சிந்த ஹெட்டிகே 3/12, முதித்த லக்ஷான் 3/16, பசிந்து ஆதித்ய 3/29

D.S. சேனநாயக கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 293/9 (63) – முதித்த லக்ஷான் 127, பசிந்து ஆதித்ய 39, தசுன் திமாஷ 36, மஹீஷ் தீக்ஷன 5/92, இமேஷ் பெர்னாண்டோ 2/32


புனித பேதுரு கல்லூரி, கொழும்பு எதிர் தர்மராஜ கல்லூரி, கண்டி

புனித பேதுரு கல்லூரி மைதானத்தில் இன்று காலை ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தர்மராஜ கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை புனித பேதுரு கல்லூரி அணிக்கு வழங்கியது. இதன்படி துடுப்பாடக் களமிறங்கிய புனித பேதுரு கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 308 ஓட்டங்களைப் பெற்றது. புனித பேதுரு கல்லூரி சார்பாக சாலித பெர்னாண்டோ 75 ஓட்டங்களையும் சுலக்ஷன பெர்னாண்டோ 57 ஓட்டங்களையும் பெற்றனர்.

திசரவை புகழ்ந்த சந்திமாலுக்கு வெற்றியில் முழுத் திருப்தியில்லை

பந்து வீச்சில் தர்மராஜ கல்லூரி அணியின் துஷான் ஹேரத் 4 விக்கெட்டுக்களையும் யசித் சமரரத்ன மற்றும் உபேந்திர வர்ணகுலசூரிய ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் தர்மராஜ கல்லூரி அணி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 28 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியின் சுருக்கம்

புனித பேதுரு கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 308/7 (77.1) – சாலித பெர்னாண்டோ 75, சுலக்ஷன பெர்னாண்டோ 57, பிரபாஷன ஹேரத் 51, ஷனோன் பெர்னாண்டோ 48, துஷான் ஹேரத் 4/43, யசித் சமரரத்ன 3/75, உபேந்திர வர்ணகுலசூரிய 3/113

தர்மராஜ கல்லூரி, கண்டி (முதலாவது இன்னிங்ஸ்) – 28/2 (18)


ஏனைய போட்டிகளின் சுருக்கம்…

குருகுல கல்லூரி, களனி எதிர் ரிச்மண்ட் கல்லூரி, காலி

குருகுல கல்லூரி, களனி (முதலாவது இன்னிங்ஸ்) – 226 (84.4) – மலிந்து விதுரங்க 97*, பிரவீன் நிமேஷ் 72, அவிந்து தீக்ஷன 4/54, திலும் சுதீர 2/50, சந்துன் மென்டிஸ் 2/70

ரிச்மண்ட் கல்லூரி, காலி (முதலாவது இன்னிங்ஸ்) – 54/2 (22) – டுவின் கலன்சூரிய 25*


புனித மரியாள் கல்லூரி, கேகாலை எதிர் புனித அலோசியஸ் கல்லூரி, காலி

புனித மரியாள் கல்லூரி, கேகாலை (முதலாவது இன்னிங்ஸ்) – 121 (44.2) – NDPM வலிசிங்ஹ 26, கவிக டில்ஷான் 4/12, கவீஷ விலோச்சன 2/15, கவிந்து மதுரங்க 2/16

புனித அலோசியஸ் கல்லூரி, காலி (முதலாவது இன்னிங்ஸ்) – 125/7 (51) – நிலுக்ஷ தில்மின 65*, ஒமல் சஜித் 22, கவிக டில்ஷான் 20, VKWATS குமார 4/33, PRAD பெதியகொட 2/21


புனித ஜோன் கல்லூரி, பாணந்துறை எதிர் புனித அந்தோனியார் கல்லூரி, வத்தளை

புனித ஜோன் கல்லூரி, பாணந்துறை (முதலாவது இன்னிங்ஸ்) – 256 (76.3) – சமிந்து விக்ரமாராச்சி 84*, அஷான் தில்ஹார 46, கவீஷ துலாஞ்சன 4/15           

புனித அந்தோனியார் கல்லூரி, வத்தளை (முதலாவது இன்னிங்ஸ்) – 69/0 (12) – லஹிரு மதுபாஷன 51*