தேசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் திகனையில் ஆரம்பம்

177

சிரேஷ்ட வீராங்கனைகள் பங்குபெறும் 2021ஆம் ஆண்டுக்கான டயலொக் தேசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் நேற்று (23) திகன விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.

சிரேஷ்ட வீராங்கனைகளுக்கான தேசிய வலைப்பந்தாட்ட தொடர் இம்மாதம்

நாடு பூராகவும் இருந்து 32 அணிகள் பங்கெடுக்கின்ற இந்த தேசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் 2021ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் ஏற்பாடு செய்யப்பட்ட போதும், தொடர் அப்போது இருந்த நடைமுறைச்  சிக்கல்களின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

எனினும், நேற்று கோலாகலமாக ஆரம்பித்திருந்த தொடரில் 30 அணிகளே பிரசன்னமாகி இருந்ததுடன், அந்த அணிகள் 8 குழுக்களாகப் (A1, A11, B1, B11, C1, C11, D1, D11) பிரிக்கப்பட்டடு மோதல்கள் இடம்பெற்றிருந்தன.

நேற்று நடைபெற்ற மோதல்களில் இலங்கை இராணுவப்படை அணி, ஹட்டன் நஷனல் வங்கி, இலங்கை விமானப்படை அணி மற்றும் குருநாகல் மாவட்ட அணி என்பன சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தன.

இதனையடுத்து நேற்றைய ஆட்டநாள் நிறைவுக்கு வருகின்ற சந்தர்ப்பத்தில் இலங்கை இராணுவப்படை அணி, கொழும்பு மாவட்ட அணி, களுத்துறை மாவட்ட அணி, இலங்கை விமானப்படை, ஹட்டன் நஷனல் வங்கி, குருநாகல் மாவட்ட அணி மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை அணி ஆகியவை தொடரின் காலிறுதிப் போட்டிக்கு தெரிவாகின.

இன்று (23) காலை தொடக்கம் 2021ஆம் ஆண்டிற்கான தேசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் நொக் அவுட் சுற்றுகள் (காலிறுதி, அரையிறுதி, இறுதி மற்றும் மூன்றாம் இடத்திற்கான போட்டி) இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முதல்நாள் சுற்றுக்களின் புள்ளிகள் நிலவரம்

*1 வெற்றி = 2 புள்ளிகள்

>>மேலும் விளையாட்டுச் செய்திகளுக்கு<<