கொரோனா வைரஸ் தொற்றலிருந்து தப்பிய பாகிஸ்தான் வீரர்கள்

48
PSL corona
PSL

பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் (PSL) பங்கேற்ற வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 128 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது 

பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் அரையிறுதிப் போட்டிகள் திடீர் ரத்து: PCB அதிரடி

கொவிட்-19 எனப்படுகின்ற கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்

கொரோனா அச்சுறுத்தலால் உலகில் உள்ள அனைத்து விளையாட்டுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மார்ச் 2ஆவது வாரத்தில் தவிர்க்க முடியாத முக்கியமான போட்டிகள் மாத்திரம் ரசிகர்கள் இன்றி மூடிய மைதானத்தில் நடத்தப்பட்டன.  

ஆனால் பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியதால் பிளே– ஓப் சுற்றுப் போட்டிகளை இரத்து செய்து அதை அரையிறுதிப் போட்டிகளாக ரசிகர்கள் யாருமின்றி நடத்த முடிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் பங்கேற்றிருந்த சுமார் 25 வெளிநாட்டு வீரர்களை உடனடியாக தத்தமது நாடுகளுக்கு திரும்பிச் செல்லுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பணித்திருந்த பின்னணியில் தான் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடர் இரத்து செய்யப்பட்டது.  

கொரோனா அச்சம் : தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் ரொஷான் மஹாநாம

பாகிஸ்தானில் இருந்து தாயகம் திரும்பியிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள்

இதற்கு வெளிநாட்டைச் சேர்ந்த வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்ததால்தான் போட்டி இரத்து செய்யப்பட்டது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தரப்பில் கூறப்பட்டது.

இதுஇவ்வாறிருக்க, பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் பங்கேற்ற அந்நாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், போட்டி அதிகாரிகள், ஒளிபரப்பாளர்கள், அணி உரிமையாளர்கள் என 128 பேருக்கு கடந்த 17ஆம் திகதி கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என பாகிஸ்தான் சுப்பர் லீக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி கருத்து தெரிவிக்கையில், “பாகிஸ்தான் சுப்பர் லீக் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மைக்கு இந்தப் பரிசோதனை மிகவும் முக்கியமானது. அனைத்து வீரர்கள், அதிகாரிகள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள், போட்டியின் இறுதி வரை உதவி செய்தவர்கள் என அனைவரும் இந்த கொவிட்-19 தொற்றுக்கான பரிசோதனைக்கு முகங்கொடுத்தனர்

இலங்கையர்களுக்கு, இலங்கை கிரிக்கெட் வீரர்களின் அறிவுரை

முழு இலங்கையினையும் கொரோனா வைரஸ் பீதி ஆட்கொண்டிருக்கும்

இதன் முடிவில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் இந்த வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு சந்தேகங்கள் அல்லது கவலைகள் இல்லாமல் தங்கள் குடும்பங்களில் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறார்கள்” என்றார்

இதேவேளை, கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டு தாயகம் திரும்பிய தென்னாப்பிரிக்க வீரர்கள் அனைவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி, மருத்துவக் கண்காணிப்பில் வைக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளது.

அதுமாத்திரமின்றி, அவுஸ்திரேலியா சென்று நாடு திரும்பிய நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள கிரிக்கெட் வீரர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க