கொரோனா வைரஸ் எதிரொலி: டி20 உலகக் கிண்ணம் நடைபெறுமா?

88
ICC

கொரோனா வைரஸ் பாதிப்பினால் அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள ஆண்களுக்கான டி20 உலகக் கிண்ண கிரிக்கெட தொடர் நடைபெறுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையும், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையும் தமது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் எல்லாம் நீங்கி, டி20 உலகக் கிண்ணத் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என்று கிரிக்கெட் அவுஸ்திரேலியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுதும் வேகமாக பரவி சர்வதேசத்தையே அச்சுறுத்திவருகிறது. உலகம் முழுதும் சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா காரணமாக MCC கிரிக்கெட் போட்டியும் இரத்து

கடந்த பருவகாலத்தில், இங்கிலாந்து கவுண்டி……

கொரோனா அச்சுறுத்தலின் விளைவாக ஏனைய விளையாட்டுப் போட்டிகளைப் போல கிரிக்கெட் தொடர்கள் அனைத்துமே ஒத்திவைக்கப்பட்டுள்ளன

இந்தியாதென்னாப்பிரிக்கா இடையேயான கிரிக்கெட் தொடர் இரத்து செய்யப்பட்டு தென்னாப்பிரிக்க வீரர்கள் பாதுகாப்பாக சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அத்துடன், .பி.எல் கிரிக்கெட் ஏப்ரல் 15ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இலங்கைஇங்கிலாந்து டெஸ்ட் தொடர், அவுஸ்திரேலியாநியூஸிலாந்து ஒருநாள் தொடர், அயர்லாந்து அணியின் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மற்றும் பங்களாதேஷ் அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் உள்ளிட்ட பல சர்வதேச தொடர்கள் இவ்வாறு கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன

அவுஸ்திரேலியாவிலும் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. மறு அறிவிப்பு வெளியிடப்படும் வரை இது தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுஇவ்வாறிருக்க, அஸ்திரேலிய வீரர் கேன் ரிச்சர்ட்சன் மற்றும் நியூசிலாந்து வீரர் லுக்கி பெர்குசன் ஆகியோருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி தென்படுவதாக அறிவிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது.

இந்த நிலையில், பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் விளையாடிய இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக செய்திகள் வெளியாகிய இருந்தன.

இவ்வாறு கொரோனாவின் தாக்கம் கிரிக்கெட் விளையாட்டையும் தீவிரமாக  பாதித்து வருகின்ற நிலையில், இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தமது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது

இந்நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைவடைந்து, திட்டமிட்டபடி இந்த டி20 உலகக் கிண்ணத் தொடர் நடைபெறும் என்றுஅவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் தலைமை செயல் அதிகாரி கெவின் ரொபர்ட்ஸ் தெரிவித்துள்ளார்

பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் அரையிறுதிப் போட்டிகள் திடீர் ரத்து: PCB அதிரடி

கொவிட்-19 எனப்படுகின்ற கொரோனா…..

மேலும், இன்னும் சில வாரங்களில் அனைத்து வகையான உள்ளூர் போட்டிகளும் நடைபெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொரோனா பீதியெல்லாம் நீங்கி, டி20 உலகக் கிண்ணத் தொடருக்கு முன்பு சாதாரண நிலைக்கு திரும்புவோம். எதுவும் நம் கையில் இல்லை என்றும் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை மட்டுமே நம்மிடம் உள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேநேரம், .சி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸின் தாக்கம் குறித்து நாங்கள் தொடர்ந்து அவதானம் செலுத்தி வருவதுடன், டி20 உலகக் கிண்ண ஏற்பாட்டுக் குழுவின் நடவடிக்கைளை ஆராய்ந்து வருகின்றோம்

எனவே டி20 உலகக் கிண்ணப் போட்டிகளை திட்டமிட்டபடி நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் வரலாற்றை மாற்றி இன்றுடன் 24 வருடம்

மறைந்த டொனி க்ரைக் தொலைக்காட்சியில்…..

எதிர்வரும் ஒக்டோபர் 18 முதல் 23ஆம் திகதி வரை டி20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து 24ஆம் திகதி முதல் 12 அணிகள் பங்கேற்கும் முக்கிய போட்டிகள்  நடைபெறவுள்ளது

இதன் இறுதிப்போட்டி மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நவம்பர் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<