கவுண்டி அணியில் களமிறங்கும் அஸ்வின்

115

இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடருக்கு முன்பாக, கவுண்டி சம்பியன்ஷிப் போட்டியில் சர்ரே அணிக்காக இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதற்கு முன்பாக இந்திய அணி எந்த பயிற்சிப் போட்டியிலும் விளையாடவில்லை.

இதற்கிடையே டெஸ்ட் தொடருக்கு முன்பாக இங்கிலாந்தின் உள்ளூர் அணியொன்றுடன் பயிற்சிப் போட்டிக்கு ஏற்பாடு செய்யுமாறு பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது.

இந்திய குழாத்திலிருந்து வெளியேற்றப்படும் சுப்மான் கில்

இதுஇவ்வாறிருக்க, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குப் பிறகு இந்திய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இந்திய வீரர்கள் தமது குடும்பத்தாருடன் வெளி இடங்களுக்குச் சென்று பொழுதைக் கழித்து வருகின்றனர்

இந்த இடைப்பட்ட காலத்தில் சுழல்பந்துவீச்சாளர் அஸ்வின், கவுண்டி அணியான சர்ரே அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளார்.

உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுவதற்கான வீசா அஸ்வினுக்கு இன்னும் கிடைக்கவில்லை. அவருக்கு வீசா கிடைத்துவிட்டால், சர்ரே அணிக்காக எதிர்வரும் 11ஆம் திகதி சமர்செட் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதற்குமுன் அஸ்வின், கவுண்ட்டி அணியான நொட்டிங்ஹம்ஷெயார் மற்றும் வோர்செஸ்டர்ஷெயார் அணியில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது

“இலங்கை வந்திருப்பது இந்தியாவின் இரண்டாம் நிலை அணி அல்ல” ; SLC

எதுஎவ்வாறாயினும், கவுண்டி சம்பியன்ஷிப் தொடரை பொறுத்தமட்டில் இரண்டு வெளிநாட்டு வீரர்களை மாத்திரம் தான் இறுதி பதினொருவர் அணியில் சேர்க்க முடியும்.

எனவே, சர்ரே அணி, ஏற்கனவே தென்னாப்பிரிக்காவின் ஷீம் அம்லா மற்றும் நியூசிலாந்தின் கைல் ஜேமிசன் ஆகிய வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் கைல் ஜேமிசன் உபாதையினால் அவதிப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது

இதன்காரணமாக அவருக்கும் 11ஆம் திகதி நடைபெறவுள்ள சமர்செட் அணிக்கெதிரான போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஒருவேளை, அஸ்வினுக்கு வீசா கிடைத்தால் அவருக்கு சர்ரே அணியில் விளையாடுவதற்கான வாய்;ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<