இந்திய குழாத்திலிருந்து வெளியேற்றப்படும் சுப்மான் கில்

India tour of England 2021

111
Getty Images
 

இங்கிலாந்து தொடருக்காக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் சுப்மான் கில், மீண்டும் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.

சுப்மான் கில்லின் கால் பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவர், மீண்டும் நாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது, உபாதை குணமடைய சுமார் 8 வாரங்கள் எடுக்கும் என்ற நிலையிலேயே மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை வீரர்கள் ஒப்பந்த விவகாரம் – இன்று காலை வரை காலக்கெடு

சுற்றுலா இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 4ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தநிலையில், சுப்மான் கில் நீக்கப்பட்டுள்ளமை, இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்டத்தில் கேள்வியை எழுப்பியுள்ளது.

சுப்மான் கில் நாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ள போதும், மாற்று வீரர்கள் தொடர்பில் இதுவரையில், எந்தவித திட்டங்களும் இல்லையென இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இங்கிலாந்தின் கொவிட்-19 விதிமுறைகள் காரணமாக வெளிநாட்டவர்கள் இங்கிலாந்துக்கு பிரவேசிக்க முடியாது.

குறித்த விடயத்தினை சீரமைத்தாலும், அழைக்கப்படும் வீரர் 10 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும். அதனுடன், மாற்று வீரர்களாக எதிர்பார்க்கப்படும் பிரித்வி ஷா மற்றும் தேவ்துத் படிக்கல் ஆகியோர் இலங்கையில் உள்ளனர். எனவே, இவர்களை அழைப்பது கடினமான விடயமாகும்.

மாற்று வீரர்கள் இங்கிலாந்து அழைக்கப்பட்டாலும், அவர்கள் அணியிலிருந்து விலகி வேறு ஒரு இடத்தில் தனிமைப்படுத்தி வைக்கவேண்டும். இதற்கான நடவடிக்கைகளும் திட்டங்களையும் இந்திய கிரிக்கெட் சபை மேற்கொள்ள வேண்டும். எனவே, தற்போதைய நிலையில் மாற்று வீரரை இணைப்பது தொடர்பில் இந்திய கிரிக்கெட் சபை அறிவிக்கவில்லை.

அதேநேரம், இங்கிலாந்தில் உள்ள இந்திய குழாத்தில் கே.எல். ராஹுல் இருந்தாலும், அவர் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக செயற்படமாட்டார் என இந்திய கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனவே, மயங்க் அகவர்வால் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக செயற்படுவர். மயங்க் அகர்வாலுக்கு அடுத்தப்படியாக புதுமுக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அபிமன்யு ஈஸ்வரன் இந்திய குழாத்துடன் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…