மாகாண ஒருநாள் தொடருக்கான குழாம்கள், போட்டிகள் அறிவிப்பு

1064

வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக அணித் தேர்வுக்கான இறுதி முயற்சியாக இலங்கை கிரிக்கெட் சபையின் (SLT) மாகாணங்களுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வரும் ஏப்ரல் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

தினேஷ் சந்திமால் (கொழும்பு), லசித் மாலிங்க (காலி), திமுத் கருணாரத்ன (கண்டி) மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் (தம்புள்ளை) தலைமையிலான நான்கு அணிகளினதும் குழாம்கள் தேசிய தேர்வாளர்களால் பெயரிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண போட்டிக்கு இலங்கையின் 15 பேர் கொண்ட இறுதிக் குழாத்தை தேர்வு செய்வதற்காகவே இந்த போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தனது விருதுகள் அனைத்தையும் நலத்திட்டத்திற்காக கொடுக்கும் முரளிதரன்

இலங்கை அணியின் சுழல் ஜாம்பவனாகிய முத்தையா முரளிதரன் டெஸ்ட், ஒரு நாள், T20I…

இந்த நான்கு அணிகளும் ஒவ்வொரு அணியுடன் ஒரு தடவை மோதவிருப்பதோடு முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் ஏப்ரல் 11ஆம் திகதி இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். உலகக் கிண்ணத்தின் பெரும்பாலான போட்டிகள் பகல் ஆட்டங்களாக இருப்பதால், மாகாண தொடரின் அனைத்து போட்டிகளையும் பகல் ஆட்டங்களாக நடத்த இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.  

ஒவ்வொரு குழாத்திற்கும் தேர்வு செய்யபட்டிருப்பும் 15 வீரர்கள் தவிர்த்து, ஒவ்வொரு மாகாண அணிக்கும் தலா ஏழு மேலதிக வீரர்களை இணைக்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.  

கொழும்பு அணி – தினேஷ் சந்திமால் (தலைவர்), உபுல் தரங்க (உப தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, அஞ்செலோ பெரேரா, அஷான் பிரியன்ஜன், கமிந்து மெண்டிஸ், சீகுகே பிரசன்ன, அகில தனன்ஜய, சுரங்க லக்மால், அசித்த பெர்னாண்டோ, சாமிக்க கருணாரத்ன, சாமர சில்வா, மொஹமட் சிராஸ், செஹான் ஜயசூரிய, அவிஷ்க குணவர்தன (தலைமை பயிற்சியாளர்), சரித் சேனநாயக்க (முகாமையாளர்)

மேலதிக வீரர்கள் – விஷ்வ சத்துரங்க, நிபுன் தனன்ஜய, கலன பெரேரா, தரிந்து ரத்னாயக்க, நிபுன் ரன்சிக்க, ஹஷான் துமிந்து, ஹசித்த போயகொட.

கண்டி – திமுத் கருணாரத்ன (தலைவர்), திசர பெரேரா (உப தலைவர்), சதீர சமரவிக்ரம, பதும் நிஸ்ஸங்க, பிரியமால் பெரேரா, ரொஷேன் சில்வா, அசேல குணரத்ன, ஜெப்ரி வென்டர்சே, மலிந்த புஷ்பகுமார, கசுன் ராஜித்த, நுவன் பிரதீப், சதுரங்க டி சில்வா, சச்சித்ர சேனநாயக்க, டில்ஷான் குணரத்ன, மனோஜ் சரத்சந்திர, பியமால் விஜேதுங்க (தலைமை பயிற்சியாளர்), பாலன் ஆசிர்வர்தன் (முகாமையாளர்)

மேலதிக வீரர்கள் – தரிந்து கௌஷால், சமிந்து விஜேசிங்க, டில்ருவன் பெரேரா, கவிஷ்க அஞ்சுல, ஜெஹான் டானியல், ரொஷான் சஞ்சய, சங்கீத் குரே.  

காலி – லசித் மாலிங்க (தலைவர்), லஹிரு திரிமான்ன (உப தலைவர்), குசல் மெண்டிஸ், சதுன் வீரக்கொடி, மஹேல உடவத்த, மினோத் பானுக்க, தனன்ஜய டி சில்வா, மிலந்த சிறிவர்தன, நிஷான் பீரிஸ், சாமிக்கர எதிரிசிங்க, துஷ்மன்த சமீர, லஹிரு மதுசங்க, சம்மு அஷான், செஹான் மதுசங்க, வனிந்து ஹசரங்க, திலான் சமரவீர (தலைமை பயிற்சியாளர்), சம்மு குணசேகர (முகாமையாளர்)

பதில் வீரர்கள் – நிபுன் கருனானாயக்க, கமில் மிஷார, நிசல தாரக்க, மஹீஷ் தீக்ஷன, பினுர பெர்னாண்டோ, தம்மிக்க பிரசாத், திக்சில டி சில்வா.   

தம்புள்ளை – அஞ்செலோ மெதிவ்ஸ் (தலைவர்), நிரோஷன் திக்வெல்ல (உப தலைவர்), தனுஷ்க குணத்திலக்க, ஓஷத பெர்னாண்டோ, பானுக்க ராஜபக்ஷ, ஜீவன் மெண்டிஸ், தசுன் ஷானக்க, லக்ஷான் சந்தகன், பிரபாத் ஜயசூரிய, இசுரு உதான, இஷான் ஜயரத்ன, சச்சித்ர சேரசிங்க, விஷ்வ பெர்னாண்டோ, அஷேன் பண்டார, ரமேஷ் மெண்டிஸ், சுமித்ர வர்ணகுலசூரிய (தலைமை பயிற்சியாளர்), வினோதன் ஜோன் (முகாமையாளர்)

மேலதிக வீரர்கள் – தசுன் விமுக்தி, சொனால் தினுஷ, லஹிரு கமகே, ரமித் ரம்புக்வெல்லண, கௌஷால் சில்வா, சிரான் பெர்னாண்டோ, லஹிரு உதார.

முதல் T20I போட்டியில் மயிரிழையில் வெற்றியை தவறவிட்ட இலங்கை

கேப்டவுனில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது T20I போட்டியில்…

போட்டி அட்டவணை

  • ஏப்ரல் 4 – கொழும்பு எதிர் தம்புள்ளை – ரங்கிரி தம்புள்ளை சர்வதேச அரங்கு
  • ஏப்ரல் 4 – கண்டி எதிர் காலி – பல்லேகல சர்வதேச கிரிக்கெட் அரங்கு
  • ஏப்ரல் 6 – தம்புள்ளை எதிர் காலி – ரங்கிரி தம்புள்ளை சர்வதேச அரங்கு
  • எப்ரல் 6 – கொழும்பு எதிர் கண்டி – பல்லேகல சர்வதேச கிரிக்கெட் அரங்கு
  • ஏப்ரல் 8 – தம்புள்ளை எதிர் கண்டி – ரங்கிரி தம்புள்ளை சர்வதேச அரங்கு
  • ஏப்ரல் 8 – கொழும்பு எதிர் காலி – பல்லேகல சர்வதேச கிரிக்கெட் அரங்கு
  • ஏப்ரல் 10 – 3 மற்றும் 4ஆவது இடங்களுக்கான பிளே ஓப், ரங்கிரி தம்புள்ளை சர்வதேச அரங்கு
  • ஏப்ரல் 11 – இறுதிப் போட்டி, ரங்கிரி தம்புள்ளை சர்வதேச அரங்கு

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<