ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் மொபிடல் நிறுவனத்தின் அனுசரணையில் முதன்முறையாக நடைபெற்ற சபுதி விளையாட்டு இலக்கிய விருது வழங்கும் விழாவில் எமது Thepapare.com இணையத்தளம் சிறந்த நவீன விளையாட்டு (இலத்திரனியல்) ஊடகத்திற்கான விருதினை பெற்றுள்ளது.
இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சின் டங்கன் வைட் அரங்கத்தில் நேற்றைய தினம் (11) இந்த விருது வழங்கும் விழா, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.
கைஸ் அஹ்மட்டின் அதிரடி துடுப்பாட்டத்தோடு கொழும்பு கிங்ஸ் வெற்றி
இந்த நிகழ்வில் இலங்கை விளையாட்டின் முன்னேற்றத்துக்கு முக்கிய காரணமாக இருந்த பலருக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இதில், சபுதி விளையாட்டு இலக்கிய வட்டம் – வாழ்நாள் சாதனையாளர்கள் விருதினை அனுபவ ஊடகவியலாளர்களான பாலித பெரேரா மற்றும் பிரேமசார ஏபசிங்க ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
சகோதார மொழி வர்னணையாளர்களான இவர்கள் இருவரும், கடந்த ஐந்து தசாப்தங்களாக இலங்கை விளையாட்டுத்துறையை சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டியதுடன், இலங்கை கிரிக்கெட்டின் புதிய பரினாமத்துக்கு மிகப்பெரிய பங்காற்றியுள்ளனர்.
இவர்களுடன், சபுதி தங்க விருதினை, 2000ம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் 200 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற சுசந்திகா ஜயசிங்க பெற்றுக்கொண்டார். அத்துடன், சபுதி விருது விழாவானது, சுசந்திகா ஜயசிங்க வெள்ளிப்பதக்கம் வென்ற 20வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் நடத்தப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
அதேநேரம், இந்த விருது வழங்கள் விழாவில், ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு இலக்கிய எழுத்தாளர் விருதினை அசோக குணதிலக்க பெற்றுக்கொண்டதுடன், ஆண்டின் சிறந்த விளையாட்டு கல்வி புத்தகத்துக்கான விருதினை சமந்தா நாணயக்கார மற்றும் இதர பாடங்களில் ஆண்டின் விளையாட்டு இலக்கிய புத்தகத்துக்கான விருதினை பாத்திய அர்தநாயக்க ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் வழங்கப்பட்ட ஏனைய விருதுகள்
- விளையாட்டு இலக்கியம் ஆண்டின் நவீன ஊடகம் – ThePapare.com
தகுதி சான்றிதழ்கள் – batsman.com, ceylonathletics.com
- ஆண்டின் விளையாட்டு இலக்கியம் தொலைக்காட்சி ஊடகம் – சிரச நியூஸ் பெஸ்ட்
தகுதி சான்றிதழ்கள் – தேசிய தொலைக்காட்சி, ஹிரு
- ஆண்டின் விளையாட்டு இலக்கியம் வானொலி – லக்ஹண்ட
தகுதி சான்றிதழ் – வர்த்தக சேவை, நெத்
- ஆண்டின் விளையாட்டு இலக்கியம் தினசரி பத்திரிகை – அருண
தகுதி சான்றிதழ்கள் – அத, மௌபிம
- ஆண்டின் விளையாட்டு இலக்கியம் வாராந்த பத்திரிகை – ராவய
தகுதி சான்றிதழ்கள் – திவயின, லங்காதீப
>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<