விக்கெட் வீழ்த்த பொறுமையுடன் இருக்க வேண்டும் – அஜாஸ் படேல்

159

இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் சுழல் பந்துவீச்சுக்கு சிறந்த முறையில் ஆடக்கூடியவர்கள் என்பதால் விக்கெட் பெற பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என்று நியூசிலாந்து சுழல் பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் குறிப்பிட்டார்.

டெஸ்ட் இன்னிங்ஸில் தனது இரண்டாவது ஐந்து விக்கெட்டை வீழ்த்திய அஜாஸ் படேல் இரண்டாவது நாள் ஆட்டத்தில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வரிசையை சிதறடித்தார். 11 ஆவது ஓவரை வீசவந்த அவர் அந்த ஓவரின் கடைசி பந்தில் லஹிரு திரிமான்னவை ஆட்டமிழக்கச் செய்ததோடு அதேபோன்ற ஒரு பந்தில் திமுத் கருணாரத்னவையும் வெளியேற்றினார். 

இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்ட டிக்வெல்ல, லக்மால்

நியூசிலாந்து அணிக்கு எதிராக காலி சர்வதேச…………….

இதனைத் தொடர்ந்து சரிவை சந்தித்த இலங்கை அணி மீள்வதற்கு கடுமையாக போராட வேண்டி ஏற்பட்டது. 

“ஆடுகளம் உதவினாலும், சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தபோதும் பொறுமையுடன் காத்திருந்து துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். இலங்கை வீரர்கள் சுழல் பந்துவீச்சுக்கு சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடுபவர்கள் என்பது எமக்குத் தெரியும். அதனை மதித்து நீண்ட நேரத்திற்கு சிறந்த இலக்கிற்கு பந்து வீச வேண்டும்” என்று இரண்டாவது நாள் ஆட்டம் குறித்து விளக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அஜாஸ் படேல் குறிப்பிட்டார். 

இலங்கை 66 ஓட்டங்களுக்கு முதல் 2 விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறிய நிலையில் குசல் மெண்டிஸ் (53) மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் (50) 3 ஆவது விக்கெட்டுக்காக 77 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். எனினும் இலங்கை அணிக்கு முக்கியமாக இருந்த அந்த இணைப்பாட்டத்தை முறியடித்த அஜாஸ் படேல் தேநீர் இடைவேளைக்கு ஒரு பந்து இருக்கும்போது குசல் மெண்டிஸை ஆட்டமிழக்கச் செய்தார். 

“இருவரும் சிறப்பாக துடுப்பெடுத்தாடினார்கள். நீண்ட நேரம் துடுப்பெடுத்தாடும் திறன்படைத்தவர்களாகவும் உள்ளனர். அதிர்ஷ்டவசமாக அவர்களை எம்மால் சரியான நேரத்தில் ஆட்டமிழக்கச் செய்ய முடிந்தது. 

பந்து சுழல்கின்றபோதும் அது மந்தமாகவே சுழன்றது. துடுப்பாட்ட வீரர்கள் தமது நிலையை தக்கவைத்துக் கொண்டால் நிலைமையை புரிந்து கொண்டு துடுப்பாட முடியும். எனவே தொடர்ச்சியாக பந்தை இலக்குகளுக்கு வீச வேண்டும்” என்று படேல் குறிப்பிட்டார். 

இந்தியாவில் பிறந்து நியூசிலாந்துக்காக விளையாடும் அஜாஸ் படேல் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் தொடர்ச்சியாக தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இதற்கு முன்னர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி இருந்தார். 

கொல்கத்தா அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ப்ரெண்டன் மெக்கலம் நியமனம்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள்…………..

“சுழல் பந்துவீச்சாளராக இருந்தால் திறமையை வெளிப்படுத்த ஆடுகளம் உதவ வேண்டும். இலங்கை என்பது கடந்த காலத்தில் சுழல் பந்துவீச்சுக்கு சிறந்த இடமாக இருந்தது. சுழல் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளார்கள். இங்கு வரும்போதே பந்து சுழலும் என்பது தெரியும். இந்த சூழலில் பந்தை எந்த வேகத்தில் செலுத்துவது, எந்தப் பந்துக்கு வீரர்கள் துடுப்பெடுத்தாடுவார்கள் என்பதை கண்டறிய வேண்டி உள்ளது. என்னை பொறுத்தவரை அடிப்படையாக நான் அந்த இலக்குகளுக்கு பந்து வீசுவேன்” என்று படேல் குறிப்பிட்டார்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க