இலங்கை – நியூசிலாந்து போட்டி அட்டவணையில் மாற்றம்

6768
(Photo by Michael BRADLEY / AFP)

நியூசிலாந்து அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணத்தின் போட்டி அட்டவணையில் மாற்றம் கொண்டுவரப்பட்டிருப்பதாக ThePapare.com இற்கு தெரியவருகிறது. 

இந்த தொடரின் இரு டெஸ்ட் போட்டிகளும் திட்டமிடப்பட்டவாறு நடைபெறவிருந்தபோதும் அதற்கு பின் நடைபெறும் மூன்று டி-20 போட்டிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1 ஆம் திகதி ஆஷஸ் தொடருடன் ஆரம்பிக்கப்பட்ட ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஓர் அங்கமாகவே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.   

இந்நிலையில் முதல் இரு டி-20 போட்டிகளும் ஆர். பிரேமதாச மைதானத்தில் இருந்து மாற்றப்பட்டு மூன்று டி-20 போட்டிகளும் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.   

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் முதல் மோதலாக ஆஷஸ் தொடர் ஆரம்பம்

முன்னதாக முதல் இரு டி-20 போட்டிகளும் முறையே எதிர்வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டெம்பர் 2 ஆம் திகதிகளில் கொழும்பில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிய அட்டவணையின்படி முதல் இரு போட்டிகளும் தற்போது செப்டெம்பர் 1 மற்றும் 3 ஆம் திகதிகளுக்கு மாற்றப்பட்டிருப்பதோடு 3ஆவது டி-20 போட்டி மாற்றமின்றி செப்டெம்பர் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது.      

வருகை அணியான நியூசிலாந்து தற்போது டெஸ்ட் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருப்பதோடு டி-20 தவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ளது. இலங்கை, டெஸ்ட் தரவரிசையில் ஆறாவது இடத்திலும் டி-20 இல் எட்டாவது இடத்திலும் காணப்படுகிறது.  

நியூசிலாந்து அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின் அனைத்துப் போட்டிகளையும் இலங்கையில் இருந்து ThePapare.com ஊடாக ரசிகர்களுக்கு பார்வையிட முடியும். 

மாற்றப்பட்ட போட்டி அட்டவணை

  • ஆகஸ்ட் 8 – 10 – மூன்று நாள் போட்டி – மேரியன்ஸ் கிரிக்கெட் மைதானம், கட்டுநாயக்க
  • ஆகஸ்ட் 14 – 18 – முதலாவது டெஸ்ட் – காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம்
  • ஆகஸ்ட் 22 – 26 – இரண்டாவது டெஸ்ட் – பீ. சரா ஓவல், கொழும்பு
  • ஆகஸ்ட் 29 – முதலாவது டி-20 போட்டி – பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம், கண்டி 
  • செப்டெம்பர் 3 – இரண்டாவது டி-20 போட்டி – பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம், கண்டி 
  • செப்டெம்பர் 6 – மூன்றாவது டி-20 போட்டி – பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம், கண்டி 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<