இலங்கை வந்தடைந்த ஹத்துருசிங்கவுக்கு விரைவில் நியமனம்!

511
Hathurusingha

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக, இலங்கை அணியின் முன்னாள் வீரர் சந்திக ஹத்துருசிங்கவை நியமிக்க இலங்கை கிரிக்கெட் சபை நெருங்கியுள்ளதாக கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்ற ஹத்துருசிங்க, நேற்று(21) மாலை இலங்கை வந்தடைந்தார்.

ஹத்துருசிங்கவை அன்புடன் வரவேற்கிறோம் : அமைச்சர் தயாசிறி

இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் வீரரும், பங்களாதேஷ்..

இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகளைச் சந்திப்பதற்காக கொழும்புக்கு வருகை தந்துள்ள சந்திக ஹத்துருசிங்க, நேற்று இரவு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தையொன்றில் கலந்துகொண்டார். சுமார் 3 மணித்தியாலங்கள் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால, உப தலைவர் மதிவானன் மற்றும் இலங்கை கிரிக்கெட்டின் நிறைவேற்றுக்குழு அதிகாரி ஏஷ்லி டி சில்வா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இலங்கை கிரிக்கெட் அணியின் நிரந்தர பயிற்றுவிப்பாளராக ஹத்துருசிங்கவை நியமிப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து ஹத்துருசிங்க இதுவரை நீக்கப்படவில்லை. அத்துடன் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் அவர் பங்களாதேஷ் செல்லாமல், கடிதம் மூலம் அந்நாட்டு கிரிக்கெட் சபைக்கு தனது இராஜினாமாவை அறிவித்திருந்தார்.

இந்திய வீரர்களுகெதிராக கொந்தளித்த திக்வெல்லவின் மறுமுகம்

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (20)…

இதன் பின்னணியில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சந்திக்க ஹத்துருசிங்கவை தக்க வைப்பதற்கான நம்பிக்கையை இழந்துள்ளதாகவும், அவரைப் பிரதியீடு செய்வோர் குறித்து கவனஞ் செலுத்துவதாகவும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் ஹஸன் ஊடகங்களுக்கு நேற்றுமுன்தினம் தெரிவித்தார்.

எனினும், அவருடைய வருகையை தொடர்ந்து எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ள நஸ்முல் ஹஸன், இராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட போதிலும், அதற்கான உரிய காரணத்தை அவர் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் எழுந்துள்ள சட்ட சிக்கல்களை உடனடியாக நிவர்த்தி செய்து தருமாறு இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவரிடம் ஹத்துருசிங்க கோரிக்கை விடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து இரு நாட்டு கிரிக்கெட் சபைகளின் அதிகாரிகளுக்கிடையில் விசேட பேச்சுவார்த்தையொன்றை நடாத்தி அவரை உடனடியாக குறித்த பதவியிலிருந்து விடுவித்து இலங்கை அணிக்கு கொண்டு வருவதற்கும் கவனம் செலுத்தப்படும் எனவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்திய அணிக்கெதிரான தொடரின் பின்னர் ஹத்துருசிங்க இலங்கை அணியைப் பொறுப்பெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு பொறுப்பேற்குமிடத்து, தனது முன்னைய அணியான பங்களாதேஷுக்கெதிரானதாகவே சந்திக ஹத்துருசிங்கவின் இலங்கையுடனான முதலாவது தொடர் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இலங்கை அணிக்கெதிராக எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கு முன்னர் வெளிநாட்டுப் பயிற்றுவிப்பாளரொருவரை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கண்டுபிடிப்பது கடினம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இலங்கை அணிக்கெதிரான தொடரின்போது தற்காலிக பயிற்சியாளராக, பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் காலிட் மஹ்மூட் செயற்படுவார் என அந்நாட்டு கிரிக்கெட் சபை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.