பாகிஸ்தானை மிரட்டிய ஆரோன் பின்ச் தரவரிசையில் முன்னேற்றம்

123
Getty images

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரண்டு சதங்களை விளாசி தொடர் ஆட்டநாயகன் விருது வென்ற ஆரோன் பின்ச் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்துள்ளதுடன், பாக். அணித்தலைவர் இமாட் வஸீம் சகலதுறை வீரர்கள் தரவரிசையில் முன்னேற்றமடைந்துள்ளார்.  

தொடரை கைப்பற்றிய ஆஸி. அணிக்கு ஒருநாள் அணிகளின் தரவரிசை புள்ளியில் அதிகரிப்பு

பாகிஸ்தான் அணியை அவர்களது சொந்த ……..

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக இருதரப்பு தொடர் ஒன்றில் ஆடுவதற்காக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு பாகிஸ்தான் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியிருந்தது.

இரு அணிகளுக்குமிடையிலான குறித்த ஒருநாள் தொடர் நேற்று முன்தினம் (31) நிறைவுக்கு வந்திருந்த நிலையில், அவுஸ்திரேலிய அணி தொடரை 5-0 என வைட்வொஷ் செய்திருந்தது.

இந்நிலையில் குறித்த ஒருநாள் தொடரினையடுத்து வீரர்களுக்கான புதிய ஒருநாள் தரவரிசையினை சர்வதேச கிரிக்கெட் சபை நேற்று (01) வெளியிட்டிருந்தது.

துடுப்பாட்டம்

அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஆரோன் பின்ச் அணியை சிறப்பாக வழிநடத்தி, ஒருநாள் தொடரில் இரண்டு சதங்கள், இரண்டு அரைச்சதங்கள் அடங்களாக 451 ஓட்டங்களை குவித்து, வைட்வொஷ் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்ததுடன், துடுப்பாட்ட தரவரிசையிலும் அசுர முன்னேற்றத்தை கண்டுள்ளார்.

இதன்படி 12 நிலைகள் உயர்ந்து பின்ச் வாழ்நாள் அதிகபட்ச தரவரிசை புள்ளிகளாக 744 புள்ளிகளை பெற்று, மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஷை ஹோப்புடன் 9ஆவது இடத்தில் பகிர்ந்துள்ளார்.

அதே போன்று தொடரில் அவுஸ்திரேலிய அணிக்கு ஆரம்ப துடுப்பாட்டத்தில் பக்க பலமாக அமைந்திருந்த உஸ்மான் கவாஜா 6 நிலைகள் உயர்ந்து அதிகபட்ச தரவரிசை புள்ளிகளுடன் (685) 19ஆவது நிலையை அடைந்துள்ளார்.

மேலும், இறுதி ஒருநாள் போட்டியின் போது, அதிரடியாக 70 ஓட்டங்களை பெற்று, ஆட்டநாயகனாக தெரிவாகியிருந்த கிளேன் மெக்ஸ்வெல் 10 நிலையில் உயர்ந்து 666 தரவரிசை புள்ளிகளுடன் 23ஆவது நிலையை அடைந்துள்ளார்.

தொடர் வெற்றிகளுடன் உலகக் கிண்ணத்திற்கு வலுவடைந்து வரும் அவுஸ்திரேலியா

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் …

தொடரில் 182 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட இடது கை துடுப்பாட்ட வீரரான ஷோன் மார்ஷ் 3 நிலைகள் உயர்ந்து 44ஆவது நிலையை அடைந்துள்ளார். அத்துடன் விக்கெட் காப்பாளரான அலெக்ஸ் கெரி 7 நிலைகள் உயர்ந்து 88ஆவது இடத்தை அடைந்துள்ளார்.

பாக். அணி சார்பாக துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில், இறுதி இரண்டு ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் அணியின் தலைவராக செயற்பட்ட இமாட் வஸீம் 16 நிலைகள் உயர்ந்து அதிகபட்ச தரவரிசை புள்ளிகளுடன் (506) 68ஆவது இடத்தை அடைந்துள்ளார். அத்துடன் இவர் சகலதுறை வீரராக பிரகாசித்தது பந்துவீச்சாளர்களுக்காக தரவரிசையிலும் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடரில் பாக். அணி சார்பாக 2 சதங்களுடன் அதிகபட்ச ஓட்டங்களை குவித்த ஹாரிஸ் சொஹைல் 33 நிலைகள் உயர்ந்து வாழ்நாள் அதிகபட்ச தரவரிசை புள்ளிகளாக 525 புள்ளிகளை பெற்று 58ஆவது நிலையை அடைந்துள்ளார்.  

மேலும் நீண்ட இடைவெளியின் பின்னர் அணிக்கு திரும்பி நான்கு இன்னிங்ஸ்களில் 2 சதமடித்த முஹம்மட் றிஸ்வான் 45 நிலைகள் உயர்ந்து வாழ்நாள் அதிகபட்ச தரவரிசை புள்ளிகளுடன் (426) 101ஆவது நிலையை அடைந்துள்ளார்.

துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் 890 புள்ளிகளுடன் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றார்.

பந்துவீச்சு

தொடரில் பாக். அணியின் 7 விக்கெட்டுக்களை பதம்பார்த்த சுழற்பந்துவீச்சாளர் அடம் ஷம்பா 4 நிலைகள் உயர்ந்து 517 தரவரிசை புள்ளிகளுடன் 45ஆவது நிலைக்கு முன்னேறியுள்ள அதேவேளை, இரண்டு போட்டிகளில் மாத்திரம் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஜெய் ரிச்சர்ட்சன் வாழ்நாள் அதிகபட்ச தரவரிசை புள்ளிகளுடன் (540) 9 நிலைகள் உயர்ந்து சிம்பாப்வே அணி வீரர் கிறேம் கிறீமருடன் சேர்ந்து 38ஆவது நிலையை அடைந்துள்ளார்.

பந்து வீசுவதற்கான எண்ணமில்லை; அஞ்செலோ மெதிவ்ஸ்

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும்…..

மூன்று போட்டிகளில் மாத்திரம் விளையாடி 7 விக்கெட்டுக்களை கைப்பற்றிய நதன் குல்டர்-நைல் 11 நிலைகள் முன்னெறி 49ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

பாக். அணி சார்பாக துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையிலும் முன்னேற்றம் கண்ட அணித்தலைவர் இமாட் வஸீம் பந்துவீச்சாளர்களின் தரவரிசையிலும் 7 நிலைகள் உயர்ந்து 37ஆவது நிலையை அடைந்துள்ளார்.

நீண்ட கால இடைவெளியின் பின்னர் ஒருநாள் அணிக்கு திரும்பிய சுழற்பந்து வீச்சாளரான யஷிர் ஷா 4 நிலைகள் உயர்ந்து 62ஆவது நிலையை அடைந்துள்ளார். மேலும் பாக். அணி சார்பாக 3 போட்டிகளில் மாத்திரம் விளையாடி அதிகூடிய விக்கெட்டுக்களாக 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய  உஸ்மான் ஷின்வாரி வாழ்நாள் அதிகபட்ச தரவரிசை புள்ளிகளுடன் (465) 31 நிலைகள் உயர்ந்து 63ஆவது நிலையை அடைந்துள்ளார்.

மேலும் சகலதுறை வீரரான பஹீம் அஷ்ரப் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் வாழ்நாள் அதிகபட்ச புள்ளிகளுடன் (445) 9 நிலைகள் உயர்ந்து 70ஆவது நிலையை அடைந்துள்ளார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் 774 புள்ளிகளுடன் இந்திய வீரர் ஜஸ்பிரிட் பும்ரா தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றார்.

பந்து வீசுவதற்கான எண்ணமில்லை; அஞ்செலோ மெதிவ்ஸ்

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும்….

சகலதுறை

நிறைவுக்கு வந்த தொடரில் துடுப்பாட்டம் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் பிரகாசித்த பாக். அணி வீரர் இமாட் வஸீம் 16 நிலைகள் உயர்ந்து மேற்கிந்திய தீவுகள் வீரர் ஜேசன் ஹோல்டருடன் இணைந்து 6ஆவது நிலையை அடைந்துள்ளார்.

சகலதுறை வீரர்களின் தரவரிசையில் 356 புள்ளிகளுடன் ஆப்கான் வீரர் ரஷீட் கான் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<