மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைவராக ஹார்திக் பாண்டியா

242

2024ஆம் ஆண்டுக்கான புதிய இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைவராக ஹார்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

>>இலங்கை கிரிக்கெட்டில் சனத் ஜயசூரியவுக்கு புதிய பதவி

அந்தவகையில் ஹார்திக் பாண்டியா கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியினை வழிநடாத்தி வருகின்ற ரோஹிட் சர்மாவினை புதிய தலைவராக பிரதியீடு செய்யவிருக்கின்றார். மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து தடவைகள் ரோஹிட் சர்மாவின் ஆளுகையில் IPL சம்பியன் பட்டம் வென்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மும்பை இந்தியன்ஸ் அணியினால் புதிய பருவத்திற்கான IPL தொடருக்கு வீரர் பரிமாற்றம் மூலம் இணைக்கப்பட்ட ஹார்திக் பாண்டியா, கடந்த 2022 மற்றும் 2023ஆம் ஆண்டு IPL தொடர்களில் குஜராத் டைடன்ஸ் அணியினை வழிநடாத்தியிருந்ததோடு தனது ஆளுகையில் குஜராத் டைடன்ஸ் அணி 2022ஆம் ஆண்டு IPL சம்பியன் பட்டம் வெல்வதற்கும் காரணமாகியிருந்தார்.

>>மே.தீவுகள் வீரர்கள் ஒப்பந்தத்திலிருந்து விலகிய பூரன், ஹோல்டர்

ஹார்திக் பாண்டியாவை தலைவராக நியமித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட மும்பை இந்தியன்ஸ் அணியின் உலகளாவிய செயற்திறன் தலைமை அதிகாரி மஹேல ஜயவர்தன, பராம்பரியம் ஒன்றை கட்டமைப்பதற்கான விடயங்களின் ஒரு பகுதியே ஹார்திக் பாண்டியாவின் தலைவர் நியமனம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதேநேரம் புதிய அணித்தலைவருக்கு தனது வாழ்த்துக்களையும் மஹேல ஜயவர்தன தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<