உபாதை காரணமாக அணியிலிருந்து வெளியேறும் நசீம் ஷா

Asia Cup 2023

227
Asia Cup 2023

ஆசியக்கிண்ணத் தொடருக்கான பாகிஸ்தான் குழாத்திலிருந்து முன்னணி வேகப்பந்துவீச்சாளர் நசீம் ஷா நீக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற சுபர் 4 போட்டியின் போது நசீம் ஷாவின் தோற்படையில் உபாதை ஏற்பட்டது. இந்தநிலையில் உலகக்கிண்ணத்தை கருத்திற்கொண்டு அவரை ஆசியக்கிண்ணத் தொடரிலிருந்து நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக பாபர் அசாம்

அணியிலிருந்து நசீம் ஷா நீக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு பதிலாக மற்றுமொரு வேகப்பந்துவீச்சாளர் ஷமான் கான் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். ஷமான் கான் இன்றைய தினம் இலங்கை வந்தடைந்துள்ளடன், அணியின் பயிற்சிகளிலும் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் உபாதைக்குள்ளான மற்றுமொரு வேகப்பந்துவீச்சாளர் ஹரிஸ் ரவூப் உபாதையிலிருந்து குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் நாளைய போட்டியில் விளையாடுவாரா? இல்லையா? என்ற தகவல்கள் வெளியிடப்படாவிட்டாலும், தொடர்ந்தும் இவர் அணியுடன் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மற்றுமொரு வேகப்பந்துவீச்சாளர் ஷஹனவாஸ் டஹானி பாகிஸ்தான் அணியுடன் நாளை வியாழக்கிழமை (14) இணைந்துக்கொள்வார் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக்கிண்ணத் தொடரின் சுப்பர் 4 போட்டி நாளைய தினம் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி ஆசியக்கிண்ண இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<