சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் அணிகள் எவை?

2011
2025 CT qualification at stake during ODI World Cup

2025ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் சம்பியன்ஸ் கிண்ணத் (Champions Trophy) தொடரில் பங்கெடுக்கும் அணிகளை தெரிவு செய்வது எவ்வாறு என்பது தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.

>> உலகக் கிண்ண குழாத்தில் இருந்து வெளியேறும் லஹிரு குமார

2025ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் பாகிஸ்தானில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த தொடரில் மொத்தம் எட்டு அணிகள் பங்கெடுக்கவிருக்கின்றன. அந்தவகையில் தொடரில் பங்கெடுக்கும் எட்டு அணிகளும் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகின்ற ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் அடிப்படையில் தெரிவு செய்யப்படவிருக்கின்றன

அதாவது சம்பியன்ஸ் கிண்ணத் தொடரினை நடாத்தும் பாகிஸ்தானோடு சேர்த்து, தற்போதைய உலகக் கிண்ணத் தொடரின் லீக் போட்டிகள் முடிவுகளின் அடிப்படையில் உலகக் கிண்ணப் புள்ளிப்பட்டியலில் முதல் 7 ஏழு இடங்களைப் பெறும் அணிகள் சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்காக தெரிவு செய்யப்படவிருக்கின்றன.

இன்னும் சற்று விளக்கமாக கூறும் போது தற்போது உலகக் கிண்ண அணிகளுக்கான புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் முறையே 9ஆம் மற்றும் 10ஆம் இடங்களில் காணப்படுகின்றன. உலகக் கிண்ண லீக் போட்டிகள் நிறைவடையும் போது நிலைமைகள் இவ்வாறே காணப்படின் இங்கிலாந்து. பங்களாதேஷ் ஆகிய அணிகள் தவிர்த்து, பாகிஸ்தானுடன் புள்ளிப்பட்டியலில் முதல் 7 இடங்களைப் பெறும் அணிகள் சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்காக தெரிவு செய்யப்படவிருக்கின்றன

>> பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் குசல் மெண்டிஸ்!

இதேவேளை இந்த ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் ஆடும் வாய்ப்பினை இழந்த ICC இன் முழு அங்கத்துவ நாடுகளான மேற்கிந்திய தீவுகள், ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் ஆடும் வாய்ப்பினை பெறாத காரணத்தினால் 2025ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் ஆடும் வாய்ப்பினை தற்போதே இழந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.    

>>  மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<