பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் குசல் மெண்டிஸ்!

Bangladesh Premier League 2023

553

உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் தலைவராக செயற்பட்டுவரும் குசல் மெண்டிஸ் பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) தொடரில் செட்டகிரம் செலன்ஜர்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

குசல் மெண்டிஸ் உலகக்கிண்ணத்தின் முதல் இரண்டு போட்டிகளில் அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 65 பந்துகளில் சதமடித்திருந்தார். 

லங்கா T10 தொடரின் வீரர்கள் ஏலத்துக்கான திகதி அறிவிப்பு

உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணிக்காக வேகமாக சதத்தை அடித்தவர் என்ற சாதனையை பதிவுசெய்ததுடன், அதனைத் தொடர்ந்து தசுன் ஷானக உபாதை காரணமாக வெளியேறியதால் தலைவராக நியமிக்கப்பட்டார். 

குசல் மெண்டிஸ் சர்வதேசத்தில் நடைபெற்று வரும் T20 தொடர்களில் விளையாடி வருவதுடன், ஆரம்ப துடுப்பாட்ட வீரராக சிறந்த பெறுபேற்றுகளையும் பதிவுசெய்துள்ளார். இந்தநிலையில் BPL தொடரில் செட்டகிரம் செலன்ஜர்ஸ் அணிக்காக அடுத்த ஆண்டு குசல் மெண்டிஸ் விளையாடவுள்ளார். 

ஏழு அணிகள் பங்கேற்கும் BPL தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ளதுடன், இலங்கையைச் சேர்ந்த 11 வீரர்கள் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<