யுனைடட் அணியில் வாய்ப்புக் கிடைக்காமல் வெளியேறிய போல் பொக்பா

84

மன்செஸ்டர் யுனைடட் கழகத்தை விட்டு 2012 ஆம் ஆண்டு ஜுவன்டஸ் கழகத்தில் இணைவதற்கான காரணம் பற்றி போல் பொக்பா தற்போது வாய்திறந்துள்ளார். அந்த முடிவை எடுப்பதற்கு தமது சகோதரர் அதிக செல்வாக்கு செலுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

27 வயதுடைய பிரான்ஸ் வீரரான பொக்பா மன்செஸ்டர் யுனைடட் அகடமி ஊடாக அந்த அணியில் நுழைந்தபோதும் அவருக்கு பிரதான அணியில் போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 2011-2012 பருவத்தில் அவருக்கு ப்ரீமியர் லீக் போட்டியில் ஆட மூன்று முறையே அணியில் இடம் கிடைத்தது

கழிப்பறை சுத்தம் செய்யும் நட்சத்திர வீரர்: சாடியோ மானேயின் மறுபக்கம்

கால்பந்து மைதானத்தில் சாடியோ மானேவின் திறமை எல்லோருக்கும் தெரிந்ததே…

இத்தாலியின் ஜுவன்டஸ் அணிக்குச் சென்ற பின் ஐரோப்பாவின் சிறந்த மத்தியகள வீரராக உருவெடுத்த அவர் 2016ஆம் ஆண்டு அப்போதைய சாதனை தொகையாக 89 மில்லியன் பௌண்ட் விலைக்கு மீண்டும் மன்செஸ்டர் யுனைடட் அணிக்கு ஒப்பந்தமானார்.  

இந்நிலையில் அவர் மீண்டும் வேறு அணிக்கு மாறும் வாய்ப்புகள் குறித்து தற்போது பரவலாக பேச்சு அடிபடுகிறது. அவர் தொடர்பில் ரியல் மெட்ரிட் மற்றும் ஜுவன்டஸ்் கழகங்கள் ஆர்வம் காட்டுகின்றன. இதனிடையே பொக்பா 2012 ஆம் ஆண்டு தாம் ஜுவன்டஸ்் அணிக்கு சென்றது பற்றி கூறியுள்ளார்

எனக்கு விளையாட கிடைக்காதது பற்றி யுனைடட் ரசிகரான எனது சகோதரர் என்னை விடவும் அதிக கோபமாக இருந்தான் என்று மன்செஸ்டர் யுனைடட் கழகத்தின் உத்தியோகபூர்வ ஒளிபரப்பு சேவைக்கு பொக்பா கூறியுள்ளார்.  

சிறு வயது தொடக்கம் யுனைடட் அணிக்காக ஆடுவதற்கு கனவு கண்டிருந்த நீங்கள் 2012 இல் அந்தக் கழகத்தை கைவிட்டு ஜுவன்டஸ் அணிக்குச் செல்ல என்ன காரணம் என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். அப்போதைய யுனைடட் அணியின் தலைமை பயிற்சியாளர் அலெக்ஸ் பெர்கியுசன் தம்மீது அதிகம் நம்பிக்கை வைக்காமல் இருந்தது அதற்கு முக்கிய காரணமாக அமைந்ததாகத் தெரிவித்தார்.

அது எனக்கு மிகவும் கடினமான முடிவாக இருந்தது. அதற்கு அப்போது இருந்த தலைமை பயிற்சியாளர் போன்று எனக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தமும் காரணமாக இருந்தது என்று கூறலாம். ஒப்பந்தத்தை விடவும் அதற்குக் காரணமாக இருந்தது பயிற்சியாளர் என்மீது நம்பிக்கை காட்டவில்லை.   

அவர்தான் கால்பந்து வரலாற்றில் இருக்கும் மிகச் சிறந்த பயிற்சியாளர் என்று நான் இன்றும் நம்புகிறேன். ஆனால் புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடக் கூறி நான் அதனைச் செய்யாதபோது நான் பல நெருக்கடிகளை சந்திக்க வேண்டி ஏற்பட்டது. எனக்கு பயிற்சி பெற சரியான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, தனியாக பயிற்சி பெற வேண்டி இருந்தது போன்றவற்றை கூறலாம்.   

இது எனக்கு சற்று ஆத்திரத்தை எற்படுத்தியது. அதற்கு பணத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை. கால்பந்து வீரர்களுக்கு நீங்கள் சிறந்த வீரர் ஒருவர், உங்கள் மீது நாம் நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்ற உணர்வை தர வேண்டும். எனக்கு அணியில் விளையாட மாத்திரமே தேவை இருந்தது. அவ்வளவு தான் எனக்கு அணியில் விளையாடவே தேவை இருந்தது என்று குறிப்பிட்டார் பொக்பா.    

இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கும்போது பிளக்பேர்ன் அணிக்கு எதிரான போட்டியில் தம்மை அணியில் சேர்க்காதது தொடர்பில் தாம் அதிகம் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்தார்

பிளக்பேர்ன் உடன் நடைபெற்ற போட்டி ஒன்றின்போது எனக்கு விளையாட சந்தர்ப்பம் இருந்தது. அப்போதுதான் நான் அதிகம் வேதனை அடைந்தேன். அந்தப் போட்டியில் எமக்கு மத்தியகளம் ஒன்று இருக்கவில்லை. வீரர்கள் உபாதைக்கு உள்ளாகி இருந்தார்கள். போல் ஸ்கோல்ஸ் இருக்கவில்லை. அவர் உபாதைக்கு உள்ளாகி போட்டிகளில் இருந்து விலகிய இருந்ததாக எனக்கு ஞாபகம். ஜிசுங்பார்க் உடன் ரபாயேல் தான் மத்தியகளத்தில் ஆடினார். ஆனால் அந்தப் போட்டியில் என்னை இணைத்துக் கொள்ளவில்லை. அந்தப் போட்டியில் நாம் தோல்வி அடைந்தோம்

மைதானத்திற்கு வெளியில் நான் போட்டியில் ஆட தயாராகவே இருந்தேன். என்னை விளையாட அனுமதிப்பார்கள் என்றே நான் நினைத்தேன். அது எனக்கு மிகப் பெரிய சந்தர்ப்பமாக இருந்தது. ஆனால் என்னை போட்டியில் இணைக்கவில்லை

எல்லா விடயத்திலும் முடிவெடுக்கும் அதிகாரம் பயிற்சியாளரிடம் இருந்தது. அப்போது தான் அதிகம் கவலை அடைந்தேன். இது தான் எனது சந்தர்ப்பம் என்று நான் பட்ரிஸ் எவ்ராவிடம் கூறினேன். அவருடன் நான் அதிகம் பயிற்சி பெற்றதோடு அவர் எனக்கு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது எனக்கு வாய்ப்பு ஒன்று கிடைக்கும் என்று அவரும் என்னிடம் கூறியிருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. அன்று எனக்கு விளையாடக் கிடைக்காதது பற்றி அதிகம் ஏமாற்றம் அடைந்தேன் என்றார்.   

தொடர்ந்து பொக்பாவின் மூத்த சகோதரரும் தாம் யுனைடட் அணியை விட்டு வெளியேற காரணமாக இருந்தார் என்பதை அவர் விபரித்தார்.  

எனது சகோதரர் யுனைடட் ரசிகர். ஆனால் எனக்கு விளையாடக் கிடைக்காதது பற்றி அவர் என்னை விடவும் கோபத்தில் இருந்தார். அவர் என்னிடம் கூறினார், ‘உனக்கு இந்த அணியில் விளையாட முடியும் என்றாலும் அவர்களுக்கு நீ தேவையில்லை என்றால் வேறு கால்பந்து கழகம் ஒன்றுக்கு போய்விடு. அப்போது அவர்களுக்கு அது புரியும்’ என்றார்.” இவ்வாறு குறிப்பிட்டார் பொக்பா.  

கால்பந்து உலகை வெல்ல உயிருக்காக போராடும் நெதர்லாந்து நட்சத்திரம்

வளர்ந்து வரும் இளம் கால்பந்து வீரர் தொடக்கம் உயிருக்காக போராடும் கோமா நிலைக்குச்…

இதன்படி அவர் ஜுவன்டஸ் அணிக்கு மாறியபோது அது தமக்கு பெரும் சவாலாக இருக்கும் என்பதை அவர் தெரிந்தே இருந்தார்.   

எனவே நான் ஜுவன்டஸ் அணிக்கு சென்றேன். அது எனக்கு கடினமான முடிவாக இருந்தது. ஏனென்றால் அது வேறு கழகம் என்பதற்கு அப்பால் அதிலும் நான் முதல் பதினொருவர் அணியின் கட்டாய வீரராக இருக்க மாட்டேன் என்பதை தெரிந்தே இருந்தேன். ஏனென்றால் நான் அந்த அணிக்கு ஓர் இளம் வீரராகவே சென்றேன். நான் திறமையான இளம் வீரராக இருந்தபோதும் எனது திறமையை நான் மீண்டும் அங்கும் காண்பிக்க வேண்டும். அதனால் அது எனக்கு பெரும் சவாலாக இருந்தது. ஆனால் நான் அணிக்கு விளையாட தகுதி பெற்றவன் என்பதை காண்பிக்க நான் இதனைச் செய்ய வேண்டும் என்பதை நான் எனக்குள் கூறிக்கொண்டேன்.”

 “நீ போனாலும் மீண்டும் நிச்சயம் வருவாய் என்று ஜுவன்டஸ் கழகத்திற்கு அவர் செல்லும்போது அவரது தாய் அவருக்கு கூறியிருக்கிறார்.  

அவரது தாய் கூறியபோல் 2016 ஆம் ஆண்டு அவர் மீண்டும் யுனைடட் கழகத்திற்கு திரும்பினார். 2018 ஆம் ஆண்டு பிஃபா உலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் அணியில் முக்கிய வீரராக இருந்த பொக்பா அந்த தொடர் முழுவதும் உச்ச திறமையை வெளிப்படுத்தினார். என்றாலும் யுனைடட் அணி சார்பில் அவர் போதிய திறமையை வெளிப்படுத்த தவறி வருகிறார்

இளம் வயதிலேயே தமது தாய் நாடான பிரான்ஸை கைவிட்டு யுனைடட் அணியுடன் இணைவதற்கு எடுத்த முடிவு பற்றி அவரிடம் கேட்டபோது

அது எனக்கு இலகுவான முடியாவ இருந்தது. ஏனென்றால் அது மன்செஸ்டர் யுனைடட் கழகம். உண்மையில் அப்போது நான் லியோன் அணியுடன் ஒப்பந்தம் ஒன்றுக்கு வரவிருந்தேன். அவர்கள் எனக்கு தொழில்முறை வீரராவதற்கு ஒப்பந்தம் ஒன்றை வழங்கினார். வேறு நாடொன்றுக்குச் சென்று திறமையை காண்பிப்பது கடினம் என்பதால் பிரான்ஸிலேயே இருக்கும்படி பலரும் எனக்கு ஆலோசனை வழங்கினார்கள. ‘அவர்கள் தான் உலகின் மிகப்பெரிய கால்பந்து கழகம். இவ்வாறான வாய்ப்பு ஒன்று கிடைப்பது வாழ்க்கையில் ஒரு தடவைதான்’  என்று நான் அவர்களுக்கு பதில் அளித்தேன். ஆனால் உண்மையில் அந்த வாய்ப்பு எனக்கு இரண்டு தடவைகள் கிடைத்தன என்றார்.  

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<