ஐ.சி­.சிக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் கடிதம்

135

சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் (ஐ. சி. சி) அண்­மைய செயல் குறித்து அதிர்ச்சி வெளி­யிட்­டுள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம்இ தமக்கு பங்­கி­டப்­ப­ட­வேண்­டிய நிதியை நிறுத்தி வைத்­தமை நியாய­மற்­றது எனவும் குறிப்­பிட்­டுள்­ளது.

ஏப்ரல் 16 ஆம் திகதி நடை­பெற்ற ஆளுநர் சபைக் கூட்­டத்தில் திடீ­ரென எடுக்­கப்­பட்ட முடிவு ஒரு ‘தவ­றான வழி­ந­டத்தல்’ எனவும் சபை அதன் சொந்த கருத்தை வெளி­யிட்­டுள்­ள­தெ­னவும்  ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் குறிப்­பிட்­டுள்­ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தின் செயற்­பா­டுகள் குறித்து சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வைக்கு தொடர்ச்சி­யாகஇ குறிப்­பாக இடைக்­கால நிர்வாக சபை குறித்து அறி­விக்­கப்­பட்ட நிலை­யிலும் பேரவை இத்­த­கைய முடி­வு­களை எடுத்­தி­ருப்­பது அதிர்ச்சி தரு­கின்­றது என சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வைக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி அஷ்லி டி சில்வா அனுப்­பி­வைத்­துள்ள கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி டேவ் றிச்­சர்ட்­ச­னுக்கு முக­வ­ரி­யி­டப்­பட்­டுள்ள இக் கடி­தத்தின் பிர­திகள்இ பேர­வையின் தவி­சாளர் என். ஸ்ரீனி­வாசன்இ ஆளுநர் சபை உறுப்­பி­னர்கள்இ இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்தின் இடைக்­கால நிர்­வாக சபை உறுப்­பி­னர்கள் ஆகி­யோ­ருக்கும் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளன.