20 அணிகளுடன் இடம்பெறும் FFSL தலைவர் கிண்ணம்

467
FFSL

இலங்கை கால்பந்து போட்டிகள் கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் வருட இறுதியில் காணப்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக தடைப்பட்டிருந்தது. இந்த நிலையில், இவ்வருடம் கொவிட் -19 காரணமாக மீண்டும் கால்பந்து போட்டிகள் பாதிக்கப்பட்டன. 

தற்போது நாட்டின் சூழ்நிலை சற்று மாற்றமடைந்து வருவதன் காரணமாக மீண்டும் கால்பந்து போட்டிகளை நடாத்த இலங்கை கால்பந்து சம்மேளனம் தீர்மானித்து வருகின்றது. அதன்படி, 20 அணிகளை கொண்ட FFSL தலைவர் கிண்ண கால்பந்து தொடரை நடத்த திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

>>தகவல்களை கசியவிடுபவரைத் தேடும் FFSL<<

இந்த தொடர் குறித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கு கடந்த 30 ஆம் திகதி நாட்டின் 24 முன்னணி கால்பந்து கழகங்கள் அழைக்கப்பட்டிருந்த நிலையில், 20 கழகங்கள் மாத்திரமே கலந்துரையைாடலுக்கு வருகை தந்திருந்தன. அவ்வாறு வருகைதந்திருந்த 20 கழகங்களுக்கு இடையில் போட்டிகள் நடத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த இந்த தொடரினை மிகவும் சிறப்பாக நடத்தும் முகமாக அனைத்து கழகங்களுக்குமான தயார்படுத்தல்கள், பங்குபற்றல் மற்றும் போக்குவரத்து வசதிக்கான பொருளாதார உதவிகளை இலங்கை கால்பந்து சம்மேளனம் வழங்க முடிவுசெய்துள்ளது. 

கொழும்பு சுகததாஸ மைதானம் மற்றும் கொழும்பு குதிரைப்பந்தய சர்வதேச திடல் (Racecourse Ground) ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், மைதானத்துக்கு ரசிகர்கள் உள்வாங்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், அனைத்து போட்டிகளும் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ YouTube அலைவரிசையில், இலங்கை கால்பந்து தொலைக்காட்சி மூலமாக ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பங்குபற்றவுள்ள அணிகள் 

  1. டிபெண்டர்ஸ் கால்பந்து கழகம்
  2. கொழும்பு கால்பந்து கழகம்
  3. ப்ளூ ஸ்டார் கால்பந்து கழகம்
  4. சீ ஹோக்ஸ் கால்பந்து கழகம்
  5. ரினௌன் விளையாட்டுக் கழகம்
  6. ரத்னம் விளையாட்டு கழகம் 
  7. அப் கண்ட்ரி லயன்ஸ் விளையாட்டு கழகம்
  8. புளூ ஈகல்ஸ் விளையாட்டுக்  கழகம்
  9. ரெட் ஸ்டார்ஸ் கால்பந்து கழகம்
  10. நியூ யங்ஸ் கால்பந்து கழகம்
  11. மாத்தறை சிட்டி கழகம்
  12. ஜாவா லேன் விளையாட்டு கழகம்
  13. சௌண்டர்ஸ் விளையாட்டு கழகம்
  14. பொலிஸ்  விளையாட்டு கழகம்
  15. செரண்டிப் விளையாட்டு கழகம்
  16. க்ரிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகம் 
  17. சுப்பர் சன் விளையாட்டு கழகம்
  18. நிவ் ஸ்டார் விளையாட்டு கழகம்
  19. SLTB விளையாட்டு கழகம்
  20. மொரகஸ்முல்ல விளையாட்டு கழகம் 

>>மேலும் கால்பந்து செய்திகளை படிக்க<<