டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹெரி புரூக் படைத்த புதிய சாதனை!

178
Harry Brook breaks world record

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ஹெரி புரூக், டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் 9 இன்னிங்ஸ்களில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற புதிய சாதனையை பதிவுசெய்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 184 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றிருந்த ஹெரி புரூக் 9 இன்னிங்ஸ்களில் 800 ஓட்டங்களை விளாசியுள்ளார்.

>> தென்னாபிரிக்க அணியுடன் இணையும் நெயில் மெக்கன்சி

ஹெரி புரூக் இதன் மூலம், முதல் 9 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 800 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட முதல் வீரர் என்ற பெருமையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

அதேநேரம் 9 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 4 சதம் மற்றும் 3 அரைச்சதங்களை விளாசியுள்ள இவர், 100.87 என்ற ஓட்ட சராசரியை கொண்டுள்ளார். அதுமாத்திரமின்றி நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இவர் முதல் இரட்டைச்சதத்தையும் நெருங்கியுள்ளார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை முதல் 9 இன்னிங்ஸ்களில் அதிக ஓட்டங்களை பெற்றவர் என்ற சாதனையை இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் கம்லி பெற்றிருந்தார்.

இவர் 99.75 என்ற ஓட்ட சராசரியில் 798 ஓட்டங்களை பெற்று இந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<