வருடத்தின் முதல் வெற்றியை சுவைக்கப்போவது இலங்கையா? இந்தியாவா?

64
 

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர் நாளைய தினம் (5) குவஹாத்தி கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

புதிய ஆண்டில் இரண்டு அணிகளும் தங்களுடைய முதல் சர்வதேச தொடரை எதிர்கொள்ள காத்திருக்கும் அதே சந்தர்ப்பத்தில், உலகக் கிண்ணம் நெருங்கி வரும் நிலையில், இரண்டு அணிகளுக்கும் இது முக்கியமான தொடராகவும் அமையவுள்ளது.

இலங்கைக்கு எதிரான இந்திய T20 குழாம் அறிவிப்பு

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷின் ஒரு அங்கமாக 2 போட்டிகள் கொண்ட…

இலங்கை அணியை பொருத்தவரையில், கடந்த வருடம் சிறப்பானதாக அமைந்திருக்கவில்லை. இலங்கை அணி விளையாடிய 5 T20 தொடர்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் மாத்திரமே வெற்றிபெற்றிருந்தது. ஏனைய அனைத்து தொடர்களிலும் முழுமையான தோல்விகளை சந்தித்திருந்த இலங்கை, நியூசிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் மாத்திரம் ஒரு வெற்றியை பெற்றிருந்தது.

ஒட்டுமொத்தமாக இலங்கை அணியை பார்க்கும் போது, இந்தியாவுக்கு சமபலமான போட்டியை கொடுக்கக்கூடிய அணியாக உள்ளது. எனினும், தங்களுடைய திறமைகளை வீரர்கள் சரியான நேரத்தில் வெளிக்காட்ட தவறுவதுதான் அணிக்கு மிகப்பெறும் சிக்கலாக மாறியுள்ளது.

அஞ்செலோ மெதிவ்ஸ் T20 அணிக்கு திரும்பியுள்ளமையானது இலங்கை கிரிக்கெட்டுக்கு மிகச்சிறந்த வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளதுடன்,  அணியில் தொடர்ந்தும் இடம்பிடிக்கும் வீரர்களும் ஒவ்வொரு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக T20 தரவரிசையில் முதல் நிலை அணியான பாகிஸ்தானை அவர்களது சொந்த மண்ணில் வைத்து இலங்கை அணி, வைட்-வொஷ் செய்திருந்தது. இப்படி பார்க்கும் போது வீரர்களிடத்தில் திறமை இருந்தும், தொடர்ச்சியாக அதனை வெளிக்காட்ட தவறுகின்றனர் என்பதை அறியமுடிகின்றது.

எனினும், புதிய ஆண்டில் தங்களுடைய தோல்விகளை மறந்து புத்துணர்ச்சியுடன் விளையாட காத்திருக்கும் இலங்கை அணி, பலம் மிக்க இந்திய அணிக்கு சவாலை கொடுக்கும் முனைப்புடன் முதல் போட்டிக்காக காத்திருக்கிறது.

இந்திய அணயை பொருத்தவரையில் எந்தவித சந்தேகமும் இன்றி பலமான அணியாக உள்ளது. தற்போது தங்களுடைய முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ராவையும் அழைத்து மேலும் பலமான அணியாக மாறியுள்ளது. எனினும், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மாவுக்கு இந்திய அணி ஓய்வை வழங்கியுள்ளது.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியானது வெளிநாட்டு மண்ணில் வெற்றிகளை குவித்து வருவதுடன், தங்களுடைய சொந்த மண்ணில் எதிரணிகளை மிரட்டி வருகின்றது. இப்படிப்பட்ட இந்திய அணி கடந்த வருடம் 5 T20 தொடர்களில் விளையாடி 3 வெற்றிகளை பெற்றுள்ளதுடன், ஒரு தோல்வியினை மாத்திரமே சந்தித்துள்ளது.

அதேநேரம், இறுதியாக நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரையும் தம்வசப்படுத்தியிருக்கும் இந்திய அணி, புதிய வருடத்தை வெற்றியுடன் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளது.

இரண்டு அணிகளதும் கடந்தகால மோதல்கள்

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் ஒட்டுமொத்தமாக 16 T20 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், இந்திய அணி 11 வெற்றிகளையும், இலங்கை அணி 5 வெற்றிகளையும் பெற்றுள்ளன.

இலங்கை அணி 5 வெற்றிகளை குவித்திருந்தாலும், இருதரப்பு தொடர்களில் இந்திய அணி அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெற்றுள்ள இருதரப்பு தொடர்களில் இலங்கை அணி ஒரு தொடர் வெற்றியையும் பெற்றிருக்கவில்லை.

அதேநேரம், இந்திய அணி தங்களுடைய சொந்த மைதானத்தில் இலங்கை அணியை 8 போட்டிகளில் எதிர்கொண்டுள்ளதுடன், 6 போட்டிகளில் வெற்றியை பெற்றுள்ளதுடன், 2 போட்டிகளில் மாத்திரமே தோல்விகண்டுள்ளது.

எதிர்பார்ப்பு வீரர்கள்

லசித் மாலிங்க

இலங்கை T20 அணியை எடுத்துக்கொண்டால், அதிகமான எதிர்பார்ப்புகளை கொண்டவர் லசித் மாலிங்க. அதிலும், இந்தியாவின் மைதானங்களில் ஐ.பி.எல். தொடரின் மூலம் அதிகமாக விளையாடியுள்ள வீரரும் இவர்தான்.

சர்வதேச T20 அரங்கில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள ஒரே வீரர் என்ற பெருமையை தக்கவைத்திருக்கும் இவர், இந்தியாவுக்கு எதிரான இந்த தொடரில் இலங்கை அணியின் துறுப்புச்சீட்டாகவும் உள்ளார்.

வேகப் பந்துவீச்சில் இலங்கை அணிக்கு வலுவூட்டுவார் என்பதுடன், இந்திய ஆடுகளங்களில் எவ்வாறு பந்துவீச வேண்டும் என்ற யுத்திகளையும் மாலிங்கவால் இலங்கை அணியின் இளம் வீரர்களுக்கு வழங்க முடியும். லசித் மாலிங்க இதுவரையில், 79 T20 போட்டிகளில் 106 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

விராட் கோஹ்லி

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோஹ்லி அனைத்துவகையான போட்டிகளிலும் எதிரணிக்கு சவால் கொடுக்கக்கூடியவர். நீண்ட நாட்களுக்கு பின்னர், T20 போட்டிகளில் விளையாட ஆரம்பித்த கோஹ்லி, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இலகுவாக ஓட்டங்களை குவித்து எதிரணிக்கு சவால் கொடுத்திருந்தார்.

அதேநேரம், தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடும் இந்திய அணியின் துடுப்பாட்டத்துக்கு, விராட் கோஹ்லி முக்கியமான வீரராக உள்ளதுடன், அவருடைய ஆக்ரோஷமான அணித் தலைமை இந்திய அணிக்கு இந்த தொடரில் சாதகத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விராட் கோஹ்லி 75 T20 போட்டிகளில் விளையாடி 52.66 என்ற சராசரியில் 2633 ஓட்டங்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய தொடருக்கான இலங்கை T20I குழாம் வெளியானது!

இந்திய அணிக்கு எதிராக எதிர்வரும் 5ம் திகதி ஆரம்பமாகவுள்ள…

அணிக்குழாம்கள்

இலங்கை

லசித் மாலிங்க (தலைவர்), குசல் பெரேரா, தனுஷ்க குணதிலக்க, அவிஷ்க பெர்னாண்டோ, பானுக ராஜபக்ஷ, ஓஷத பெர்னாண்டோ, தசுன் ஷானக, அஞ்செலோ மெதிவ்ஸ், நிரோஷன் டிக்வெல்ல, குசல் மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, லக்ஷான் சந்தகன், தனன்ஜய டி சில்வா, லஹிரு குமார, இசுரு உதான, கசுன் ராஜித

இந்தியா

ஷிகர் தவான், விராட் கோஹ்லி (அணித்தலைவர்), லோகேஷ் ராஹுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பான்டே, சஞ்சு சம்ஸன், றிஷாப் பாண்ட், சிவம் டுபே, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, சர்துல் தாகூர், நவ்தீப் சைனி, ஜஸ்பிரிட் பும்ரா, வாஷிங்டன் சுந்தர்

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க