தமது அணிகளை மீட்ட லக்ஷித மற்றும் ப்ரபாஷ்

132

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட பிரிவு – 1 பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் 4 போட்டிகள் இன்று நிறைவுக்கு வந்தன. இதன்படி, புனித தோமியர், தஸ்டன், கோட்டே ஜனாதிபதி மற்றும் நாலந்த ஆகிய கல்லூரிகள் முதல் இன்னிங்ஸ் முன்னிலைக்கான புள்ளிகளுடன் போட்டியை சமநிலையில் நிறைவுக்கு கொண்டுவந்தன.

நாலந்த கல்லூரி, கொழும்பு எதிர் புனித பேதுரு கல்லூரி, கொழும்பு

தமது சொந்த மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் முதல் இன்னிங்சுஸுக்காக துடுப்பெடுத்தாடிய நாலந்த கல்லூரி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.    

பந்துவீச்சில் புனித பேதுரு அணிக்காக மொஹமட் அமீன் 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

தர்ஸ்ட்டன் கல்லூரிக்காக விக்கெட்டுகளை வீழ்த்தி வலுச்சேர்த்த நிபுன் லக்ஷான்

சிங்கர் நிறுவன அனுசரணையில் …

இதனையடுத்து இன்றைய இரண்டாம் நாளில் தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய புனித பேதுரு அணியினர், ரன்மித் ஜயசேனவின்(53) அரைச்சதத்தின் உதவியால் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.  

துடுப்பாட்டத்தைப் போல பந்துவீச்சிலும் அசத்திய நாலந்த அணியின் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் லக்ஷித ரசன்ஜன 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

இதனையடுத்து தமது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த நாலந்த கல்லூரி, 87 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்த போது போட்டி சமநிலையோடு முடிவடைந்தது.

போட்டியின் சுருக்கம்

நாலந்த கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 219/10 (76.2) – சமிந்து விஜேசிங்க 47, லக்ஷித ரசன்ஜன 40, ருசிரு டி சில்வா 22, டில்ஹார பொல்கம்பல 21, மொஹமட் அமீன் 3/51, பபசர ஹேரத் 2/14   

புனித பேதுரு கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 154/10 (52.5) – ரன்மித் ஜயசேன 53, சாலித பெர்னாந்து 25, ஷெனொன் பெர்னாந்து 24, லக்ஷித ரசன்ஜன 5/30, சமிந்து விஜேசிங்க 3/24

நாலந்த கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 87/2 (36) – அவிஷ்க பெரேரா 37*, ருசிரு டி சில்வா 28, சச்சின் சில்வா 2/07

முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றது.

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் இடையில் நடைபெறவுள்ள முதல் பகலிரவு டெஸ்ட்

பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்குப்…

ஜனாதிபதி கல்லூரி, கோட்டே எதிர் புனித ஜோன்ஸ் கல்லூரி, பாணந்துறை

பாணந்துறையில் நடைபெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஜனாதிபதி கல்லூரி, முதல் இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது

இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த புனித ஜோன்ஸ் கல்லூரி, 138 ஓட்டங்களுக்கே சுருண்டது. பந்துவீச்சில் ஹசிந்து பிரமுக்க 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்நிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த ஜனாதிபதி கல்லூரி, 7 விக்கெட்டுக்களை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தமது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

இதனையடுத்து 336 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த புனித ஜோன்ஸ் கல்லூரி, 157 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்த போது போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்  

ஜனாதிபதி கல்லூரி, கோட்டை (முதல் இன்னிங்ஸ்) – 173/10 (45) – ரிபாஸ் மொஹமட் 70, தினெத் நெலும்தெனிய 32, சமிந்து விக்ரமாரச்சி 4/36, அஷேன் தில்ஹார 3/40, சசித்த மனுப்ரிய 3/53

புனித ஜோன்ஸ் கல்லூரி, பாணந்துறை (முதல் இன்னிங்ஸ்) – 138/10 (39.4) – ரெஷான் பெர்னாண்டோ 37, பிரவீன் சந்தமால் 28, அஷேன் தில்ஹார 21, ஹசிந்து பிரமுக்க 4/41, தனுல சமோத் 3/41

ஜனாதிபதி கல்லூரி, கோட்டை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 300/7d (64.5) – தஷிக நிர்மால் 92, ஹிருன சிகேரா 81, கனிந்து தெவ்மின 61, சமிந்து விக்ரமாரச்சி 3/82, அஷேன் தில்ஹார 2/43

புனித ஜோன்ஸ் கல்லூரி, பாணந்துறை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 157/7 (42) – ரெஷான் பெர்னாண்டோ 53*, பிரவீன் சந்தமால் 35, ஹசிந்து பிரமுக்க 3/37

முடிவு போட்டி சமநிலையில் முடிவுற்றது.

ஐ.சி.சி இன் புதிய டெஸ்ட் தரப்படுத்தலில் இலங்கை வீரர்கள் முன்னேற்றம்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் …

புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை எதிர் புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு

புனித தோமியர் கல்லூரி மைதானத்தில் முடிவுக்கு வந்த இவ்விரு கல்லூரிகளுக்கு இடையிலான பாரம்பரியமிக்க போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது.

மனீஷ ரூபசிங்கவின் (133) அபார சதத்தின் மூலம் வலுவான நிலையை எட்டிய புனித தோமியர் கல்லூரி அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 230 ஓட்டங்களை பெற்ற நிலையில் முதல் இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டது.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த புனித பெனடிக்ட் கல்லூரி 150 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இந்நிலையில், தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய புனித தோமியர் கல்லூரி, 153 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்த போது போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை (முதல் இன்னிங்ஸ்) – 230/6d (62.3) – மனீஷ ரூபசிங்க 133, டெலோன் பீரிஸ் 50, ப்ருத்வி ஜெகராஜசிங்கம் 2/35, மஹேஷ் தீக்ஷன 2/76

புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 150/10 (67.5) – அஷான் சில்வா 39, ஷெஹான் பெர்னான்டோ 37, ஷெனன் பெர்னான்டோ 4/09, தெவின் இரியகம 2/21

புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 153/5 (34) – மதில விஜேரட்ன 57, மனீஷ ரூபசிங்க 44, மஹேஷ் தீக்ஷன 2/20

முடிவு போட்டி சமநிலையில் முடிவுற்றது.


மொரட்டு மஹா வித்தியாலயம், மொரட்டுவை எதிர் தஸ்டன் கல்லூரி, கொழும்பு

குழுவுக்கான மோதலாக மொரட்டு மஹா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நிபுன் லக்ஷானின் அதிரடி பந்துவிச்சு மூலம் மொரட்டு மஹா வித்தியாலயத்தை 164 ஓட்டங்களுக்கு சுருட்டிய தஸ்டன் கல்லூரி தமது முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது. இதில் மொரட்டு அணியின் ஏழு விக்கெட்டுகளை நிபுன் லக்ஷான் பதம்பார்த்தார்.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடிய தஸ்டன் கல்லூரி, சவன் பிரபாஷ்(95), நிமேஷ் பெரோ(80), பன்சிலு தேஷான்(55), ஆகியோரின் அரைச் சதங்களின் உதவியால் 303 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

இதனையடுத்து 139 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மொரட்டு அணியினர், இன்றைய ஆட்டநேர முடிவின் போது சகல விக்கெட்டுக்களை இழந்து 259 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள, போட்டி சமநிலையில் முடிவுற்றது. அவ்வணி சார்பாக செஹத நிச்சேந்திர 92 ஓட்டங்களையும், நிஷான் மதுஷ்க 67 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.

போட்டியின் சுருக்கம்

மொரட்டு மஹா வித்தியாலயம், மொரட்டுவை (முதல் இன்னிங்ஸ்) – 164 (38.3)ஜீவந்த பெர்னாண்டோ 50, நதித் விஷேந்திர 46, நிபுன் லக்ஷான் 7/61

தஸ்டன் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 303/9d (71.3) – சவன் பிரபாஷ் 95, நிமேஷ் பெரேரா 80, பன்சிலு டேஷான் 55, ஜீவந்த பெர்னாண்டோ 2/64

மொரட்டு மஹா வித்தியாலயம், மொரட்டுவை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 259/10 (71) – செஹத நிச்சேந்திர 92, நிஷான் மதுஷ்க 67, சவன் பிரபாஷ் 4/32, சந்தரு டயஸ் 4/48

முடிவு போட்டி சமநிலையில் முடிவுற்றது.