மேலும் மூன்று வீரர்களை ஆஸி. வரவைக்கும் இலங்கை கிரிக்கெட் அணி

5360

இலங்கை கிரிக்கெட் அணி T20 உலகக் கிண்ண குழாத்தில் இணைக்கும் நோக்குடன் மூன்று வீரர்களை இலங்கையில் இருந்து T20 உலகக் கிண்ணம் நடைபெறும் இடமான அவுஸ்திரேலியாவிற்கு வரவழைக்கவிருக்கின்றது.

அவுஸ்திரேலியாவுடன் இலங்கை அணிக்கு காத்திருக்கும் மிகப் பெரிய சவால்

அதன்படி விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரர் நிரோஷன் டிக்வெல்ல, வேகப்பந்துவீச்சாளர்களான மதீஷ பத்திரன மற்றும் அசித்த பெர்னாண்டோ ஆகியோரே அவுஸ்திரேலியாவிற்கு இலங்கையில் இருந்து வரவழைக்கப்படும் வீரர்களாக காணப்படுகின்றனர்.

அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை அணியின்  T20 உலகக் கிண்ண குழாத்தில் இருக்கும் டில்சான் மதுசங்க, துஷ்மன்த சமீர மற்றும் தனுஷ்க குணத்திலக்க ஆகியோர் காயம் காரணமாக தொடரில் இருந்து முன்னதாக வெளியேறியிருந்ததோடு, இவர்களுக்குப் பதிலாக கசுன் ராஜித, பினுர பெர்னாண்டோ மற்றும் அஷேன் பண்டார ஆகியோருக்கு இலங்கை குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

எனினும் இலங்கை அணியில் தொடர்ந்து உபாதைச் சிக்கல்கள் காணப்படும் நிலையில் இதற்கு முன்னெச்செரிக்கையுடன் இருக்கும் பொருட்டே மூன்று வீரர்கள் நாட்டில் இருந்து அழைக்கப்பட்டிருக்கின்றனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசக பயிற்சியாளராக இருக்கும் மஹேல ஜயவர்தனவும் உபாதைச் சிக்கல்களை கருத்திற்கொண்டு மேலதிக வீரர்கள் இலங்கையில் இருந்து அழைக்கப்படுவர் என முன்னர் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

WATCH – சுபர் 12 சுற்றில் பல சவால்கள்! ; கேள்விகளுக்கு விடைகாணுமா இலங்கை?

அதேநேரம் சிறு காயங்களுக்கு உள்ளான பெதும் நிஸ்ஸங்க மற்றும் ப்ரமோத் மதுசங்க ஆகியோர் தொடர்ந்து போட்டிகளில் ஆடுவர் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதேநேரம் இலங்கை கிரிக்கெட் உயர் செயல்திறன் நிலையத்தின் தலைமை அதிகாரியாக இருக்கும் டிம் மெக்கெஸ்கில்லும் இந்த வீரர்களுடன் அவுஸ்திரேலியா பயணமாகுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<