வரலாற்றில் இன்று: செப்டம்பர் மாதம் 09

3462
OTD-Sep-09
 

1991ஆம் ஆண்டு – தசுன் ஷானக பிறப்பு

இலங்கை கிரிக்கட் அணியின் இன்னுமொரு வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் சகலதுறை வீரரான தசுன் ஷானகவின் பிறந்த தினமாகும்.

முழுப் பெயர் : மதகமகமகே தசுன் ஷானக
பிறப்பு : 1991ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09ஆம் திகதி
பிறந்த இடம் : நீர்கொழும்பு
வயது : 25
விளையாடிய காலப்பகுதி : 2015ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையான காலப்பகுதி
துடுப்பாட்ட பாணி : வலதுகை துடுப்பாட்டம்
விளையாடும் பாணி : சகலதுறை வீரர்
உயரம் : 6 அடி
காலி : செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரி மற்றும் நீர்கொழும்பு மாரீஸ் ஸ்டெல்லா கல்லூரி

விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் : 07
மொத்த ஒருநாள் ஓட்டங்கள் : 119
அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் : 42
ஒருநாள் துடுப்பாட்ட சராசரி : 19.83

விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் : 01
மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் : 04
அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் : 04
டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி : 2.00

விளையாடியுள்ள டி20 போட்டிகள் : 11
மொத்த டி20 ஓட்டங்கள் : 112
அதிகபட்ச டி20 ஓட்டம் : 27
டி20 துடுப்பாட்ட சராசரி : 11.20

பந்துவீச்சில் மித வேகப்பந்து வீச்சாளரான தசுன் ஷானக ஒருநாள் போட்டிகளில் 5 இனிங்ஸ்களில் பந்துவீசி 20.16 என்ற பந்துவீச்சு சராசரியில் 6 விக்கட்டுகளையும், டெஸ்ட் போட்டிகளில் 1 இனிங்ஸில் பந்துவீசி 15.33 என்ற பந்துவீச்சு சராசரியில் 3 விக்கட்டுகளையும், டி20 போட்டிகளில் 6 இனிங்ஸ்களில் பந்துவீசி 18.25 என்ற பந்துவீச்சு சராசரியில் 4 விக்கட்டுகளையும் வீழ்த்தி உள்ளார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : செப்டம்பர் மாதம் 08


1982ஆம் ஆண்டு – கிரஹாம் ஒனியன்ஸ் பிறப்பு

இங்கிலாந்து கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிரஹாம் ஒனியன்ஸின் பிறந்த தினமாகும்.

முழுப் பெயர் : கிரஹாம் ஒனியன்ஸ்
பிறப்பு : 1982ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09ஆம் திகதி
பிறந்த இடம் : கேட்ஸ்ஹெட்
வயது : 34
விளையாடிய காலப்பகுதி : 2009ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையான காலப்பகுதி
பந்துவீச்சு பாணி : வலதுகை வேகப்பந்து வீச்சு
கல்வி : புனித தோமஸ் கல்லூரி பிளேடன்
உயரம் : 6 அடி 2 அங்குலம்

விளையாடிய ஒருநாள் போட்டிகள் – 04
கைப்பற்றிய ஒருநாள் விக்கட்டுகள் – 4
சிறந்த ஒருநாள் பந்துவீச்சு – 58/2
ஒருநாள் பந்துவீச்சு சராசரி – 46.25

விளையாடிய டெஸ்ட் போட்டிகள் – 09
கைப்பற்றிய டெஸ்ட் விக்கட்டுகள் – 32
சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு – 38/5
டெஸ்ட் பந்துவீச்சு சராசரி – 29.90

1994ஆம் ஆண்டு – சச்சின் டெண்டுல்கரின் 1ஆவது சதம்

1994ஆம் ஆண்டு கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் சிங்கர் கிண்ண போட்டிகளின் போது அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் விளையாடின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. இதன் படி முதலில் ஆடிய இந்தியா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுகளை இழந்து 246 ஓட்டங்களைப் பெற்றது. இதில் சச்சின் டெண்டுலகர் 110 ஓட்டங்களையும் வினோத் கம்லி ஆட்டம் இழக்காமல் 43 ஓட்டங்களையும் பெற்றனர். இந்த போட்டியில் தான் சச்சின் டெண்டுல்கர் தனது 78ஆவது ஒருநாள் போட்டியில் தனது 1ஆவது சதத்தைp பெற்று இருந்தார் என்பது முக்கிய அம்சமாகும்.

செப்டம்பர் மாதம் 09ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
1875 ஜாக் ஓ ‘கானர் (அவுஸ்திரேலியா)
1880 ஜேம்ஸ் மகே (அவுஸ்திரேலியா)
1947 சலீம் பர்வேஸ் (பாக்கிஸ்தான்)
1949 டேவிட் ஹோர்ன் (அவுஸ்திரேலியா)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்