SAG தொடருக்கான இலங்கையின் கிரிக்கெட் அணிகள் அறிவிப்பு

58

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (SAG) இந்த ஆண்டு (2019) 13ஆவது தடவையாக எதிர்வரும் டிசம்பர் மாதம் 01ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரையில் நேபாளத்தின் தலைநகரான கத்மண்டுவில் நடைபெறவிருக்கின்றது. 

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில், பங்கெடுக்கும் நாடுகள் (இளையோர் கிரிக்கெட் அணிகள்) இடையே T20 கிரிக்கெட் தொடரும் இடம்பெறவிருக்கின்றது. 

“த ஹன்ரட்” கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் விலைபோகாத மாலிங்க, கெயில்

இங்கிலாந்து கிரிக்கெட் சபை நடாத்தவுள்ள ………

எட்டு நாடுகள் பங்குபெறும் இந்த T20 கிரிக்கெட் தொடர் ஆடவர், மகளிர் என இரு பாலாருக்கும் நடைபெறவுள்ள நிலையில் தொடரில் பங்கெடுக்கும் இலங்கையின் ஆடவர், மகளிர் கிரிக்கெட் குழாம்கள் இலங்கை கிரிக்கெட் சபையினால் நேற்று (23) அறிவிக்கப்பட்டுள்ளது. 

அறிவிக்கப்பட்டுள்ள அணிகளில் T20 தொடருக்கான 14 பேர் அடங்கிய இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியினை அதிரடி சகலதுறை வீரரான சரித் அசலன்க தலைமை தாங்குகின்றார். இதேவேளை, இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்காக ஆடியிருக்கும் கமிந்து மெண்டிஸ் இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியின் உப தலைவராக செயற்படவிருக்கின்றார். 

இத்தொடருக்கான இலங்கை ஆடவர் அணியின் துடுப்பாட்டம் பெதும் நிஸ்ஸங்க, ஹசித போயகொட மற்றும் விஷ்வ சத்துரங்க ஆகியோரினால் வலுப்படுத்தப்படுகின்றது. இவர்களோடு முன்வரிசையில் துடுப்பாடும் ஷம்மு அஷானும் இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணிக்கு தனது துடுப்பாட்டம் மூலம் பலம் சேர்க்கின்றார். 

டெஸ்ட் துடுப்பாட்ட வரிசையில் ரோஹித் சர்மாவுக்கு பாரிய முன்னேற்றம்

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட……..

இலங்கை ஆடவர் அணியின் பந்துவீச்சானது வேகப் பந்துவீச்சாளர் அசித்த பெர்ணாந்து, கலன பெரேரா போன்ற இளம் நட்சத்திர வீரர்களால் உறுதியாக்கப்படுகின்றது. இலங்கை ஒருநாள் அணிக்காக ஆடியிருக்கும் அசித்த பெர்னாந்து, அண்மையில் நடைபெற்று முடிந்த பங்களாதேஷ் A அணிக்கு எதிரான உத்தியோகபூர்மற்ற டெஸ்ட் தொடரில் சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இன்னும், இலங்கை ஆடவர் அணியின் பந்துவீச்சுத் துறைக்கு  சுழல் பந்துவீச்சாளர்களான துவிந்து திலகரட்ன மற்றும் கனிஷ்க அஞ்சுல ஆகியோரும் பெறுமதி சேர்க்கவுள்ளனர்.  

இலங்கை ஆடவர் கிரிக்கெட் குழாம்  

பெத்தும் நிஸ்ஸங்க, ஹசித போயகொட, விஷ்வ சத்துரங்க, சரித் அசலன்க (தலைவர்), கமிந்து மெண்டிஸ் (உப தலைவர்), அஷேன் பண்டார, ஷம்மு அஷான், நிஷான் மதுஷ்க, ஜெஹான் டேனியல், அசித்த பெர்ணாந்து, கலன பெரேரா, துவிந்து திலகரட்ன, சசிந்து கொலம்பகே, கனிஷ்க அஞ்சுல

போராட்டத்தில் ஈடுபட்ட பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள்

கிரிக்கெட் உலகில் வினோதமான சம்பவங்கள் இடம்பெறுவது ……..

மறுமுனையில் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான 15 பேர் அடங்கிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, தேசிய கிரிக்கெட் அணி வீராங்கனையான ஹர்சித மாதவி மூலம் வழிநடாத்தப்படுகின்றது. 

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 

ஹர்சித மாதவி (அணித்தலைவி), கவீஷ டில்ஹாரி, சத்யா சந்தீப்பனி, உமேஷா திம்சானி, தரிக்கா செவ்வந்தி, லிஹினி அப்சரா, ஜிமன்ஜலி விஜேநாயக்க, சச்சினி நிஷன்சல, நிலக்ஷன சந்தமினி, சயானி ஓசதி, மல்ஷா ரணதுங்க, தாருக்க செஹானி, சிக்காரி நுவன்த, சச்சினி டி சில்வா, ஜனதி அனாலி

கடைசியாக 2010ஆம் ஆம் ஆண்டு நடைபெற்றிருந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் T20 தொடரில் பங்கெடுத்திருந்த இலங்கையின் ஆடவர் கிரிக்கெட் அணி அப்போது வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<