அகால மரணமடைந்த இளம் ரக்பி வீரர்

130

CR & FC கழகத்தின் முன்கள வீரர்களில் ஒருவராக விளையாடிவரும் ரக்பி வீரரான கோகில சம்மந்தபெரும நேற்று (28) மாலை இடம்பெற்ற கோர விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார்.

தனது வழமையான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சம்மந்தபெரும நேற்று உயர்த்தி (Elevator) ஒன்றில் செல்லும் போது குறித்த உயர்த்தி பழுதடைந்துள்ளது. இந்த உயர்த்தி பழுதடையும் போது இடம்பெற்ற விபத்திலேயே சம்மந்தன்பெருமவின் உயிர் பறிபோயிருக்கின்றது.

தனது 25 வயதிலேயே அகால மரணமடைந்திருக்கும் சம்மந்தன்பெரும கொழும்பு வெஸ்லி கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆசிய கிண்ணம் வென்ற மங்கைகளை கௌரவித்த ஈவினை சமூகம்

இலங்கை தேசிய வலைப்பந்து அணியினை ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக பிரதிநிதித்துவம் செய்து வரும்…

“மார்க்கோ” என்னும் செல்லப்பெயரினால் அழைக்கப்படும் சம்மந்தபெருமவின் தீடிர் மரணம் இலங்கையின் ரக்பி விளையாட்டு வீரர்களையும், ரக்பி ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கின்றது.

கோகில சம்மந்தப்பெரும CR & FC கழகத்திற்காக தனது மூத்த சகோதரர் ஷேன் சம்மந்தபெரும உடன் இணைந்து தொழில்முறை ரக்பி வீரராக தனது பயணத்தினை ஆரம்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கோகில சம்மந்தப்பெருமவின் இழப்பிற்கு ThePapare.com தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றது.

 >>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<