சச்சின் சாதனையை முறியடிக்கும் மேத்யூஸ்

119

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சினின் டெஸ்ட் சாதனையை அஞ்சலோ மேத்யூஸ் முறியடிப்பார் என்று இலங்கை அணியின் முன்னாள் மேலாளர் டி ஸொய்சா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்இ ஜெயவர்த்தனேஇ சங்கக்காரா ஆகியோர் அணியில் இல்லாத நிலையில் அவர் தலைமைத்தாங்க வேண்டும்இ அப்போது அவரது திறமையை நாம் உண்மையில் பார்க்க முடியும்.

2015 உலகக்கிண்ணப் போட்டிகள் வரைஇ அஞ்சலோ மேத்யூஸின் வளர்ச்சி பிரமாதமானது. அவர் என்ன இடத்தை நிரப்ப வேண்டுமோ அதனை நிரப்பியுள்ளார்.

தற்போது செல்லும் பாணியில் அவர் சென்றால் சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் சதங்கள் சாதனையை முறியடிக்க முடியும்.

அதே போல தற்போது வைத்திருக்கும் சராசரியை நீடித்து நிலைக்கச் செய்ய முடியும். இலங்கை கிரிக்கெட்டுக்கு அவர் இன்னும் நிறைய பங்களிப்புகளை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

46 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ள மேத்யூஸ்இ 3இ193 ஓட்டங்களை 51.50 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ளார். இதில் 4 சதங்கள்இ 20 அரைசதங்கள் அடங்கும்.

மேலும் 156 ஒருநாள் போட்டிகளில் 3இ783 ஓட்டங்களை 1 சதம் மற்றும் 26 அரைசதங்களுடன் எடுத்துள்ளார்.