30 ஆண்டுகளில் இலங்கை சந்தித்த மோசமான தோல்வி

954
How it can be a Historical loss for Sri Lanka Crickcet

ஜிம்பாப்வேயிடமும் தொடர் தோல்வியை சந்தித்ததன் மூலம் இலங்கை அணி தனது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் மோசமான ஆட்டத் திறனை வெளிக்காட்டியுள்ளது.

இலங்கை அணி இந்த ஆண்டில் இதுவரை விளையாடிய 16 ஒரு நாள் போட்டிகளில், நான்கில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது. 11 போட்டிகளில் தோல்வியையே சந்தித்தது. அதாவது கடந்த மூன்று தசாப்தங்களில் இலங்கை அணியின் மோசமான பெறுபேறாகவே இது உள்ளது.  

உலகை இலங்கையின் பக்கம் திரும்ப வைத்த ஜிம்பாப்வேயின் வரலாற்று வெற்றி

இதுவரை இலங்கை அணியுடன் ஐந்து ஒரு நாள் போட்டித் தொடர்களை…

கடந்த 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு முன்னர் இருந்த அனுபவம் இல்லாத இலங்கை அணியின் ஆட்டத் திறனுக்கு ஒப்பாகவே இந்த ஆண்டில் இலங்கை ஒரு நாள் அணியின் ஆட்டங்கள் இருந்து வருகின்றன.  

இந்த ஆண்டில் இலங்கை ஒரு நாள் அணியின் வெற்றி தோல்வி விகிதம் 0.363 ஆகும். இது அணியின் மூன்றாவது மிக மோசமான வெற்றி தோல்வி விகிதமாகும். இதன் முதல் இரண்டு இடங்களிலும் 1985ஆம் மற்றும் 1988ஆம் ஆண்டுகளின் இலங்கை அணியின் வெற்றி தோல்வி விகிதங்களே உள்ளன.

தவிர, இலங்கை அணிக்கு தனது சொந்த மண்ணில் தொடர்ச்சியாக மூன்றாவது ஒரு நாள் தொடரிலும் வெற்றி பெற முடியாமல் போயுள்ளது. கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவுடனான தொடரை 1-4 என தோல்வியுற்ற இலங்கை, இந்த ஆண்டு மார்ச்சில் பங்களாதேஷுடனான தொடரை 1-1 என சமநிலையிலேயே முடித்தது.

இந்நிலையில் இப்போது, தரப்படுத்தலில் 11ஆவது இடத்தில் உள்ள ஜிம்பாப்வே அணியிடம் 2-3 என தொடர் தோல்வியை சந்தித்து gலரதும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது இலங்கை அணி.  

கடைசியாக 2007ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியிலேயே இலங்கைக்கு தனது சொந்த மண்ணில் தொடர்ந்து மூன்று தொடர்களில் வெற்றி பெற முடியாமல் போனது. அப்போது இங்கிலாந்திடம் தோற்ற இலங்கை, இந்தியாவிடம் இரு தொடர்களை இழந்தது.  

இலங்கை அணியை சொந்த மண்ணில் வீழ்த்தி கிண்ணத்தை வெல்வதற்கு முன்னர், ஜிம்பாப்வே அணி 2009ஆம் ஆண்டிலேயே தமது நாட்டுக்கு வெளியில் ஒரு நாள் தொடர் ஒன்றை வென்றது. அது கென்யாவுக்கு எதிராகவாகும்.  

இதற்கு இடைப்பட்ட காலத்தில் அந்த அணி வெளிநாட்டு மண்ணில் 12 இரு தரப்பு ஒருநாள் தொடர்களில் விளையாடி உள்ள. அதில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோற்ற ஜிம்பாப்வே, ஸ்கொட்லாந்துக்கு எதிரான தொடரைக் கூட வெல்ல முடியாமல் சமன் செய்தது. அதேபோன்று பங்களாதேஷிடம் நான்கு தொடர் தோல்விகளை சந்தித்தது.

எனது கிரிக்கெட் வாழ்வில் மோசமான தருணம் இது : மெதிவ்ஸ்

ஜிம்பாப்வேக்கு எதிராக சொந்த மண்ணில் ஒருநாள் தொடரில் பெற்ற தோல்வி யானது…

இதன்படி பார்த்தால் ஜிம்பாப்வே அணி முழு அங்கத்துவ நாடொன்றுக்கு எதிராக வெளிநாட்டு மண்ணில் 2001ஆம் ஆண்டுக்குப் பின்னரே தொடர் வெற்றி ஒன்றை பெற்றுள்ளது. அது பங்களாதேஷுக்கு எதிராக பெற்ற தொடர் வெற்றியாகும்.

அந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான தொடரிலும் ஜிம்பாப்வே 2-1 என வெற்றியீட்டி இருந்தது. அந்த வகையில், இலங்கையுடனான இந்த தொடர் வெற்றியானது ஜிம்பாப்வே அணி முழு அங்கத்துவ நாடுகளுக்கு எதிராக இதுவரை மொத்தமாக விளையாடிய 29 ஒரு நாள் தொடர்களில் பெற்ற மூன்றாவது தொடர் வெற்றியாகும்.