இலங்கை – பங்களாதேஷ் கிரிக்கெட் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரினை அடுத்து பங்களாதேஷ் டெஸ்ட் தலைவராக செயற்படும் நஜ்முல் ஹொசைன் ஷன்டோ குறிப்பிட்ட பதவியினை இராஜினமா செய்ய எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>>WATCH – மேஜர் கழக T20 தொடரில் அதிரடி காட்டிய விஷேன் ஹலம்பகே! | Sports Field<<
நஜ்முல் ஹொசைன் தனது டெஸ்ட் தலைவர் இராஜினமா முடிவு தொடர்பில் விரைவில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
குறிப்பாக நம்பக் கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் பின்னர் நஜ்முல் ஹொசைனின் முடிவு வெளியிடப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
ஏற்கனவே பங்களாதேஷின் T20I அணித் தலைவர் பதவியில் இருந்து இருந்து விலகிய ஷன்டோ, தனது துடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவினை மேற்கொண்டதாக தெரிவித்திருந்தார். எனினும் அவரின் ஒருநாள் அணித்தலைவர் பதவியும் அதன் பின்னர் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) மூலம் பறிக்கப்பட்டிருந்தது.
விடயங்கள் இவ்வாறு மாறியதே ஷன்டோ டெஸ்ட் தலைவர் பதவியில் இருந்தும் விலக காரணமாக இருக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<