இதுவரை இலங்கை அணியுடன் ஐந்து ஒரு நாள் போட்டித் தொடர்களை எதிர்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி  அவை அனைத்திலும் தோல்வியுற்ற நிலையில், முதல் தடவையாக அதுவும் இலங்கை மண்ணிலேயே இலங்கை அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 3-2 என்ற அடிப்படையில் வெற்றியீட்டி  தமது கிரிக்கெட் வரலாற்றில் புதிய சரித்திரத்தை பதிவு செய்தது.

இத் தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் கடும் போட்டிக்கு மத்தியில் தலா இரண்டு போட்டிகளை வென்று தொடரை சமநிலைப்படுத்தியுள்ள நிலையில், தொடரை வெற்றியீட்டுவதற்கு கட்டாயம் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற சூழ்நிலையில் தோல்வியை தவிர்த்துக் கொள்வதற்காக இலங்கை அணியும், வரலாற்று வெற்றியை பதிவு செய்யும் எதிர்பார்ப்பில் ஜிம்பாப்வே அணியும் இந்தப் போட்டியில் களமிறங்கின.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணித் தலைவர் கிரேம் கிரீமர்  முதலில் களத்  தடுப்பை தெரிவு செய்தார்.  இந்த போட்டிக்காக ஜிம்பாப்வே அணியில் எவ்விதமான மாற்றங்களும் செய்யப்படாத நிலையில், இலங்கை அணி சார்பாக இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவை அதிர வைத்த எவின் லுவிஸ் : T-20 தொடரை வென்றது மேற்கிந்திய தீவுகள்

இந்தியாவுக்கு எதிரான ஒரே ஒரு T-20 போட்டியில் எவின் லுவிஸின் அதிரடி சதத்தின்…

கடந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய அசித்த பெர்னாண்டோ மற்றும் சூழல் பந்து வீச்சாளர் லக்ஷன் சண்டகனுக்கு பதிலாக அனுபவ வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகர மற்றும் அகில தனஞ்சய இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் இலங்கை அணி முதலாவது விக்கெட்டினை இரண்டாவது ஓவரிலேயே வெறும் மூன்று ஓட்டங்களுக்கு பறி கொடுத்தது. கடந்த இரு போட்டிகளிலும் அடுத்தடுத்து சதங்களை விளாசியிருந்த நிரோஷன் திக்வெல்ல, டெண்டாய் சட்டராவின் அபார பந்து வீச்சின் மூலம் விக்கெட் காப்பாளர் பீட்டர் மூர்ரிடம் பிடி கொடுத்து ஓய்வறை திரும்பினார்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் மற்றும் உபுல் தரங்க ஆகியோர் ஜிம்பாப்வே அணியின் நேர்த்தியான பந்து வீச்சில் முறையே 1 மற்றும் 6 ஓட்டங்களுடன் களத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இக்கட்டான சூழ்நிலையில் தனுஷ்க குணதிலக்கவுடன் இணைந்து கொண்ட அஞ்செலோ மெதிவ்ஸ், நான்காவது விக்கெட்டுக்காக 47 ஓட்டங்களை பெற்ற நிலையில், அணித் தலைவர் கிரேம் கிரீமரின் சூழல் பந்து வீச்சில், ஹமில்டன் மசகட்சாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

எனினும் மறுமுனையில், இந்த போட்டித் தொடரில் ஆகக்கூடிய ஓட்டங்களை குவித்துள்ள தனுஷ்க குணாதிலக்க நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைச் சதம் கடந்த போதிலும், துரதிஷ்டவசமாக சீன் வில்லியம்ஸ்சின் பந்து வீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதனையடுத்து களமிறங்கிய பின்வரிசை  துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்து வெளியேறிய போதிலும் இறுதிவரை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய அதிரடித் துடுப்பாட்ட வீரர் அசேல குணரத்ன நான்கு பௌண்டரிகள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களையும், அவருக்கு ஓட்டங்களை பெறுவதற்கு பங்களிப்பு வழங்கிய துஷ்மந்த சமீரா 18 ஓட்டங்களையும் பதிவு செய்து இலங்கை அணியின்  ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

அதேநேரம், இலங்கை அணியின் ஓட்டங்களை கட்டுப்படுத்திய சிக்கந்தர் ராஷா மற்றும் அணித் தலைவர் கிரேம் கிரீமர் ஆகியோர் முறையே 3 மற்றும் 2      விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அந்த வகையில் குறித்த 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 என்ற ஓரளவு வலுவான ஓட்ட எண்ணிக்கையை இலங்கை அணியினர் பெற்றுக்கொண்டனர்.

அதனையடுத்து, 204 என்ற ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான சொலமன் மிர் மற்றும் ஹமில்டன் மசகட்சா ஆகியோரின் இணைப்பாட்டம் மூலம் முதல் விக்கெட்டுக்காக 92 ஓட்டங்களை  பெற்று சிறந்த அடித்தளத்தை இட்டுக்கொண்டது.  

மெதிவ்சின் தலைமைப் பதவியின் நீடிப்பில் சந்தேகம்

பகுதி நேர பந்து வீச்சாளர் அசேல குணரத்ன, சொலமன் மிர்ரின் விக்கெட்டினை நேரடியாக LBW முறையில் ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் இலங்கை அணிக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்த இந்த இணைப்பாட்டத்தினை முடிவுக்கு கொண்டு வந்தார். எனினும் அதனையடுத்து களமிறங்கிய தர்சிஸ் முசகந்தா, ஹமில்டன் மசகட்சாவுடன் இணைந்து மேலும் 45 ஓட்டங்களை பெற்று அணியின் ஓட்டங்களை உயர்த்தினர்.

சிறப்பாக துடுப்பாடிய ஹமில்டன் மசகட்சா, 9 பௌண்டரிகள் உள்ளடங்கலாக 73 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், லசித் மாலிங்கவின் பந்து வீச்சில், துரதிஷ்டவசமாக நுவான் குலசேகரவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதனையடுத்து களமிறங்கிய துடுப்பாட்ட வீரர்களை, ஐந்து வருடங்களுக்கு பின்னர் அணியில் இடம் பிடித்திருந்த அகில தனஞ்சய தனது அபார சூழல் பந்து வீச்சினால் அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து ஜிம்பாப்வே அணிக்கு நெருக்கடி அளித்ததோடு போட்டியின் தன்மையை மாற்றினார்.

இந்நிலையில் களமிறங்கிய சகலதுறை ஆட்டக்காரர் சிக்கந்தர் ரஷா 27 பந்துகளில்  ஒரு பௌண்டரி  மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 27 ஓட்டங்களை விளாசி அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். அதேநேரம், மறுமுனையில் துடுப்பாடிய ஜிம்பாப்வே அணித் தலைவர் கிரேம் கிரீமர் தனது விக்கெட்டினை பாதுகாத்துக்கொண்டதுடன் 11 ஓட்டங்களைப் பெற்று சிக்கந்தர் ரஷாவுக்கு ஓட்டங்களை பெற்றுக்கொள்வதற்கு பங்களிப்பு வழங்கினார்.

அந்த வகையில், 11.5 ஓவர்கள் எஞ்சிய நிலையில் குறித்த வெற்றி இலக்கை எட்டிய அவ்வணி, மூன்று விக்கெட்டுகளால் வெற்றியீட்டி இலங்கை அணியுடனான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரை முதல் தடவையாக, இலங்கை அணியின் சொந்த மண்ணிலேயே அவர்களை வீழ்த்தி வரலாற்று சாதனை வெற்றியைப் பெற்றது.  

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய குழாம் அறிவிப்பு

இன்றைய போட்டியின் 21 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை பெற்றதுடன் ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களையும் விளாசி அணியின் வெற்றிக்கு பெரிதும் பங்காற்றிய சிக்கந்தர் ரஷா ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார். தொடரின் நாயகனாக, ஹமில்டன் மசகட்சா தெரிவு செய்யப்பட்டார்.

இவ்விரு அணிகளுக்குமிடையிலான ஒரே ஒரு போட்டியைக் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஜூலை 14ஆம் திகதி கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

Sri Lanka - BattingToss: Zimbabwe
Niroshan Dickwellac Moor b Chatara3 (8)
Danushka GunathilakaLBW b Williams52 (86)
Kusal Mendisc Cremer b Raza1 (8)
Upul Tharangab Raza6 (9)
Angelo Mathewsc Masakadza b Cremer24 (47)
Asela GunarathneNot Out59* (81)
Wanindu Hasarangac Cremer b Raza0 (5)
Nuwan Kulasekarab Cremer5 (5)
Akila Dananjayac Musakanda b Waller7 (20)
Dushmantha ChameeraNot Out18* (31)
Lasith Malinga
TotalExtras (28)203/8 (50 overs)
Zimbabwe - BowlingOMRW
Sikandar Raza101213
Tendai Chatara91491
Graeme Cremer101232
Christopher Mpofu60360
Sean Williams100411
Malcolm Waller50211
Zimbabwe - BattingToss: Zimbabwe
Hamilton Masakadzac Kulasekara b Malinga73 (86)
Solomon Mireb Gunaratne43 (32)
Tarisai Musakandac Hasaranga b Dananjaya37 (49)
Craig ErvineLBW b Dananjaya2 (6)
Sean Williamsc Mendis b Dananjaya2 (7)
Sikandar RazaNot Out 27 (27)
Malcolm Wallerc & b Malinga1 (3)
PJ Moorc Mendis b Dananjaya1 (7)
Graeme CremerNot Out11 (13)
Christopher Mpofu
Tendai Chatara
TotalExtras (7)204/7 (38.1 Overs)
Sri Lanka - BowlingOMRW
Lasith Malinga100442
Nuwan Kulasekara30250
Asela Gunaratne40231
Akila Dananjaya101474
Wanindu Hasaranga6.10450
Dushmantha Chameera41160
Danushka Gunathilaka1020