ஜிம்பாப்வே – இரண்டாவது டெஸ்டில் வெளியேறும் கேசவ் மஹராஜ்

35
Keshav Maharaj

ஜிம்பாப்வே – தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து முன்னணி சுழல்பந்துவீச்சாளரும், தற்காலிக அணித்தலைவருவமான கேசவ் மஹராஜ் விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

>>அபார வெற்றியுடன் ஒருநாள் தொடரில் முன்னிலை அடைந்த இலங்கை<<

ஜிம்பாப்வே சென்றிருக்கும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியானது அங்கே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இந்த வார ஆரம்பத்தில் நிறைவடைந்து தென்னாபிரிக்கா அதில் 328 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றிருந்தது 

விடயங்கள் இவ்வாறு காணப்பட்டிருக்கும் நிலையிலையே கேசவ் மஹராஜ் ஞாயிற்றுக்கிழமை (06) ஆரம்பமாகும் தொடரின் தீர்மானமிக்க இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேசவ் மஹராஜிற்கு புலவாயோவில் நடைபெற்றிருந்த முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது தொடைத்தசை உபாதை ஏற்பட்டிருந்ததே அவர் இரண்டாவது போட்டியில் நீங்கியமைக்கு முக்கிய காரணமாகும் 

அதேவேளை மஹராஜின் பிரதியீட்டு வீரராக தென்னாபிரிக்க அணியானது சேனுரன் முத்துசாமியினை தமது குழாத்தில் இணைத்துள்ளது. அதேநேரம் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணியின் தலைவராக கேசவ் மஹராஜிற்குப் பதிலாக வியான் முல்டர் செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<