சர்வதேச டி20 யில் பும்ராவின் சாதனையை இலகுவாக தகர்த்த சஹால்

75

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று (10) நடைபெற்ற மூன்றாவது டி20 சர்வதேச போட்டியில் மஹ்மதுல்லாஹ்வின் விக்கெட்டை கைப்பற்றிய யுஸ்வேந்திர சஹால், டி20 சர்வதேச அரங்கில் வேகமாக 50 விக்கெட்டுக்களை கைப்பற்றிய இந்திய வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். 

சஹாரின் சாதனை பந்துவீச்சு மூலம் டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா

தீபக் சஹாரின் ஹெட்ரிக் விக்கெட் உட்பட………..

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய இரு தொடர்களில் பங்கேற்கிறது. முதல் தொடரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் நேற்றுடன் நிறைவுக்குவந்த நிலையில் தொடரை இந்திய அணி 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது

இப்போட்டியில் இந்திய அணி சார்பாக விளையாடிய முக்கிய சுழற்பந்துவீச்சாளரான யுஸ்வேந்திர சஹால் தான் வீசிய நான்கு ஓவர்களில் 43 ஓட்டங்களை கொடுத்து போல்ட் முறையில் பங்களாதேஷ் அணித்தலைவர் மஹ்மதுல்லாஹ்வின் விக்கெட்டை கைப்பற்றினார்.

தனது 34ஆவது டி20 சர்வதேச போட்டியில் விளையாடி இவ்வாறு ஒரு விக்கெட்டை கைப்பற்றிய யுஸ்வேந்திர சஹால் டி20 சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் தனது 50ஆவது விக்கெட்டை கைப்பற்றினார். இந்த 50 விக்கெட்டுக்களின் மூலம் இந்திய அணியின் நம்பிக்கைக்குறிய வேகப் பந்துவீச்சாளரான ஜெஸ்பிரிட் பும்ராவின் சாதனையை யுஸ்வேந்திர சஹால் இலகுவாக தகர்த்துள்ளார்

டி20 சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதி வேகமாக 50 விக்கெட்டுக்களை கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் இவ்வாறு யுஸ்வேந்திர சஹால் முதலிடம் பிடித்துள்ளார். இதற்கு முன்னர் ஜெஸ்பிரிட் பும்ரா 41 டி20 சர்வதேச போட்டிகளில் 50 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். தற்போது யுஸ்வேந்திர சஹால் 34 போட்டிகளிலேயே கைப்பற்றி குறித்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்

டி20 அரங்கில் அவுஸ்திரேலியாவின் உலக சாதனையை முறியடித்த இந்திய அணி

பங்களாதேஷ் அணிக்கு எதிரான………..

மேலும், டி20 சர்வதேச போட்டிகளில் வேகமாக 50 விக்கெட்டுக்களை கைப்பற்றிய அனைத்து பந்துவீச்சாளர்கள் வரிசையில், 34 போட்டிகளில் கடந்த யுஸ்வேந்திர சஹால் ஐந்தாமிடத்தை பிடித்துள்ளார். இதில் ஜெஸ்பிரிட் பும்ரா 12ஆவது இடத்தில் காணப்படுகின்றார்

குறித்த பட்டியலின் முதலிடத்தில், கடந்த 2012ஆம் ஆண்டு வெறும் 26 போட்டிகளில் கைப்பற்றி இன்று முழு கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ள இலங்கையின் மாயாஜால சுழல் ஜாம்பவான் அஜந்த மெண்டிஸ் காணப்படுகின்றார். மெண்டிஸை தொடர்ந்து 31 போட்டிகளில் 50 விக்கெட்டுக்களை கைப்பற்றிய ஆப்கானிஸ்தானின் ரஷீட் கான், தென்னாபிரிக்காவின் இம்ரான் தாஹிர் ஆகியோர் இரண்டாமிடத்தில் காணப்படுகின்றனர்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<