கொரோனாவால் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரும் ஒத்திவைப்பு

61

வீதி பாதுகாப்பு தொடர்பான அவதானத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்தியாவில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் (Road Safety World Series) T20 கிரிக்கெட் தொடர் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திகதிகள் அறிவிக்கப்படாமல் பிற்போடப்பட்டுள்ளது. 

கொரோனா பீதி: ஆசிய பதினொருவர் – உலக பதினொருவர் போட்டி ஒத்திவைப்பு!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக …

கொரோனா வைரஸின் தாக்கத்தின் காரணமாக போட்டித் தொடர் பிற்போடப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் மே அல்லது ஒக்டோபர் மாதங்களில் தொடர் நடத்தப்படலாம் எனவும் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 

சர்வதேச கிரிக்கெட்டில் ஜாம்பவான்களாக விளங்கிய முன்னாள் வீரர்களை உள்ளடக்கி, மாபெரும் கிரிக்கெட் தொடர் ஒன்றை இந்திய நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. இதில், இலங்கை லெஜண்ட்ஸ் அணி உட்பட, இந்தியா, தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் லெஜண்ட்ஸ் அணிகள் என 5 அணிகள் விளையாடி வந்தன.

தொடரில் முதல் நான்கு போட்டிகள் நிறைவடைந்திருந்தன. எனினும், கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக போட்டிகள் தினத்தை பிற்போட முடிவுசெய்ததுடன், ரசிகர்கள் இல்லாமல் போட்டி நடத்துவதற்குமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. 

எனினும், கொரோனா வைரஸின் அதீத தாக்கம் காரணமாக சர்வதேச போட்டிகள் என பல்வேறு போட்டிகள் பிற்போடப்பட்ட காரணத்தால், வீரர்களின் உடல் நலனை கருத்திற்கொண்டு தொடர் திகதிகள் அறிவிக்கப்படாமல் பிற்போடப்பட்டுள்ளது.

கொரோனா பீதி: ஆசிய பதினொருவர் – உலக பதினொருவர் போட்டி ஒத்திவைப்பு!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ….

அத்துடன், தொடரில் பங்கேற்றிருந்த வீரர்களும் அவர்களுடைய சொந்த நாடுகளுக்கு திரும்பியுள்ளதுடன், வீரர்களிடம் கலந்துரையாடிய பின்னர், போட்டிகள் நடைபெறும் தினங்கள் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடரில் இலங்கை சார்பில் பங்கேற்ற, இலங்கை லெஜண்ட்ஸ் அணியினர் முதல் போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியதுடன், இரண்டாவது போட்டியில் இந்திய அணியிடம் தோல்வியடைந்திருந்தது.

கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் நடைபெறவிருந்த முன்னணி பாடசாலைகளுக்கு இடையிலான பெரும் சமர் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஏப்ரல் 20ம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<