ஓட்ட மழை பொழிந்த போட்டியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி

666
Image Courtesy - AFC

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 4ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஓட்ட மழை பொழிந்த இங்கிலந்து அணி 29 ஓட்டங்களால் த்ரில் வெற்றி ஒன்றை பெற்றது.  

இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு தற்பொழுது ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. இந்நிலையில் தொடரின் 4ஆவது போட்டி சென். ஜோர்ஜ்ஸ் அரங்கில் இடம்பெற்றது.

திரில் வெற்றியை சுவைத்த மேற்கிந்திய தீவுகள்

இங்கிலாந்துடனான இரண்டாவது ஒருநாள் ….

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து பெற்ற 418 ஓட்டங்களையும் கிறிஸ் கெயிலின் அதரடியால் அதேவேகத்தில் துரத்திய மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றியை  நெருங்கிய நிலையில் ஆதில் ரஷீத் ஐந்து பந்துகளில் கடைசி நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து வெற்றியை உறுதி செய்து கொண்டது.  

கிரெனடாவில் இலங்கை நேரப்படி இன்று (28) அதிகாலை முடிவுற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இங்கிலாந்து அணிக்கு இயன் மோர்கன் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் 4 ஆவது விக்கெட்டுக்கு 124 பந்துகளில் 204 ஓட்ட இணைப்பாட்டத்தை பெற்றனர்.

ஒருநாள் போட்டிகளில் தனது அதிகூடிய ஓட்டங்களை பெற்ற பட்லர் 77 பந்துகளில் 150 ஓட்டங்களை விளாசினார். இதில் 13 பௌண்டரிகள் மற்றும் 12 சிக்ஸர்கள் அடங்கும். மறுபுறம் அணித்தலைவர் மோர்கன் 88 பந்துகளில் 103 ஓட்டங்களை பெற்றார்.

இதன்மூலம் இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டிகளில் தனது 3ஆவது அதிகூடிய ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் கடைசி 10 ஓவர்களுக்கும் 154 ஓட்டங்கள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பின்னர், 419 ஓட்டம் என்ற இமாலய வெற்றி இலக்குடன் பதிலெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்திய தீவுகளின் கெயில் வாண வேடிக்கை காட்டினார். 14 சிக்ஸர்கள் விளாசிய அவர் 97 பந்துகளில் 162 ஓட்டங்களை குவித்தார்.    

16 ஓவர்கள் எஞ்சியிருந்தபோது பென் ஸ்டொக்ஸ்சின் பந்தில் கெயில் ஆட்டமிழந்ததை அடுத்து போட்டி இங்கிலாந்து பக்கம் திரும்பியது. எனினும், கார்லஸ் பிரத்வெயிட் மற்றும் ஆஷ்லி நேர்ஸ் அதிவேகமாக 88 ஓட்ட இணைப்பாட்டத்தை பெற்று தொடர்ந்து அந்த இமாலய இலக்கை எட்டுவதற்கு முயன்றனர்.  

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி 18 பந்துகளுக்கு 32 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் 48 ஆவது ஓவரை வீச வந்த ஆடில் ரஷீத், பிரத்வெயிட் (36 பந்துகளில் 50) மற்றும் நேர்ஸ் (41 பந்துகளில் 43) ஆகியோரின் விக்கெட்டை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தியதோடு தொடர்ந்து ஒரு பந்து கழித்து கடைசி இரண்டு விக்கெட்டுகளையும் பதம்பார்த்தார்.

கடைசியில் மேற்கிந்திய தீவுகள் அணி 48 ஓவர்களில் 389 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. 88 ஓட்டங்களை விட்டுக்கொடுத்த ரஷீத் 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

மேற்கிந்திய தீவுகளுடனான T20 தொடரிலிருந்து விலகும் மொயின் அலி

இங்கிலாந்து அணியின் சகலதுறை துடுப்பாட்ட ……

இந்த வெற்றியுடன் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான 5ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் சனிக்கிழமை (02) செயின்ட் லூசியாவில் நடைபெறும்.

இந்த போட்டியில் பெறப்பட்ட ஏனைய சாதனைகள்

  • மொத்த 46 சிக்ஸர்கள் விளாசப்பட்டன. இது ஒருநாள் போட்டி ஒன்றில் அதிகமாக பெறப்பட்ட சிக்ஸர்களாகும்.
  • இங்கிலாந்து அணி மொத்தம் 24 சிக்ஸர்களை விளாசி ஒருநாள் இன்னிங்ஸ் ஒன்றில் அதிகூடிய சிக்ஸர்கள் பெற்ற அணியாக சாதனை படைத்தது.  
  • இந்தப் போட்டியில் மொத்தமாக 807 ஓட்டங்கள் சேர்க்கப்பட்டன. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பெறப்பட்ட அதிகூடிய ஒட்டுமொத்த ஓட்டங்கள் இதுவாகும்.
  • ஜோஸ் பட்லர் தனது அரைச்சதத்தில் இருந்து 150 ஓட்டங்களை பெறுவதற்கு 31 பந்துகளையே எடுத்துக் கொண்டார். தொன்னாபிரிக்காவின் ஏபி டி விலியர்ஸ் ஒருநாள் போட்டியில் அதிவேக சதம் பெறுவதற்கு எடுத்துக் கொண்டதும் 31 பந்துகள் தான்.

கேமர் ரோச்சிற்கு பதிலாக மேற்கிந்திய தீவுகள் ஒரு நாள் அணியில் அன்ரூ ரசல்

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய ……

  • கெயில் 51 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். ஒருநாள் போட்டிகளில் அவரது அதிவேக சதம் இதுதான்.   
  • இதன்மூலம் பிரைன் லாராவை தொடர்ந்து 10,000 ஒருநாள் ஓட்டங்களை பெற்ற இரண்டாவது மேற்கிந்திய தீவுகள் வீரராகவும் கெயில் பதிவானர்.
  • இயன் மோர்கன் 6,000 ஒருநாள் ஓட்டங்களை பெற்ற முதல் இங்கிலாந்து வீரராகவும் சாதனை படைத்தார்.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து – 418/6 (50) – ஜோஸ் பட்லர் 150, இயன் மோர்கன் 103, அலெக்ஸ் ஹேல்ஸ் 82, ஜொன்னி பேஸ்டோ 56, கார்லஸ் பிரத்வெயிட் 2/62, ஒஷேன் தோமஸ் 2/84

மேற்கிந்திய தீவுகள் – 389 (48) – கிறிஸ் கெயில் 162, டெரன் பிராவே 61, கார்லஸ் பிரத்வெயிட் 50, ஆஷ்லி நேர்ஸ் 43, ஆதில் ரஷீத் 5/85, மார்க் வூட் 4/60

முடிவு இங்கிலாந்து 29 ஓட்டங்களால் வெற்றி   

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<