மேற்கிந்திய தீவுகளுடனான T20 தொடரிலிருந்து விலகும் மொயின் அலி

269
 

இங்கிலாந்து அணியின் சகலதுறை துடுப்பாட்ட வீரரான மொயின் அலி, இந்தப் பருவகாலத்திற்கான இந்திய பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) T20 தொடரில் ஆடும் நோக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான T20 தொடரிலிருந்து விலகியிருக்கின்றார்.

கேமர் ரோச்சிற்கு பதிலாக மேற்கிந்திய தீவுகள் ஒரு நாள் அணியில் அன்ரூ ரசல்

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய ….

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுடன் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T20 என மூவகைப் போட்டிகள் கொண்ட தொடர்களிலும் ஆடி வருகின்றது.

இந்த சுற்றுப் பயணத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடர், ஒரு நாள் தொடர் மற்றும் T20 தொடர் ஆகிய மூன்றிலும் இங்கிலாந்து அணியில் பெயரிடப்பட்டிருந்த மொயின் அலி, மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ஒரு நாள் தொடர் நிறைவடைந்த பின்னர் T20 தொடரில் ஆடாமல் ஐ.பி.எல். T20 தொடரில் ஆடும் நோக்குடன் இங்கிலாந்து அணியில் இருந்து விலகி தாயகம் பயணமாகுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி, மேற்கிந்திய தீவுகள் அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நிறைவடைந்த பின்னர் தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த இரு தொடர்களையும் அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் நடைபெறுகின்றது.

இங்கிலாந்து அணிக்காக இந்தப் பருவகாலத்தில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரராக இருக்கும் மொயின் அலி, ஜ.பி.எல். தொடரில் இந்த ஆண்டு றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடவிருக்கின்றார். ஜ.பி.எல். T20 தொடர் இந்த ஆண்டின் மார்ச் மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

மொயின் அலியுடன் சேர்த்து ஐ.பி.எல். T20 போட்டிகளில் விளையாட ஏனைய இங்கிலாந்து வீரர்களான பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரும் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான T20 தொடரில் இருந்து விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது. பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகிய இருவரும் ஐ.பி.எல். T20 தொடரில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகியிருக்கின்றனர்.

இதேநேரம் மேற்கிந்திய தீவுகளுடனான T20 தொடரில் மொயின் அலியின் வெற்றிடத்தினை நிரப்ப, இளம் பந்துவீச்சு சகலதுறை வீரரான சேம் கர்ரன் இங்கிலாந்து அணிக்கு அழைக்கப்பட்டிருக்கின்றார்.

திரில் வெற்றியை சுவைத்த மேற்கிந்திய தீவுகள்

மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்றிருந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்காக ஆடிய கர்ரன், தற்போது மேற்கிந்திய தீவுகளில்  இடம்பெற்று வருகின்ற ஒரு நாள் தொடரில் இடம்பெற்றிருக்கவில்லை. அதேநேரம் சேம் கர்ரன் இந்த ஆண்டு இடம்பெறும் ஐ.பி.எல். T20 தொடரிலும்  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து அணிகள் இடையிலான  மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 05ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

இங்கிலாந்து T20 குழாம் – இயன் மோர்கன் (அணித்தலைவர்), மொயின் அலி, ஜொனி பெயர்ஸ்டோவ், சேம் பில்லிங்ஸ், டொம் கர்ரன், ஜோ டென்லி, அலெக்ஸ் ஹேல்ஸ், கிரிஸ் ஜோர்டன், டேவிட் மலன், லியம் பிலங்கட், ஆதில் ரஷீட், ஜோ ரூட், டேவிட் வில்லி, மார்க் வூட்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<