சகலதுறையிலும் பிரகாசித்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஒருநாள் தொடர் வெற்றி

47
Image Courtesy : Afghanistan Cricket Board‏
 

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக லக்னோவில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் நிகொலஸ் பூரான், எவின் லிவிஸின் பொறுப்பான ஆட்டம் மற்றும் ஷெல்டன் கொட்ரெல், ரொஸ்டன் சேஸ் மற்றும் ஹெய்டின் வோல்ஷ் ஆகியோரது அபார பந்துவீச்சினால் மேற்கிந்திய தீவுகள் அணி 47 ஓட்டங்களினால் வெற்றிபெற்று ஒருநாள் தொடரை 2 – 0 என கைப்பற்றியது.

மேற்கிந்திய தீவுகள்ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே மூன்று ஒருநாள் போட்டி, மூன்று டி20 மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்று வருகிறது.

பஞ்சாப் அணியிலிருந்து விடைபெறும் அஸ்வின்!

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்….

நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வென்றது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லக்னோவில் நடைபெற்றது

பகல்இரவு போட்டியாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் ஷீத் கான் நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக ஷாய் ஹோப் மற்றும் எவின் லிவிஸ் இருவரும் நிலைத்து நின்று ஆடி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர்

அந்த அணி 98 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஷாய் ஹோப் 43 ஓட்டங்களை எடுத்து ஷீத் கானின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். எவின் லிவிஸ் 75 பந்துகளில் 6 பௌண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 54 ஓட்டங்களை விளாசிய நிலையில் போல்ட் ஆகி வெளியேறினார். ஒருநாள் போட்டிகளில் எவின் லிவிஸின் 8ஆவது அரைச் சதம் இதுவாகும்.

முதலாவது ஒருநாள் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற ரொஸ்டன் சேஸ் 9 ஓட்டங்களுடனும், சிம்ரொன் ஹெட்மயர் 34 ஓட்டங்களையும் எடுத்து வெளியேறினர்.

தொடர்ந்து வந்த அணித் தலைவர் கிரென் பொல்லார்ட் (3), ஜேசன் ஹோல்ட் (9) சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து தடுமாறியது. எனினும், நிக்கொலஸ் பூரான் மற்றும் ரொமாரியோ செபர்ட் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது.  

ரொஸ்டன் சேஸ், ஷாய் ஹோப்பின் அபாரத்தால் ஆப்கானை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள்

லக்னோவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு…..

இருவரும் இணைந்து 7ஆவது விக்கெட்டுக்காக 50 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ரொமாரியோ ஆட்டமிக்க, அதிரடியாக விளையாடிய நிக்கொலஸ் பூரான் 50 பந்துகளில் 67 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.  

தொடர்ந்து வந்த பின்வரிசை வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுக்க மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 247 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர், 248 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு முதல் ஓவரிலே அதிர்ச்சி காத்திருந்தது. ஷெல்டன் கொட்ரெலின் வீசிய ஓவரின் ஐந்தாவது பந்தில் ஜாவிட் அஹ்மடி ஓட்டமின்றி வெளியேறினார்.

தொடர்ந்து வந்த ரஹ்மத் ஷா, ஹஸ்ரதுல்லாஹ் ஷசாடுடன் இணைந்து ஓட்டக் குவிப்பில் ஈடுபட்டதுடன், அரைச்சத இணைப்பாட்டமொன்றை மேற்கொண்டு ஆப்கானிஸ்தான் அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர்

எனினும், 14ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் ரஹ்மத் ஷா 33 ஓட்டங்களை எடுத்து துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார். ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஹஸ்ரதுல்லாஹ் ஷசாய் (23), ஷெல்டன் கொட்ரெலின் பந்துவீச்சில் ரொஸ்டன் சேஸிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து மத்திய வரிசையில் களமிறங்கிய அஸ்கர் ஆப்கான் (3), இக்ரம் அலிகில் (19) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டழிக்க ஆப்காகிஸ்தான் அணி 109 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

எனினும், ஆறாவது விக்கெட்டுக்காக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நஜிபுல்லாஹ் சத்ரானுடன், மொஹமட் நபி ஜோடி சேர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ஓட்டங்களை குவித்தனர்

நிதானமாக ஓட்டங்களை குவித்த இருவரும் 68 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றுக்கொள்ள, ஹெய்டின் வோல்ஷின் பந்தில் மொஹமட் நபி 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அரைச் சதம் கடந்த நஜிபுல்லாஹ் சத்ரான் 56 ஓட்டங்களுடன் வெளியேறினார்

இதனையடுத்து வந்த பின்வரிசை வீரர்களும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ஆப்காகிஸ்தான் அணி 45.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 200 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

இதன்படி, 47 ஓட்டங்களால் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 2 – 0 என கைப்பற்றியது.

பந்து வீச்சில் ஷெல்டன் கொட்ரெல், ரொஸ்டன் சேஸ் மற்றும் ஹெய்டின் வோல்ஷ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். போட்டியின் ஆட்டநாயகானாக நிகொலஸ் பூரான் தெரிவானார்.

பாகிஸ்தானை இலகுவாக வீழ்த்தி தொடரை வென்ற அவுஸ்திரேலியா!

சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கு எதிராக பேர்த்தில் நடைபெற்ற……

2014ஆம் ஆண்டிற்குப் பிறகு மேற்கிந்திய தீவுகள் அணி பெற்ற முதலாவது ஒருநாள் தொடர் வெற்றி இதுவாகும். குறித்த காலப்பகுதியில் 21 ஒருநாள் தொடர் தோல்விகளை சந்தித்த அந்த அணி கிரென் பொல்லார்ட் தலைமையில் சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் தொடர் வெற்றியினைப் பதிவு செய்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

இதேநேரம், ஒருநாள் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி தொடர்ச்சியாக சந்தித்த 11ஆவது தோல்வி இதுவாகும்

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3ஆவது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் அணி – 247/9 (50) – நிகொலஸ் பூரான் 67, எவின் லிவிஸ் 54, ஷாய் ஹோய் 43, நவீன் உல் ஹக் 3/60

ஆப்கானிஸ்தான் அணி – 200/10 (45.4) – நஜிபுல்லாஹ் சத்ரான் 56, ரஹ்மத் ஷா 33, மொஹமட் நபி 32, ஷெல்டன் கொட்ரெல் 3/29, ரொஸ்டன் சேஸ் 3/30, ஹெய்டின் வோல்ஷ்3/36 

முடிவு மேற்கிந்திய தீவுகள் அணி 47 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<