டயமண்ட் லீக்கில் மீண்டும் யுபுன் அபேகோன்

102

மெய்வல்லுனர் விளையாட்டில் உலகின் முதன்மையான போட்டிகளில் ஒன்றான டயமண்ட் லீக் மெய்வல்லுனர் தொடரில் இரண்டாவது தடவையாக பங்குபற்றுகின்ற வாய்ப்பை இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோன் பெற்றுக்கொண்டுள்ளார். 

இதன்படி, எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ள ஆண்களுக்கான 100 மீட்டர் இறுதிப் போட்டியில் அவர் போட்டியிடவுள்ளார்

டயமண்ட் லீக் பதக்கத்தை மயிரிழையில் தவறவிட்ட யுபுன் அபேகோன்

உலக மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்வருடத்துக்கான டயமண்ட் லீக் மெய்வல்லுனர் தொடரின் 12ஆவதும், இறுதியுமான அத்தியாயம் சுவிட்சர்லாந்தில் சூரிச்சில் இம்மாதம் 8ஆம், 9ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

உலகின் முன்னணி வீரர்கள் மாத்திரம் பங்குபற்றுகின்ற இந்தப் போட்டித் தொடரில் இலங்கை வீரர் யுபுன் அபேகோன் இரண்டாவது தடவையாக பங்குபெறவுள்ளார்

இதுதொடர்பில் யுபுன் அபேகோன் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில்

இது எனக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவம். எனது விளையாட்டு வாழ்க்கையில் மற்றுமொரு மிகப் பெரிய வெற்றியாகும் என குறிப்பிட்டுள்ளார்

முன்னதாக கடந்த ஜூன் மாதம் இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற டயமண்ட் லீக் தொடரின் 3ஆவது அத்தியாயத்தில் யுபுன் அபேகோன் முதல் முறையாக பங்குபற்றினார்.

யுபுன் அபேகோனின் ஒலிம்பிக் எதிர்பார்ப்பும் தகர்ந்தது

இதன்மூலம், இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டு வரலாற்றில் டயமண்ட் லீக் மெய்வல்லுனரில் பங்குபற்றிய முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுக்கொண்டார்

குறித்த தொடரில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 10.16 செக்கன்களில் நிறைவுசெய்த அவர், நூழிலையில் 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை தவறவிட்டார்

எதுஎவ்வாறாயினும், குறித்த போட்டியில் வெளிப்படுத்திய திறமையின் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை அவர் உறுதி செய்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

 மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க…