ஐ.பி.எல். ஏலத்தில் கோடிகளை அள்ளிய வருண் சக்ரவர்த்தி

1190
Image Courtesy- News18.com

சர்வதேச கிரிக்கெட்டில் இரசிகர்கள் மத்தியில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் கிரிக்கெட் வீரராக, ஒரு தமிழ் வீரர் மாறியிருக்கிறார். இதுவரையில் ஒரு சர்வதேச போட்டியிலும் விளையாடியிருக்காத, வெறும் 9 லிஸ்ட் ஏ போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள தமிழ்நாடு வீரர் வருண் சக்ரவர்த்தியின் மீதே கிரிக்கெட் உலகின் கவனம் திரும்பியுள்ளது.  

மீண்டும் மும்பை அணியில் விளையாடவுள்ள லசித் மாலிங்க

இந்தியாவின் ஜெய்பூரில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில், இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்…….

உலகின் முன்னணி கிரிக்கெட் லீக் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் 12வது பருவாகல போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ளன. எனினும், இந்தப் போட்டித் தொடர் மீதான எதிர்பார்ப்பு இம்மாதத்தில் இருந்து இரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. காரணம், கடந்த 18ம் திகதி நடைபெற்ற .பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலம்.

சர்வதேச அரங்கில் நட்சத்திரமாக திகழ்ந்து வரும் முதற்தர கிரிக்கெட் வீரர்கள் உட்பட, பல்வேறு கிரிக்கெட் நட்சத்திரங்கள் .பி.எல். ஏலத்தினை உற்று நோக்கியிருந்தனர். வீரர்களுக்கு கோடிகளை அள்ளி வழங்கும் .பி.எல், இம்முறை சர்வதேசத்திற்கு அறிமுகமில்லாத தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தியை கோடிகளுக்கு சொந்தக்காரராக்கியுள்ளது.

வருண் சக்ரவர்த்திக்கு 20 இலட்சம் ரூபா அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டிருந்த போதும், டெல்லி கெப்பிட்டல், ராஜஸ்தான் ரோயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஷ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் ஏலத்தில் கடும் போட்டி நிலவியிருந்தது. இறுதியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8.4 கோடியை கொடுத்து வருண் சக்ரவர்த்தியை தங்கள் வசப்படுத்தியது.

இவ்வாறு, போட்டிகளுக்கு மத்தியில் ஒரு அறிமுக வீரரை வாங்குவதற்கான காரணம் என்ன? அவரிடம் அப்படி என்ன இருக்கிறது? 8.4 கோடிக்கு அவர் பெறுமதியானவரா? என உங்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்திருக்கலாம். ஆம். நாம் அறியாவிட்டாலும் வருண் மிகச்சிறந்த பந்து வீச்சாளர் என்பதை அணிகள் அறிந்துதான் வைத்திருக்கின்றன. ஒரு ஓவருக்கு ஆறு பந்துகள் மாத்திரமே வீசப்படுகிறது. ஆனால் வருண் சக்ரவர்த்தி 7 வித்தியாசமான பந்துகளை வீசக்கூடிய மாய சுழற்பந்து வீச்சாளர் என்பது எம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

முஸ்தபிசுர் ரஹ்மானுக்கு ஐ.பி.எல். போட்டிகளில் ஆடத் தடை

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து நட்சத்திரமான முஸ்தபிசுர் ரஹ்மான் 2019ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் (IPL) வீரர்கள் ஏலத்தில்…..

.பி.எல். தொடரில் முதன்முறையாக விளையாடவுள்ளதால் இவரை இளம் வீரர் எனவும் கூறமுடியாது. தற்போது 27 வயதாகும் வருண் சக்ரவர்த்தியின் பல வருடகால முயற்சியே இன்றைய தினம் அவர் சர்வதேச கிரிக்கெட்டின் கவனத்தை ஈர்ப்பதற்கான காரணம்.

யார் இந்த வருண் சக்ரவர்த்தி?

தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் 1991ம் ஆண்டு பிறந்த இவர், தனது 13வது வயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார். இவரது கிரிக்கெட் ஆரம்பம் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரராக அமைந்திருந்தது. எனினும், இவரால் தொடர்ந்தும் கிரிக்கெட் விளையாட முடியாமல் போக, தனது கல்வியில் கவனத்தை செலுத்தினார்.

எனினும், இடைக்கிடையில் கிரிக்கெட் விளையாடி வந்த இவருக்கு, வயதெல்லை ரீதியிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இவர் விக்கெட் காப்பு துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க முடியாததால், இடையில் வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரராக தனது பாணியை மாற்றிக்கொண்டார். இதன்போது, இவரது கணுக்காலில் உபாதை ஏற்பட்டதால், வேகப்பந்து வீச்சை விட்டதுடன், கிரிக்கெட்டுக்கும் சிறிய இடைவேளை கொடுத்து, பட்டப்படிப்பை மேற்கொண்டார்.

சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை நிபுணர் பட்டப்படிப்பை நிறைவுசெய்த இவர், மீண்டும் கிரிக்கெட் பக்கம் தனது கவனத்தை திருப்பினார். வேகப்பந்து வீச்சை விடுத்து, இடதுகை சுழற்பந்து வீச்சாளராக மாறினார். பின்னர் சுழற்பந்து வீச்சாளர்கள் கையாளும் வித்தியாசமான பந்துவீச்சு பாணிகளை கற்றுக்கொண்ட இவர் வலப்பக்க சுழல் (Offbreak), இடப்பக்க சுழல் (Legbreak), கூக்லி (Googly), கெரம் போல் (Carrom ball), ப்லிப்பர் (Flipper), டொப் ஸ்பின்னர் (Topspinner) மற்றும் துடுப்பாட்ட வீரர்களின் கால் விரல்களை நோக்கிய யோர்க்கர் பந்து என்பவற்றை வீசும் வல்லமையை தனக்குள் வளர்த்துக்கொண்டார்.

கிரிக்கெட்டுக்காக அவரது கட்டடக்கலை துறையையும் விட்டுவந்த வருண் சக்ரவர்த்தி, தனது தேவைகளுக்காக இடைக்கிடையில் குறும்படங்கள் எடிட்டிங் (Editing) செய்யும் வேலையையும் செய்துவந்தார். இதன் பின்னர், இவ்வருடம் நடைபெற்ற .பி.எல். தொடரில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு வலைப் பந்துவீச்சாளராக வருண் சக்ரவர்த்தி செயற்பட்டார்.  இதில் தினேஷ் கார்த்திக்கின் அழைப்பினை ஏற்று, கொல்கத்தா சென்று வலைப்பந்து வீச்சாளராகவும் செயற்பட்டிருந்தார்.

ஐ.பி.எல் ஏலத்தில் 1003 வீரர்கள் போட்டி; 28 இலங்கை வீரர்கள்

ஐ.பி.எல் தொடரின் 12ஆவது பருவத்துக்கான வீரர்கள் ஏலத்தில் 70 இடங்களுக்கு 1003 வீரர்கள் போட்டியிடவுள்ளதாக ஐ.பி.எல் நிர்வாகம்……

இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைனிடம் சில யுத்திகளை கற்றுக்கொண்டார். அத்துடன், இவர் அதிக நெருக்கமாக இருந்த கிரிக்கெட் வீரர் என்றால், சென்னை அணியில் விளையாடிய தென்னாபிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹீர். பயிற்சியின் போது, இம்ரான் தாஹீர் அதிக பந்துவீச்சு யுத்திகளை கற்றுக்கொடுத்துள்ளார் என்பதை வருண் சக்ரவர்த்தி அண்மையில் தெரிவித்திருந்தார்.

இம்ரான் தாஹீர், இங்கிருந்து பந்துவீச்சு யுத்திகளை வருண் சக்ரவர்த்திக்கு கற்றுக்கொடுத்தது மாத்திரமின்றி, அவருடைய தொலைபேசி இலக்கத்தையும் வருண் சக்ரவர்த்தியிடம் கொடுத்துச் சென்றுள்ளார். இவ்வாறு, சர்வதேச வீரர்களிடம் கற்றுக்கொண்டதை வைத்து, தன்னுடைய தனித் திறமையின் மூலமாக வருண் சக்ரவர்த்தி தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தி, தனது சர்வதேச கிரிக்கெட்டுக்கான அடித்தளத்தை இட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் (TNPL) அசத்தல்

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் விளையாடி வந்த இவர், இவ்வருடம் மதுரை பான்த்தர்ஸ் அணியில் விளையாடியதுடன், அந்த அணி இம்முறை சம்பியன் கிண்ணத்தை வெல்லுவதற்கும் முக்கிய காரணமாக இருந்தார். வருண் சக்ரவர்த்தி விக்கெட்டுகளை வீழ்த்துவதை விடவும், முக்கியமான தருணங்களில் துடுப்பாட்ட வீரர்களை கட்டுப்படுத்தும் திறமையை கைவசம் வைத்திருந்தார்.

இம்முறை நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் மொத்தமாக 40 ஓவர்களை வீசியிருந்த இவர், 125 (Dots) ஓட்டங்கள் இன்றிய பந்துகளை வீசியிருந்தார். கிட்டத்தட்ட இது 20 ஓவர்களுக்கு சமமாவதுடன், இவரது ஓட்டவேகம் வெறும் 4.7 ஆக காணப்பட்டது. T20 போட்டிகளில் இதுபோன்ற ஓட்டவேகங்களை கொண்ட பந்து வீச்சாளர்கள் போட்டிகளில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியவர்களாக பார்க்கப்படுகின்றனர்.

லிஸ்ட் கிரிக்கெட்டில் அபார பந்துவீச்சு

தமிழ்நாடு பிரீமியர் லீக்கினை தொடர்ந்து, முதன்முறையாக தமிழ்நாடு அணியியை பிரதிநிதித்துவப்படுத்தி விஜய் ஹஷாரே கிண்ணத்தில் விளையாடிய வருண் சக்ரவர்த்தி, 9 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில் சேர்விசஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். இந்த பந்துவீச்சு வெளிப்படுத்தலானது, இவரின் .பி.எல். தொடர் வருகைக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

வெளிநாட்டு வீரர்களுக்கு ஏமாற்றத்தை வழங்கவுள்ள ஐ.பி.எல் ஏலம்

உலகின் முன்னணி கிரிக்கெட் லீக் தொடர்களில் ஒன்றான இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரின், அடுத்த பருவகால போட்டிகளுக்கான…….

.பி.எல். தொடரில் சாதிக்க முடியுமா?

சர்வதேச துடுப்பாட்ட வீரர்களுக்கு இதுவரை போட்டிகளில் பந்து வீசியிருக்காத வருண் சக்ரவர்த்தி சாதிப்பார? என்ற கேள்வியும் அனைவர் மத்தியிலும் எழுந்திருக்கிறது. முக்கியமாக 8.4 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்டுள்ள இவர், கட்டாயம் சிறப்பாக செயற்பட வேண்டும் என்ற நிலைக்கு முகங்கொடுத்துள்ளார்.

முக்கியமாக, கடந்த 2015ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த இடதுகை சுழற்பந்து வீச்சாளர் கெ.சி.கரியப்பா கொல்கத்தா அணிக்காக 3.3 கோடிக்காக வாங்கப்பட்டிருந்தார். எனினும் இவரது முதல் ஓவரில் .பி.டி.வில்லியர்ஸ் 28 ஓட்டங்களை விளாசி, அவரின் பந்துவீச்சை சிதைத்திருந்தார். இதன்பின்னர் 2016ம் ஆண்டு தமிழ்நாடு வீரர், முருகன் அஷ்வினை, ரைசிங் பூனே சுப்பர் ஜயன்ஸ் அணி 4.5 கோடிக்கு வாங்கியது. இவரது பந்துவீச்சு அதிகமாக பேசப்பட்டும், .பி.எல். போட்டிகளில் பின்னர் இவர் தொடர்பான எதிர்பார்ப்பு குன்றிவிட்டது.

இந்நிலையில், இம்முறை வருண் சக்ரவர்த்தி என்ற புதிய பெயர் .பி.எல். தொடரில் புகுந்திருக்கிறது. இவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக சாதிப்பாரா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். குறிப்பாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக ரவிச்சந்திரன் அஷ்வின் செயற்படுகிறார். இவர், வருண் சக்ரவர்த்தியின் பந்து வீச்சை அருகில் இருந்து கவனித்து வந்தவர். இதனால் அஷ்வின், வருண் சக்ரவர்த்தியை சிறப்பாக கையாளுவார் என்ற நம்பிக்கை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் எழுந்திருக்கிறது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<